கடல் மாலுமிகள் பயணத்தினால் ஹோட்டல் மற்றும் விமான துறைகள் சிறு நிம்மதி அடைந்துள்ளனர். தொற்றுநோயின் காரணமாகப் விமான சேவை ரத்து செய்துள்ளதால், பயண மற்றும் விருந்தோம்பல் தொழில்கள் பெரும் தேக்க நிலையை சந்தித்து வருகின்றன.

மாலுமிகள் வருகையால் கொச்சியில் ஹோட்டல்களுக்கு ஒரு பெரிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு நிறையக் குழு மாற்றங்கள் ஏற்படுகின்றன, என கொச்சியைச் சேர்ந்த இந்தியாவின் சிறந்த கப்பல் நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். கொச்சியில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ஹோட்டல்களும் நிரம்பி வருகின்றன. ஏனெனில், கப்பல்களை வந்தடைவதற்கும் மற்றும் அதிலிருந்து வெளியேறுவதற்கும் மாலுமிகளை மாநில அரசு வகுத்துள்ள நெறிமுறையின் அடிப்படையில் தனிமைப்படுத்தி அதற்கேற்றார் போல் இடமளிக்கவேண்டும். கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் குழு முகவர்கள், கடல் மாலுமிகளை தோஹா மற்றும் கொழும்பு போன்ற வெளிநாட்டு இடங்களுக்குக் கொண்டுச் செல்ல ஒப்பந்த விமானங்களைப் பயன்படுகின்றனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து, குறிப்பாக டெல்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற நகரங்களிலிருந்து குழுவினரை தோஹா மற்றும் கொழும்புக்கு ஒரு விமானத்தில் கொண்டு செல்வதற்கும், கடல்மாலுமிகளை மீண்டும் இந்தியாவிற்க்குக் கொண்டு வருவதற்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய கோவிட்-19 சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் காரணமாக விருந்தினர்கள் இல்லாமல் சோர்ந்து கிடந்த ஹோட்டல்களுக்கு ஒரு நல்ல வணிகத்தை கொடுக்கின்றனர்.

கொச்சியின் சாதகம்

கொச்சின் துறைமுகம், மாலுமிகள் மாறுவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

ஏனென்றால், அதன் வெளிப்புறத்தில் 80க்கும் மேற்பட்ட கப்பல்களை நங்கூரம் இட்டுள்ளதால் குழுக்கள் சுழற்சி முறையில் மாறுகின்றனர். இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்மாலுமிகள் சென்றடையவும் கப்பல்களிலிருந்து இறங்கவும் உதவுகிறது. கொச்சி துறைமுகம் எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்காமல் நங்கூரம் பாய்ச்சுமிடத்தில் குழுவினரை மாற்ற அனுமதிக்கிறது. மேலும், சர்வதேச கப்பல் பாதையிலிருந்து குறைந்த தூரத்தில் விலகி இருக்கிறது. இதுபோன்ற மேலும் குழுக்கள் சுழற்சி முறைக்காக வரிசையாக நிற்கின்றன.

கொச்சியில் உள்ள ஹோட்டல்களில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட, கேரள சுகாதாரத் துறையிடம் தங்களது இடங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளாகப் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளனர்.

கோவிட்-19 பரிசோதனைகளுக்காகக் கப்பலில் சேருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக கடல் மாலுமிகள் கொச்சிக்கு வந்து மற்றும் அதன் அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டும். கப்பல்களிலிருந்து இறங்குவோர் கொச்சியில் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும். ஆனால் இந்த காலத்தை கொச்சினுக்கு வந்த கடைசி துறைமுகத்திலிருந்து பயணிக்கும் நேரத்திற்கேற்ப சரிசெய்யப்படுகிறது. உதாரணமாக, துபாயிலிருந்து புறப்பட்ட பின்னர் ஒரு கப்பல் கொச்சினுக்குச் செல்ல ஐந்து நாட்கள் பிடித்தால், கையெழுத்திடும் குழுவினர் கொச்சியில் ஒன்பது நாட்கள் தனிமையிலிருந்தால் போதும்.

ஒப்பந்த விமானங்கள்

மே 19 முதல் ஜூலை 1 வரை, 40 ஒப்பந்த விமானங்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, என்று மும்பையைச் சேர்ந்த கப்பல் மேலாண்மை நிறுவனமான வி ஆர் மரைன்டைம் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் பிரஷர் தெரிவித்துள்ளார். இவர்கள் 13 தனி ஒப்பந்த விமானங்கள் வைத்து இருக்கிறார்கள் .

வந்தே பாரத் மூலம் ஏர் இந்தியா விமானங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரைக் அரசாங்கம் அழைத்து வர

ஏற்பாடு கொண்டுள்ள நிலையில், கப்பல் நிறுவனங்கள் கடல் மாலுமிகளை இடமாற்றம் செய்வதற்கு ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ விமானங்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஒரு பயணத்திற்கு ₹60 லட்சம் வரை ஒப்பந்த விமானங்களுக்குச் செலவு செய்கின்றனர் என்று, இந்த திட்டம் குறித்து ஒருவர் விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த கட்டணத்தை பல்வேறு கப்பல் மேலாளர்கள் தங்கள் குழுவினருக்கான இடங்களை முன்பதிவு செய்யும்பொழுது மேற்கொள்கிறார்கள். இதில் ஆங்கிலோ-ஈஸ்டர்ன், வாலம், சினெர்ஜி , வி. குழு, எம்.எஸ்.சி மற்றும் சீடீம் போன்றவை அடக்கம் .

இன்றைய சூழ்நிலையில், இந்த வணிகம் எல்லா விமான நிறுவனத்திற்கும் கடவுளால் வழங்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம, என்று ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் விமான செயல்பாட்டுத் துறையின் நிர்வாகி ஒருவர் கூறினார்.

மும்பை மற்றும் கொச்சியில் தங்கும் அறை விலை கணிசமாகக் குறைந்துவிட்டன என்று கப்பல் நிறுவன நிர்வாகிகள் கூறுகிறார்கள்,

கொச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒர் இரவுக்கு ₹2,000 வரை குறைத்துவிட்டனர். இதில், அவர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கும் மூன்று நிலையான உணவுகளை உள்ளடக்கியது, என்று கொச்சியைத் தளமாகக் கொண்ட கப்பல் நிர்வாக நிர்வாகி குறிப்பிட்டார்.

மேலும், ஓயோ அறைகள் (OYO Rooms) இந்தியா முழுவதும் சிறப்புத் தள்ளுபடி கட்டணங்களை வழங்கி வணிகத்திற்காகக் கப்பல் நிறுவனங்களை அணுகுகின்றனர். ஆனால்,

கடல் மாலுமிகளை அழைத்து வர வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தால், ஓயோ நிறைய இழக்க நேரிடும், என்று அவர் கூறினார்.

Translated by P Ravindran

comment COMMENT NOW