வணக்கம்!  கீழைக்காற்று  அலைகள் (Easterly waves)  வங்காள விரிகுடா வழியாக தமிழ்நாடு மற்றும் இலங்கை நோக்கி பயணிக்கிறது இவை தென் தமிழகத்திற்கு பரவலாக மழை கொடுக்கும் மற்றும் வட தமிழகத்தின் பகுதிகளுக்கு எதிரான  சார்புடன் உள்ளது. 

எனவே இன்று (திங்கள்) சென்னை நகரத்திற்கான முன்னறிவிப்பு.  வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், வெப்பநிலை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக  30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.   மணிக்கு 15 முதல் 30 கிமீ வேகத்தில் வடக்கு- கீழைக்காற்று வீசும்.  மாலை மற்றும் இரவு நேரங்களில் கடந்து செல்லும் மேகங்களால் மழை இருக்கலாம். மற்றபடி இன்று வானம் தெளிவாக இருக்கும்.

சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA /VOMM)

 இன்று காலை 8 மணியளவில் வடமேற்கு திசையில் மணிக்கு 7 கிமீ வேகத்திலும், 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் காற்றுடன் மேகமூட்டம் / மழை பெய்தது. கேளம்பாக்கத்திற்கு தெற்கே கடல் பரப்பில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

கீழைக்காற்றை பொறுத்தவரை  அவை சூறாவளிகள் அல்லது குறைந்த காற்றழுத்த பகுதிகளைப் போலல்லாமல் வேகமாக நகர்ந்து கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக சேதங்களை உருவாக்கும் வல்லமை படைத்தவை. இவை  குறைந்த காற்றழுத்த பகுதிகளை உருவாக்கும் அளவிற்கு சக்திவாய்ந்ததாக இருக்கும்.

எனவே, ஈஸ்டர் அலைகள் வடகிழக்கு பருவமழை காலத்தில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மழை தாங்கும் அமைப்புகளில் ஒன்றாகும், இது மிகப்பெரிய மழை நிகழ்வுகளை உருவாக்குகிறது.   சில பகுதிகளில் வெள்ளம் உள்ளிட்ட கடுமையான வானிலை பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

அமெரிக்க தேசிய வானிலை சேவையின் காலநிலை முன்கணிப்பு மையம் தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கி  ஈஸ்டர் அலை நடவடிக்கைகள் இருக்கும் என கூறுகிறது. இந்த கீழைக்காற்றின் பயணம்  தெற்கு தீபகற்பம் வழியாக உள்நுழைந்து அரபிக்கடல் வழியாக பயணிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

திங்கள் காலை  சென்னைக்கு தெற்கே சேவா நகர், பெரியார் நகர், மறைமலை நகர், செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும்  தென்மேற்க்கில் காஞ்சிபுரம், தேனம்பாக்கம், உத்திரமேரூர்,  வந்தவாசி கிழக்கு ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை மேகங்கள் அணிவகுத்து மழை கொடுத்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி மழையளவு நிலவரம் (செ.மீ): காரைக்கால் -9;  அண்ணா பல்கலைக்கழகம் -5;  தரங்கம்பாடி-4;  அரிமளம்-3;  நன்னிலம்-3;  வேதாரண்யம், டிஜிபி அலுவலகம் (சென்னை), பேராவூரணி -2.

 

 இன்றைய (திங்கட்கிழமை) முன்னறிவிப்பு.

தென்தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது, வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

 நாளை (செவ்வாய்க்கிழமை),  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை இருக்கும்.

 

 புதன்கிழமை மத்திய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  பரவலாக மழை இருக்கும் மற்றும் வியாழக்கிழமை தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை இருக்கலாம். 

 

வெள்ளிக்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும்  பரவலாக மழை இருக்கும்.

 

புதுதில்லி, இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள தேசிய வானிலை முன்னறிவிப்பு. தெற்கு தீபகற்பத்தில்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.  நாளை (செவ்வாய்க்கிழமை) காலை வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.

 

கேரளா, ராயலசீமா, தென் கடலோர ஆந்திரா மற்றும் லட்சத்தீவுகளில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

 

புதுச்சேரி: மழைக்கு 20% வாய்ப்பு

மழைக்கான வாய்ப்பு குறைவு.

புதுச்சேரி இன்று (திங்கள்) பெரும்பாலும் தெளிவான வானிலையே நிலவும். வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.  காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 15 முதல் 30 கி.மீ வேகத்தில் வீசும்.  மாலை அல்லது நள்ளிரவுக்குப் பிறகு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு,  மழைக்கான வாய்ப்பு இரவில் 30 சதவீதமாக உயரும்.

சேலம்: மழைக்கு 20% வாய்ப்பு

இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை.  வெப்பநிலை அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் கிழக்கு-வடகிழக்கு திசையிலிருந்து 10 முதல் 15 கிமீ வரை மிதமான  காற்று வீசக்கூடும்.   பெரும்பாலும் தெளிவான வானிலையே நிலவும்.  மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.

கோவை: மழைக்கு 10% வாய்ப்பு

பகலில் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. இரவில் மழைக்கான வாய்ப்பு 40 சதவீதமாக மேம்படும்.  வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசாக இருக்கும் குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியசாகவும், மணிக்கு 10 முதல் 15 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும்.  மாலை அல்லது நள்ளிரவுக்குப்பின்  அதிகாலை நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உண்டு.

 

திருச்சிராப்பள்ளி: மழைக்கு 30% வாய்ப்பு

பனிமூட்டமான காலை வேளையை தொடர்ந்து  மதியம் அல்லது மாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்.  வடகிழக்கில் இருந்து மணிக்கு சுமார் 15 முதல் 30 கிமீ வேகத்தில் காற்று வீசும், பகல் நேர வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.  மாலை நேர வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாக இருக்கும்.

மதுரை: மழைக்கு 30% வாய்ப்பு

பிற்பகலில் மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.   வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் மற்றும் வடக்கு கீழைக்காற்று மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் வீசும்.  இரவு நேரங்களில் மழைக்கு 20 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது.

 

தூத்துக்குடி: மழைக்கு 60% வாய்ப்பு

ஈரப்பதமான கீழை அலை தென் தமிழகத்திற்கு அதிக மழை வாய்ப்பை தருகிறது. மழை வாய்ப்பு. மாலை அல்லது இரவு நேரங்களில 80 சதவிகிதமாக உயரும். காலை வேளையில் வானம் மேகமூட்டமாகவும் பிற்பகலில் ஒரு சில இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.  இருப்பினும், வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். வடக்கு கீழைக்காற்று மணிக்கு 15 முதல் 30 கிமீ வேகத்தில் வீசும்.

 

 

(மொழிபெயர்ப்பு ஸ்ரீகிருஷ்ணன் பி சி)

comment COMMENT NOW