வணக்கம்! இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்னையின் தெற்கே சிறுசேரி மற்றும் கேளம்பாக்கம் மீது லேசான இடியுடன் கூடிய மழை பெய்தது. காலை 8.45 மணியளவில், பெரியார் நகர், பார்வதி நகர், பனையூர், ஜேப்பியார் நகர், மறைமலை நகர், திருப்போரூர், செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் கருங்குழி ஆகிய இடங்களில் மழை பெய்தது. ராயபுரம் முதல் தென்கிழக்கு வங்கக்கடல் வரை மழை மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மரக்காணம், திண்டிவனம் மற்றும் செஞ்சியில் இடியுடன் கூடிய மழை பெய்தது மற்றும் பென்னாத்தூர், போளூர் மற்றும் செங்கம் இடையே பலத்த மழை பெய்த்து.

சென்னை: 10 முதல் 20 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை மாநகர் இன்று காலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது, சர்வதேச மாதிரிகள் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளன. காற்றின் போக்கு வட-கிழக்கிலிருந்து, தென்-கிழக்கு திசைக்கு மாறியதால் மேம்பட்ட ஈரப்பதத்தை புதுப்பித்து வழங்கும் திறன் சற்று குறைவாகவே இருக்கும். காற்றின் ஈரப்பதம் மத்திய மற்றும் தென் தமிழகம், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை இலக்காகக் கொண்டு தென்மேற்கு திசை நோக்கி பயணிப்பதே சென்னையில் மழைக்கான வாய்ப்புகள் குறைய காரணம்.

இந்த காற்றின் ஒரு பகுதி தீபகற்ப முனை மற்றும் கன்னியாகுமரி வழியே லட்சத்தீவு பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பகுதியை செறிவூட்ட செல்கிறது, இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எதிர்பார்க்கிறது. அரபிக்கடலில் மேற்கு நோக்கி (ஆப்பிரிக்க கடற்கரை அருகே) ஒரு காற்றழுத்த பகுதி நிலவி வருகிறது, இது அடுத்த இரண்டு தினங்களில் சோமாலியா (கிழக்கு ஆப்பிரிக்கா) மற்றும் ஏமன் கடலில் புயலாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஆங்காங்கே கனமான முதல் பரவலாக கனமழையும். மேலும், கேரளா, தென் கரையோர ஆந்திரா, ராயலசீமா, கரையோர மற்றும் தெற்கு கர்நாடக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இவ்விரண்டு காற்றழுத்த அமைப்புகளினால் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சீரமைப்பு இருந்திருந்தால் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களுக்கு நிலைமை முற்றிலும் வேறுபட்டிருக்கும். ஆனால் வெப்பமண்டல ஒருங்கிணைப்பு மண்டலம் (Inter-tropical Convergence Zone) தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை நோக்கி அதன் பருவகால இயக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு மண்டலம் தான் தொடர்ந்து பருவமழை செயலில் இருக்கும் துல்லியமான அட்சரேகைகளை ஆணையிடுகிறது. இன்று முதல் தீபகற்ப இந்தியாவில் மழைப்பொழிவு குறையும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA / VOMM)

இன்று காலை பனிமூட்டமான சூழ்நிலை நிலவியது, வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும், தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசியது.

மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு இன்று 80 சதவிகிதம் மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

குமரிமுனை-மாலத்தீவு பகுதி, மன்னார் வளைகுடா, மற்றும் தென்மேற்கு வங்க்ககடல் மற்றும் தென் தமிழக கரையில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த பகுதிகளால் குமரிமுனை-மாலத்தீவு பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்க்க்கடலில் கடல் நிலை மிகவும் கடினமானதாக இருக்கும் (கடல் அலை 8 முதல் 13 அடி வரை இருக்கும்).

கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரைகள், குமரிமுனை-மாலத்தீவு பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழகம், லட்சத்தீவு பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மழைப்பதிவர்கள் மற்றும் ட்விட்டர் பயனர்கள், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் உட்புறத்தில் தற்போதைய இடியுடன் கூடிய மழை பற்றிய நிலவரத்தை பகிர்ந்தனர்.

மொழிபெயர்ப்பு: ஸ்ரீகிருஷ்ணன்

comment COMMENT NOW