வணக்கம்! வாசகர்களே!, நேற்றிரவு முதல் இன்று காலை வரை சென்னை மற்றும் தமிழகம் அருமையான மழைப்பொழிவை பெற்றது தரமான சம்பவம் என்றே கூறலாம்.

போர்க் கப்பல்களின் படையெடுப்பு  போன்று இடியுடன் கூடிய மழை மேகங்கள் நகரின் சில பகுதிகளுக்கு படையெடுத்தன,  உள்மாவட்டங்களிலும் நுழைந்து விடியற்காலையில் கனமழையை கொடுத்தது, வானிலை பதிவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் திடீரென பெய்த மழையை கையாள்வதில் அரசு நிர்வாகத்தின் தயார்நிலையை பற்றி கவலையுடன் பகிர்ந்தனர்.

வியாழக்கிழமை காலை பெய்த மழை பெரும்பாலான கணிப்புகளை பொய்யாக்கியது - இது தான் வடகிழக்கு பருவமழையின் சிறப்பம்சம், எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்.

சென்னை நகரில் காலை 8 மணியளவில் வானம் சற்று தெளிவாக காணப்பட்டது. ஆற்காடு, வேலூர், குடியாத்தம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம், நாகப்பட்டினம் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மழைப்பொழிவிற்க்கான நிகழ்தகவு 80 சதவீதமாக உயரும். தமிழகம் மற்றும் புதுச்சேரி கீழை அலைகள் (Easterly waves) மூலம் அதிக மழைப்பொழிவை பெறும்.

valmiki-nagarJPG

The downpour led to some waterlogging on Fourth Seaward Road in Valmiki Nagar. Photo: Bijoy Ghosh

சென்னையில் இன்று ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பிற்பகல் நேரங்களில் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.. மாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் மழையுடன் ஆரம்பித்து பின்னர் பரவலாக இரவு நேரங்களில் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். நாளைய (வெள்ளிக்கிழமை) நிகழ்வுகளும் இன்று போலவே அமையும்.

இன்று காலை 7 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில்  (MAA / VOMM) லேசான தூறல் மழை, வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாக இருந்தது. விமானங்கள் வருகை நேரத்தில் சராசரியாக 14 நிமிடங்களும் மற்றும் புறப்படுவதில் 25 நிமிடங்களும் தாமதமான போக்கு காணப்பட்டது.

இதற்கிடையில், தெற்கு தீபகற்பத்தில் சுறுசுறுப்பான கீழை அலை நிலைகளால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) வரை ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்யும்.

canara-bankJPG

People won't find it easy to walk into this branch of Canara Bank today. Photo: Bijoy Ghosh

 

புதுதில்லி இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தேசிய வானிலை கண்ணோட்டம்  (தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் உட்பட) குறிக்கும் வானிலை கண்ணோட்டம் பின்வருமாறு:

இன்று (வியாழக்கிழமை):  கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வெள்ளிக்கிழமை (நாளை):  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா, மாஹே, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சனிக்கிழமை:  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைப்பொழிவு இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை:  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய இடங்களில் கனமழையானது ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை எதிர்பார்க்கலாம்

திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். கரையோர மற்றும் தெற்கு கர்நாடகாவின் உட்பகுதி, கேரளா, மாஹே, லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஒரு சில இடங்களில் மழை எதிர்பார்க்கலாம்.

சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்பின் படி நேற்று (புதன்கிழமை) 1 செ.மீ.க்கு மேல் மழை பெற்ற இடங்கள் பின்வருமாறு ( நேற்று (புதன்கிழமை) இரவில் இருந்து இன்று காலை வரை பெய்த மழை அளவு தரவு கிடைக்கவில்லை)

கடலூர் மற்றும் கடலூர் ஆட்சியர் அலுவலகம்: 6 செ.மீ; புதுச்சேரி: 4 செ.மீ; கேளம்பாக்கம், மண்டபம், திருச்செந்தூர், மற்றும் மதுரந்தகம்: 3 செ.மீ; உத்திரமேரூர், மாமல்லபுரம், பெரிய காலப்பேட்டை, காஞ்சிபுரம், ராமேஸ்வரம், மற்றும் செங்கல்பட்டு: 2 செ.மீ; மற்றும் பன்ருட்டி, சிர்காழி, சத்தியபாமா பல்கலைக்கழகம், சேயூர், உளுந்தூர்பேட்டை, வேதாரண்யம், தாம்பரம், தரங்கம்பாடி, வானூர், நாகப்பட்டினம், சாத்தான்குளம், வந்தவாசி, வேலூர், செங்கம், கள்ளக்குறிச்சி -1 செ.மீ.

சென்னை வானிலை மையத்தின் வானிலை ஆய்வறிக்கை:  இன்று (வியாழக்கிழமை) சென்னைக்கு பொதுவாக மேகமூட்டமான நாளாக இருக்கும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 31- மற்றும் 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய நிகழ்தகவு இரவு நேரங்களில் அதிகரிக்கும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

மொழிபெயர்ப்பு: ஸ்ரீகிருஷ்ணன்

comment COMMENT NOW