உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், உலகளாவிய தொற்றுநோயால் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு முடங்கியுள்ள நிலையில், பயணத் தொழில் கடுமையான சரிவை எதிர்கொண்டிருக்கிறது என்று ஊகங்கள் எழுந்துள்ளன.

ஆனால், அண்மையில் ஃபேப்ஹோட்டல்ஸ் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பயணங்களை நிர்வகிக்கின்ற தலைவர்களின் கருத்துப்படி, பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதை விட வணிகப் பயணம் விரைவில் முன்னேற வாய்ப்புள்ளது என்று கூறுகிறது.

‘ஸ்டேட் ஆஃப் பிசினஸ் டிராவல் பிந்தைய கோவிட்-19’ என்ற கணக்கெடுப்பின்போது, அதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பதிலளித்தவர்களில், 80 சதவீத பேர்‌, ஆறுமாத லாக் டவுனிற்க்குப் பிறகு தங்கள் நிறுவனம் கோவிட்க்குமுன் இருந்த நிலைக்கு வணிக பயணங்கள் மீண்டும் தொடங்குமென்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியாவின் ஹோட்டல் சந்தை 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். இந்த தொற்றுநோயினால், கார்ப்பரேட் நிறுவனங்கள், பயணம், தங்குவது மற்றும் பொழுதுபோக்குக்காக ஏற்படும் செலவுகளைக் குறைந்த அளவே மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணியில் இருக்கும் விருந்தோம்பல் செயின் வைத்திருக்கும் நிறுவனம் (விருந்தோம்பல் செயின் என்பது ஒரு நிர்வாக நிறுவனமாகும், இது பல ஹோட்டல்களை ஒரே பெயரில் நிர்வகிக்கிறது, ஆனால் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளது) நடத்திய ஆய்வில், 58 சதவீத கார்ப்பரேட்டுகள், தங்கள் பயண செலவுகளில் 15 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட குறைப்பைச் செய்யும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 19 சதவிகிதத்தினர், 15 சதவிகிதத்திற்கும் குறைவான அளவில் குறைத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் 24 சதவிகித கார்ப்பரேட்டுகள் லாக் டவுன் நீக்கப்பட்டப்பிறகு பயண செலவுகள் பழைய நிலைக்கு திரும்பும் என்கிறார்கள்.

மூன்றில் ஒரு பகுதியினர், தங்கள் பதிலில் செலவினங்களைக் குறைக்க, ஊழியர்களைக் கீழ்அடுக்கு ஹோட்டல்களுக்கு நகர்த்த மாட்டோம் என்று கூறியிருந்தாலும், மற்ற மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்கள் பயண செலவுகளைக் குறைக்க இந்த மாற்றத்தைச் செய்யலாமென்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்கள்

இனி சுத்தம், சுகாதாரமே

இந்த ஆய்வில், ஐடி முதல் மருந்து நிறுவனங்கள், மற்றும் ஐடி முதல் எஃப்எம்சிஜி (FMCG) வரையிலான துறைகளில் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது. இந்த ஆய்வில், பதிலளித்தவர்களில் கிட்டத்தட்டப் பாதிப்பேர் 500க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களைக் கொண்டவர்கள். ஆய்வில் பங்குகொண்ட 45 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில்,10 சதவீதத்திற்கும் அதிகமானோர், மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் பயணம் செய்கின்றவர்கள். கார்ப்பரேட்டுகள் பயண செயல்பாட்டில் ஹோட்டல்களில் சுகாதாரம் மற்றும் சுத்திகரிப்பு பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் என்பதில் ஆச்சரியமில்லை. பதிலளித்தவர்களில் மிக உயர்ந்த 93 சதவீதம் பேர் தங்கள் பணியாளர்களுக்காகச் சிறந்த சுகாதாரம் மற்றும் சுத்திகரிப்புக் கொண்ட நல்ல தர அடையாளம் கொண்ட ஹோட்டல்களுக்கு மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். 88.4 சதவீத பேர், தாங்கள் ஹோட்டல்களுடன் போட்டிருந்த ஒப்பந்தங்களை லாக் டவுனுககுப் பிறகு மறு மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளதென்று கூறியுள்ளனர்.

ஆய்வுகளின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கையில் , FabHotels இன் செய்தித் தொடர்பாளர், நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வைபவ் அகர்வால், அதிகாரப்பூர்வ வெளியீட்டில் கூறியதாவது: “வணிகப் பயணிகளின் தேவைகளைப் புரிந்துகொள்வதிலும், அதைப் பூர்த்தி செய்வதிலும் FabHotels முன்னணியில் உள்ளது. சில பெரிய நிறுவனங்களுடனான எங்களது ஒப்பந்தம் அதற்கு ஒரு சான்றாகும். இந்த மோசமான சூழலில் கூட, எங்களது நிறுவன கூட்டாளர்கள் வணிக பயணம் விரைவில் மீட்சிப் பெறும் என்று உற்சாகமாக இருப்பதினால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். லாக் டவுன்க்கு பிறகு சேவைகள் தொடர்ந்து வழங்கிட, சுகாதாரம் மற்றும் சுத்திகரிப்பு தரங்களை பொறுத்த வரையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களிலிருந்து தர விரும்புகிறோம்.

Translated by P Ravindran

comment COMMENT NOW