ஈரான் முதல் யசுஜ், கெர்மன், டெஹ்சாம் மற்றும் ஜபோல் (ஈரான்) வரையிலும் அட்சரேகை வழியாக ஒரு பலவீனமான மேற்கத்திய இடையூறு காணப்படுகிறது. ஃபரா, காந்தஹார். தாரின்கோட் (ஆப்கானிஸ்தான்); ஜாப், குஷாப், சியால்கோட் (பாகிஸ்தான்); மற்றும் இந்தியாவின் மணாலி (இமாச்சலப் பிரதேசம்), லே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மீது ஆங்காங்கே மழை அல்லது பனியை ஏற்படுத்தக்கூடும், மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் கடுமையான வானிலை வட இந்தியாவில் இருந்து வீசும் குளிர்ந்த மற்றும் வறண்ட மேலைக்காற்று ஈரமான கீழைக்காற்றுடன் தொடர்புகொள்வதால் கிழக்கில் வானிலை நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வியாழக்கிழமை வரை மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

ஆலங்கட்டி மழை என்றால் என்ன?

ஆலங்கட்டி மழை (hail) வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம். பெரும்பான்மையான இடிமழைகளில் ஆலங்கட்டிகள் அடங்கியிருக்கும். இது இடி மேகங்களில் உருவாகின்றது. இவ்வாறு உருவாக, சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக மேலெழவும் குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். இவை அடிக்கடி நிலப்பகுதிகளின் உள்புறங்களிலும் புவியின் இடைப்பட்ட உயரங்களிலும் வெப்ப மண்டலங்களில் உயர்ந்த உயரங்களிலும் ஏற்படுகின்றன. அளவில் பெரிதான ஆலங்கட்டிகள் மிக விரைவாக கீழே விழுகின்றன. இவற்றின் விரைவாக உருகும் தன்மை, காற்றுடன் உரசல், மழையுடனான மற்றும் பிற ஆலங்கட்டிகளுடனான தாக்கம் ஆகியவற்றால் குறைக்கப்படுகிறது.

வடக்கில் மூடுபனி மற்றும் குளிர் அலை நிலவரம்

வடமேற்கு இந்தியாவின் சமவெளிகள் - பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் - குளிர் அலை நிலைகள் மற்றும் அடர்த்தியான மூடுபனி நிலவுகிறது, இது மேகமூட்டம் மற்றும் வெப்பமான மேற்கத்திய இடையூறுடன் தொடர்புடையவை. நாளை (செவ்வாய்) இரவு முதல் குளிர் மற்றும் மூடுபனி குறையக்கூடும். இன்று காலை பஞ்சாபில் ஒரு சில இடங்களில் மிகவும் அடர்த்தியான மூடுபனி நிலவியது, காணும்நிலை (Visibility) 25 மீட்டராக இருந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை), தெற்கு மத்தியப் பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் (நாள் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழே) காணப்பட்டது. பஞ்சாபின் பல பகுதிகளிலும், ஹரியானாவில் ஒரு சில இடங்களிலும் குளிர் அலை நிலை நிலவியது. நேற்றைய உயர்ந்த வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ் புனலூரில் (கேரளா) பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் மிகக் குறைந்த இரவு வெப்பநிலை 2.2 டிகிரி செல்சியஸ் நர்னாலில் (ஹரியானா) பதிவாகியுள்ளது.

மத்திய இந்தியாவின் கிழக்கில் மேகக்கூட்டம்

வடமேற்கு இந்தியாவுக்கு உள்வரும் பலவீனமான மேற்கத்திய இடையூற்றை தவிர, மாலத்தீவு-லட்சத்தீவின் மீது ஒரு நீளமான குறைந்த காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது தென் தீபகற்பத்தில் கீழைக்காற்றை வீசச்செய்வதோடு, மத்திய இந்தியா மற்றும் தென் தீபகற்பத்தை ஒட்டியுள்ள கிழக்கு இந்தியாவிலும் இடியுடன் கூடிய மழை மேகங்களை உருவாக்குகிறது. இன்று காலை (திங்கள்) செயற்கைக்கோள் படம் புவனேஸ்வர், காமக்கியா நகர், சம்பல்பூர், பிரம்மபூர், பவானிபட்னா மற்றும் ராயகடா (ஒடிசா), கப்சி (சத்தீஸ்கர்); சந்திரபூர் (மகாராஷ்டிரா); ராமகுண்டம், வாரங்கல், ஹைதராபாத், மற்றும் கம்மம் (தெலுங்கானா); ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், காக்கினாடா, விஜயவாடா, மச்செர்லா, கர்னூல், ப்ரோடதூர், நெல்லூர், மற்றும் திருப்பதி (ஆந்திரா); வேலூர், சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, மற்றும் திருநெல்வேலி (தமிழ்நாடு); மற்றும் லட்சத்தீவு தீவுகள் மீது மேகங்களை சுட்டிக்காட்டியது.

CaptureJPG

A clear sky above Bengaluru's Vidhana Soudha, on Monday. Pic: GRN Somashekar

 

பிப்ரவரி 10 வரை….

பிப்ரவரி 8 ஆம் தேதியுடன் முடிவடையும் ஐந்து நாட்களுக்கான முன்னறிவிப்பு: அடுத்த 2-3 நாட்களில் மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இரவு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் காலை நேரங்களில் (செவ்வாய்க்கிழமை) மிதமான மூடுபனி பொழிய வாய்ப்புள்ளது. பிப்ரவரி 8 முதல் 10 வரைக்கான கண்ணோட்டம்: வடமேற்கு இந்தியாவின் (ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்) மலைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், அதே நேரத்தில் மிகவும் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

weatherJPG
 

தி வெதர் கம்பெனியின் கண்ணோட்டம்

ஐபிஎம் வர்த்தக நிறுவனமான தி வெதர் கம்பெனி, காற்றின் ஒருங்கிணைப்பு காரணமாக மத்திய இந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் மீது பரவலாக மழை மற்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை தொடரும் எனவும் கணித்துள்ளது. பலவீனமான உள்வரும் மேற்கத்திய இடையூறு, செவ்வாயன்று ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் ஆங்காங்கே பனி அல்லது மழையை கொடுக்கும். வட இந்தியா, வட-மத்திய இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதிகபட்ச நாள் வெப்பநிலை 1-2 டிகிரி செல்சியஸ் குறையும். தென்னிந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகமாகவே இருக்கும். பொதுவாக காற்றின் தரக் குறியீடு தென்னிந்தியாவை தவிர பிற இடங்களில் குறைவாக இருக்கும். குறிப்பாக டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மிகக்குறைவாக காணப்படும்.

 

Translated by Srikrishnan PC

 

 

comment COMMENT NOW