நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைந்த ஒரு உள்வரும் மேலை இடையூறு எதிர்பார்த்தபடி கிழக்கு நோக்கி (வட பாகிஸ்தான் மற்றும் எல்லையைத் தாண்டி வடமேற்கு இந்தியாவுக்கு) செல்லவில்லை, இன்று (புதன்கிழமை) காலையிலும் பலவீனமடையவில்லை. இந்த அமைப்பு நீடித்திருப்பது இதனை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. வடக்கே மேலும் வெப்பநிலை குறைய வாய்ப்பு மேற்கு ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில்  இன்று (புதன்கிழமை) காலை இரு தொடர்பில்லாத சுழற்சிகள் மேலை இடையூறுக்கு முன்னதாக நிலைகொண்டுள்ளன. நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) வரை வெப்பநிலை அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றாலும், அடுத்த இரண்டு நாட்களில் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) இந்த பகுதிகளில் குறைந்தபட்ச (இரவு) வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும்).

இன்று (புதன்கிழமை) பொருத்தவரை, பீகார், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி நிலை கணிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சம் 16 டிகிரி செல்சியஸைத் தாண்டாது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் மேற்கத்திய இடையூறுடன் தொடர்புடைய மேக மூட்டம் இல்லாததால், சூரிய கதிர்வீச்சு வளிமண்டலத்தின் உயர் மட்டங்களுக்குள் தப்பிக்க உதவுகிறது. மேகங்கள் இல்லாதது மேல் மட்டங்களில் உள்ள குளிர்ந்த காற்றை தரையில் இறங்கச்செய்து வெப்பநிலையைக் குறைக்கவும் அனுமதிக்கும். காற்றில் உள்ள ஈரப்பதம் மூடுபனியாக மாறிவிடும். குடியரசு தினத்தன்று குளிர் மற்றும் அடர்த்தியான மூடுபனி டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் சில பகுதிகளில் அடர்த்தியான பனிமூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. ஒரு புதிய பலவீனமான மேற்கத்திய இடையூறு வெள்ளிக்கிழமை முதல் வடமேற்கு இந்தியாவின் மலைப்பிரதேசங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வானிலை மாற்றம் கடுமையாக இருக்காது.

இன்று (புதன்கிழமை) காலை, பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு ராஜஸ்தான் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் மிகவும் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது.

பீகார், அசாம் மற்றும் மேகாலயா பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியும் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் திரிபுராவின் பகுதிகளில் மிதமானதாகவும் இருந்தது. டெல்லி (சஃப்தர்ஜங்), பாட்டியாலா, அம்பாலா, ஹிசார், பாலம், சுரு, பிகானேர், பஹ்ரைச், கோரக்பூர் மற்றும் பாட்னாவில் பனி மூட்டத்தினால் காணும் நிலை (Visibility) 25 மீட்டருக்கும் குறைவாக இருந்தது; லக்னோ, பூர்னியா, தேஸ்பூர் மற்றும் சில்சார் ஆகிய இடங்களில் காணும் நிலை 50 மீட்டருக்கு குறைவாக இருந்தது. நேற்று அதிக வெப்பம் பதிவான இடம் மங்களூரு நேற்று அதிகபட்ச (நாள்) வெப்பநிலை 38.0 டிகிரி செல்சியஸ் மங்களூருவில் பதிவாகியுள்ளது, அதே சமயம்  மிகக் குறைந்த வெப்பநிலை 4.6 டிகிரி செல்சியசாக (இரவு) சுர்க் (கிழக்கு உத்தரப்பிரதேசம்) பதிவாகியுள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை, முக்கிய பெருநகரங்களில், டெல்லி 10 டிகிரி செல்சியசுடன் காலை 9.30 மணியளவில் குளிராக இருந்தது, 9.0 டிகிரி செல்சியசாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பதிவானது; சென்னை நகரில் 25.0 டிகிரி செல்சியசும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பனிமூட்டதுடன் 27 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவானது.

மும்பை நகரில் 25.0 டிகிரி செல்சியசாகவும் மற்றும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் மேகமூட்டத்துடன் 27 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவானது; நாக்பூரில் ஓரளவு மேகமூட்டத்துடன் 22 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவானது. கிழக்கில், கொல்கத்தா 19 டிகிரி செல்சியஸில் காலை 9.30 மணிக்கு பனிமூட்டமாக இருந்தது, அதே நேரத்தில் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் 16 டிகிரி செல்சியஸில் சற்று குளிராக இருந்தது. தெற்கைப் பொறுத்தவரை, ஹைதராபாத் 24 டிகிரி செல்சியசாகவும், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸில் பனிமூட்டமாக காணப்பட்டது. பெங்களூரு இன்று 21 டிகிரி செல்சியசுடன் பனிமூட்டமான காலையை கண்டது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலும் காலை 9.30 மணி அளவில் மூடுபனியுடன் வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக பதிவானது.

Translated by Srikrishnan PC 

comment COMMENT NOW