ரிசர்வ் வங்கியிடமிருந்து இன்னும் சில அதிரடி நடவடிக்கைகளை ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்க்கிறது, என்று CREDAI (கிரெடாய்) தேசிய தலைவர் சதீஷ் மாகர் கூறியுள்ளார்.

ரியல் எஸ்டேட் துறை, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஒரு உந்துசக்தியாக செயல்பட முடியும். ஆனால், கடனைக் காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமை நீட்டிப்பு (moratorium ) அறிவிப்பு ஒரு குறுகிய கால தீர்வே தவர, நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க வழிவகுக்காது. உறுதியான பணப்புழக்க நடவடிக்கைகள் மற்றும் வட்டி விகிதம் குறைப்பு, இந்த நேரத்தின் அவசியமான ஒன்றாகும். ஆனால், அதே சமயம் கடன்களை ஒரு முறை மறுசீரமைப்பதன் மூலம் சுருண்டு விழும் ரியல் எஸ்டேட் துறையைக் காப்பாற்றலாம், என்று மாகர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடன் வாங்குபவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க, ரிசர்வ் வங்கி முயன்றோதோடு மட்டுமில்லாமல், பெருநிறுவனகளக்கு ஒரு குழுவாகக் வாங்கும் கடன் வரம்பை 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக நீட்டித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகள் தற்பொழுது நிலவும் பணப்புழக்க நெருக்கடியைத் தீர்க்க போதுமானதாக இருக்காது.

வங்கிகளிடமிருந்து வரவிருக்கும் நன்மைகளை எங்களுக்கு தடையில்லாமல் மாற்றுவதில் அரசாங்கம் இப்போது உறுதியாக செயல்படவேண்டும். தற்போது, ​​கோவிட்-19 நெருக்கடி காரணமாக இந்த துறை வருமான பற்றாக்குறையிலுள்ளது, என்று மாகர் கூறினார்.

ரியல் எஸ்டேட் தொழில், விவசாயத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய தொழிலாக உள்ளது. மந்தநிலை நீண்டகாலம் இத்துறையில் நீடித்தால் இதனுடன் தொடர்புடைய 269 இணை மற்றும் துணை தொழில்கள் நேரடி தாக்கத்திற்கு உள்ளாகுமென்றும் அவர் கூறினார். எனவே, பொருளாதார நிவாரணம் வழங்க அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் உடனடி நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது, என்று அவர் கோரிக்கைை விடுத்துள்ளார்.

Translated by P Ravindran

comment COMMENT NOW