டெல்லி உட்பட தேசிய தலைநகரப் பகுதிகளில், குளிர்ந்த வானிலை எதிர்பார்க்கப்படுகிறது, குடியரசு தினத்தை ஒட்டி பனிமூட்டம் இருக்கும் மேலும் வலுவிழந்த மேற்கு அலை தொந்தரவுகள் கடந்து செல்வதே இப்பிராந்தியத்தில் இவ்வானிலை அமைப்பிற்கு காரணியாகும்.  

ஆப்கானிஸ்தானை ஒட்டி புதிய மேற்கு அலை தொந்தரவுகள் இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய, உள்வரும் இடையூறை எதிர்பார்த்ததை விட சற்று வலிமையான சுழற்சியாக இருக்கும் என கணித்துள்ளது. இதனால் நாளை (புதன்கிழமை) வரை வடமேற்கு இந்தியாவின் மலை பிரதேசங்களில் பரவலாக மழை அல்லது பனிப்பொழிவுஇருக்கும் மற்றும் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி மீது ஒரு சில இடங்களில் லேசான மழை இருக்கும். இதைத் தொடர்ந்து வார இறுதியில் மற்றொரு பலவீனமான மேற்கு இடையூறு ஏற்படக்கூடும். ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் இரவு அல்லது காலை நேரங்களில் அடர்த்தியான மூடுபனி பொழியும். அடர்த்தியான மூடுபனிக்கான முன்னறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மத்தியப் பிரதேசம், பீகார், சிக்கிம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடன் கூடிய மழை மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் கணிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று காலை 9.15 மணியளவில் பனிமூட்டமாகவும், வெப்பநிலை 11 டிகிரி செல்சியசாகவும், ஈரப்பதம் 100 சதவீதமாகவும் இருந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் மூடுபனி காணப்பட்டது. சண்டிகரில் கணிசமான மேகமூட்டத்தால் இன்று காலை 13 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உயர்ந்தது, அதே நேரத்தில் ஜெய்ப்பூரில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக இருந்தது. அமிர்தசரஸில் மேகமூட்டமாக இருந்தாலும், வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்து காணப்பட்டது, அகமதாபாத்தில் வெப்பநிலை 19 டிகிரி செல்சியசாக பதிவானது. இந்திய வானிலை மையத்தின் அறிக்கையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் காலை வேளையில் மிகவும் அடர்த்தியான மூடுபனி காணப்படட்து என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக்ரா விமான நிலையத்தில் காணும் நிலை (visibility) -0 வாக இருந்தது; பாட்டியாலா, ஹிசார் மற்றும் லக்னோவில் 25 மீட்டர் அல்லது அதற்க்கும் குறைவாக காணும் நிலை இருந்தது; பாட்னாவில் 50 மீட்டர் அல்லது அதற்கும் குறைவாகவும் மற்றும் அம்பாலா, டெல்லி (பாலம்), சுல்தான்பூர், கோரக்பூர், கயா, பாக்தோக்ரா மற்றும் கைலாஷாஹர் ஆகிய இடங்களில் 200 மீட்டர் அல்லது அதற்கும் குறைவாகவும் காணும் நிலை இருந்தது.  

குளிர் அலை நிலவரம் நேற்று (திங்கட்கிழமை) வடக்கு ராஜஸ்தானில் சில பகுதிகளில் குளிர் அலை நிலவியது, இது உத்தரபிரதேசத்தின் பகுதிகளைத் தாக்கியது. தேசிய அளவில் அதிகபட்ச (நாள்) வெப்பநிலை 35.6 ° C கொச்சினிலும் (கேரளா) மற்றும் மிகக் குறைந்த வெப்பநிலை -0.6 டிகிரி செல்சியசாக (இரவு) கோட்டாவிலும் (மேற்கு ராஜஸ்தான்) பதிவானது. அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை, ஆனால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குறைந்தபட்ச (இரவு) வெப்பநிலை வடமேற்கு இந்தியாவில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். நாளை (புதன்கிழமை) ஒடிசா, அசாம், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியை ஐஎம்டி கணித்துள்ளது. கிழக்கு மத்திய பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற பகுதிகளுக்கான வானிலை நாட்டின் பிற பகுதிகளைப் பொருத்தவரை, மும்பையில் காலை 9 மணிக்கு முன்னதாக 28 டிகிரி செல்சியசாக பதிவானது. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலும் 25 டிகிரி செல்சியஸ் பதிவானது. புனேவில் ஓரளவு மேகமூட்டமாக இருந்து பின்னர் வானிலை தெளிவாக இருக்கும்; மற்றும் நாக்பூரில் பனிப்பொழிவு மற்றும் மேகமூட்டத்துடன் துவங்கி ஒரு தெளிவான வானிலையாக மாறும். தெற்கில், சென்னையில், காலை 9.30 மணியளவில் வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக பதிவானது. பெங்களூருவில், காலை வேளையில் சில மேகக்கூட்டங்கள் வெப்பநிலையை 22 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தின, ஆனால் 29 டிகிரி செல்சியசாக உயரும். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 19 டிகிரி செல்சியஸில் வெப்பநிலையுடன் பனிமூட்டமாக காணப்படட்து.

ஹைதராபாத்தில், காலை பனிமூட்டம் நிலப்பரப்பு வெப்பமாவதை தாமதப்படுத்தியது, வெப்பநிலை காலை 9.30 மணிக்கு 24 டிகிரி செல்சியஸாக இருந்தது, விரைவில் 30 டிகிரி செல்சியஸை எட்டும். ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மேகமூட்ட்த்துடன் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW