நாட்டின் வட பகுதிகளில் மேலை  காற்றால்  (western disturbance) குளிர்காலத்திற்கு முந்தைய காலநிலையும் மற்றும் தென் பகுதிகளில்  கீழை (easterly waves) அலைகளால் மழைக்கால சூழலும் நிலவுகிறது.

இவ்விரு அலைகளும் எதிரெதிர் திசையில் பயணிப்பதால் வட இந்தியாவில் அடர்த்தியான  மூடுபனியும்  குளிர்ந்த காலநிலையும், தென்னிந்தியாவில் தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதியும் உருவாக வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தெற்கு  கர்நாடகா, கடலோர ஆந்திரா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என கணித்துள்ளது.

மேலைக்காற்று அலைகள் வடமேற்கில் இருந்து மத்திய தரைக்கடல் வரை பயணித்து, ஈராக், மத்திய-கிழக்கு நாடுகள், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியே நகர்ந்து, குளிர், வெப்பம்  மற்றும்  மழை என வானிலையை மாற்றியமைக்கின்றன.

இதுபோன்று பருவநிலையை மாற்றியமைக்க வல்ல ஒரு அமைப்பானது  பலவீனமடைந்துள்ளது, தற்பொழுது நாட்டின் வட-மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குளிர்ந்த காலநிலையையும் மூடுபனியும் கொண்ட ஒரு பருவ மாற்றத்தினை ஏற்படுத்துகிறது.

மேலைக்காற்றலைகள்  ஒரு வித வெப்ப அமைப்புகள்.  அவை பலவீனமடைந்தோ அல்லது நாட்டை விட்டு வெளியேறியதும், குளிர்ந்த ஆர்க்டிக் காற்று இதன் பாதையை நிரப்புகிறது, இந்த ஆர்க்டிக் காற்றானது  வடமேற்கில் இருந்து  நெடுந்தூரம் பயணிக்கிறது.

வட பாகிஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் மீது நிலவும்  மேலைக்காற்றமைப்பு பலவீனமடைந்துள்ளது, ஆனால் அதன் முதன்மை அமைப்பு  நிலைக்கிறது.

மேலை அலை அமைப்பினால் காற்றுச்சூழற்சி உருவாகி வடக்கு ராஜஸ்தானில் நிலைகொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

மேலைக்காற்றின் முதன்மை அமைப்பும் இந்த சுழற்சியும் இணைந்து ஒரு குழாய் போன்ற அமைப்பினை ஏற்படுத்தி வடமேற்கு இந்தியாவில் வீசும்  குளிர் காற்றின் காரணமாக ஈரப்பதமாக மாறுகின்றது.

மேற்கு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கிழக்கு ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில்  அடர்த்தியான மூடுபனி  வெள்ளிக்கிழமை காலை முடிவடைந்த 24 மணி நேரத்தில் நிலவியது, அதே நேரம் பீகாரில் ஒரு சில  இடங்களில் மிதமான மற்றும் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது.

சனிக்கிழமை வரை வடக்கு ராஜஸ்தான், மேற்கு ஹரியானா மற்றும் தெற்கு பஞ்சாப் ஆகிய இடங்களில் காலை நேரங்களில் ஓரிரு இடங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவும்.

மேற்க்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் மேலை அலைகளினால் அடுத்த மூன்று நாட்களுக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஆங்காங்கே   பனிமூட்டம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்

 கணித்துள்ளது. ஒரு புதிய பலவீனமான மேலை அலை இடையூறு  சனிக்கிழமை வடமேற்கு இந்தியாவின் மலைப்பிரதேசங்களை பாதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வட மேற்கு பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை அளவு சனிக்கிழமை முதல்  2-4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும், இது திங்கட்கிழமை முதல் கிழக்கு இந்தியா வரை நீடிக்கும்.

மேலை அலைகள் ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு உத்தரப்பிரதேசம்,  ஹரியானா, சண்டிகர்  டெல்லி மற்றும் கிழக்கு உத்திரபிரதேசத்தில் ஒரு சில இடங்களில்  கூடுதல் ஈரப்பதத்தினை மழையாக பொழிந்துள்ளது.

 இப்பகுதியில் பெய்த குளிர்கால  மழைப்பொழிவானது  இந்த பருவத்தில் வடமேற்கு இந்தியாவில் குறுவை சாகுபடிக்கு  மிக முக்கியமானதாகும்.

தென்னகத்தில் கீழைக்காற்றின் தாக்கம்

இதற்கிடையில், தென் தீபகற்பத்தில் கீழை அலையினால் ஏற்படும் வானிலை நிகழ்வுகளால்  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  சனிக்கிழமை வரை ஓரிரு இடங்களில் கனமான மற்றும் பரவலான மழைப்பொழிவைக் கொடுக்கும் மற்றும் ஒரு சில இடங்களில்  அடுத்த இரண்டு நாட்களுக்கு  அதிக மழை பெய்யும். 

கீழை அலை நடவடிக்கையானது இலங்கை மற்றும் தென்னிந்திய கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதியினை தோற்றுவித்து  தர்க்கரீதியான ஒரு முடிவை எட்டக்கூடும்.

ஈரப்பதம் நிறைந்த கீழைக்காற்று தென் பிராந்தியத்தின் மீது இழுத்துச் செல்லப்படுவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு கணிசமாக அதிகரிக்கும்.

கேரளா, தெற்கு  கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், கடலோர ஆந்திரா மற்றும் லட்சத்தீவுகளில் சனிக்கிழமை முதல் திங்கள் வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

 

மொழிபெயர்ப்பு: ஸ்ரீகிருஷ்ணன்

comment COMMENT NOW