கோவிட்-19 பெருந்தொற்று, விலைகுறைவு மற்றும் நுகர்வோர்சந்தைகளில் தேவைகுறைவு ஆகிய காரணங்களால் ஏலக்காய் அதன் நறுமணத்தை இழந்து வருவதாகத் தெரிகிறது.

ஏலக்காயின் முக்கியசந்தையாக டெல்லி கருதப்படுகிறது. இங்கிருந்து, பஞ்சாப், உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானாஆகிய மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கொரோணா பெருந்தொற்று ஏலக்காய் விற்பனையை மோசமாக பாதித்துள்ளது. மிகப்பெரிய நுகர்வுமையமான குஜராத் மற்றும் மும்பையில் உள்ள வாஷி ஆகிய இடங்களும் இந்த கொடியவைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தைகளில் தேவையையும், நுகர்வோரின் வாங்கும் திறனையும் பாதித்துள்ளது என்று வர்த்தகர்கள் கவலை தெரிவித்தனர்.

மார்ச் மாதத்தில் ஊரடங்கிற்க்கு முன்பு ஒரு கிலோ ரூபாய் 3,300 என்ற அளவில் இருந்த ஏலக்காயின் சராசரி விலை தற்போது ஒருகிலோவுக்கு ரூபாய் 1,150 ஆககுறைந்துள்ளது. இந்த விலை குறைவு சந்தையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பழைய ஏலக்காய்கள் வர்த்தகத்திற்காக கொண்டு வரப்படுகிறது எனவும் இவை அனைத்தும்- அநேகமாக ஆறுமாதங்களுக்கு முன்பு அறுவடை செய்யப்பட்டவையாக இருக்கலாம் எனவும் அதன் வெளிர்மஞ்சள் நிறதோற்றம்- பழைய இருப்பின் தோற்றத்தைவெளிப்படுத்துவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ஆண்டின் முதல் பாதி ஏற்கன வேமுடிந்துவிட்டதாகவும் ஏலக்காய்க்கான தேவைகுறைந்துள்ளதாகவும் தொழில் துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், திருமண சீசன் மற்றும் தீபாவளி பண்டிகைகாலம் துவங்கும் போது ஆண்டின் இரண்டாவது பாதியில் தேவை அதிகரிக்கும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், கொரோணாவின் தாக்கம் மோசமான இருப்பதும் கவலையை கூட்டுகிறது.

முடங்கிய ஏற்றுமதி தேவை

தடைநீக்கப்பட்ட பின்னர் மேமாதத்தில் சவூதி அரேபியாவிற்கான ஏற்றுமதி மீண்டும்தொடங்கப்பட்டாலும், ரம்ஜானுக்குப் பிறகு தேவை குறைந்துள்ளது.

வளைகுடா சந்தைகளின் நிலைமை மற்றும் ஏலக்காயின் தேவைக்கு புத்துயிர் அளிப்பது கொரொணா தொற்றுகட்டுக்குள் வருவதை பொறுத்தது என்று ஏ.வி.டி யின் மூத்த துணைத் தலைவர்

விஉன்னி கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, விளைச்சல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, போதுமான கோடை மழை மற்றும் ஏலக்காய் வளரும் பிராந்தியங்களில்நல்ல தட்பவெப்பநிலை ஆகியவை கைகொடுக்கும் என அவர் மேலும் கூறினார்.

கேரள ஏலக்காய் விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சிசதா சிவசுப்பிரமணியம் கூறுகையில், தமிழ்நாட்டின் தேனியில் இருந்து சிறுமற்றும்நடுத்தர விவசாயிகளுக்கு இடுக்கியில் உள்ள தோட்டங்களுக்கு செல்ல பயணதடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது கவலைக்குரியதுஎனறார்.

இடுக்கியில் சுமார் 25,000 ஹெக்டேர் தோட்டங்கள் தேனியில் உள்ள விவசாயிகளுக்கு சொந்தமானவை, அவர்கள் வண்டன் மேடுக்கு விவசாயத்திற்காக தினமும் பயணம் செய்கிறார்கள்.

கோவிட்-19 தொற்றுஅதிகரித்ததின் விளைவாக தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குசெல்லஅனுமதிமறுக்கப்பட்டிருப்பதால் கடந்த மூன்று மாதங்களாக ஏலக்காய் தோட்டங்கள் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. முறையான நீர்ப்பாசனம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தல் இல்லாத நிலையில் பெரும்பாலான ஏலக்காய் தோட்டங்கள் தற்போது மோசமான நிலையில் உள்ளன. இதேநிலை நீடித்தால் இத்தாவரங்களைஅகற்றி மீண்டும் புதிதாக நடவு செய்வதற்கு வழி வகுக்கும், இது கூடுதல் சுமையாக இருக்கும், ஏலக்காய் விளைச்சலின் வீழ்ச்சி பொருளாதார சங்கிலியை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஏலக்காய் விவ்சாயிகளுடன் ஒத்துழைத்து வழக்கமான முறையில் தமிழக விவசாயிகள் பயணிக்க முறையான அனுமதி வழங்க இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடு மாறு கேரள முதலமைச்சரை அவர் கேட்டுக்கொண்டார்.

Translated by Srikrishnan PC

 

 

comment COMMENT NOW