ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (RCF)  இந்த ஏப்ரல் மாதத்தில் 'சுபாலா'  உரங்களை விற்பனை  செய்ததில் சென்ற ஆண்டை (ஏப்ரல் மாதம்) விட 35.47 சதவீத உயர்வு அடைந்துள்ளது.  மண்ணுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை சுபாலா வழங்குகிறது. லாஜிஸ்டிக்ஸ்  மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளிருந்த சமயத்திலும் இந்த வளர்ச்சி அடைத்துள்ளது.   இது பொதுத்துறை நிறுவனத்தில்  நன்கு அறியப்பட்ட தயாரிப்புகளில் ஒன்றாகும், இது பல முக்கியமான தொழில்துறை இரசாயனங்கள் மற்றும் உரங்களை உற்பத்தி செய்கிறது.

வயல் வரை விநியோகம்

ஆர்.சி.எஃப் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எஸ் சி முட்ஜெரிகர் ஒரு ட்வீட்டில், தற்போது நிலவும் தொற்றுநோய்களின் போதும், ​​மகாராஷ்டிரா அரசாங்கத்தின் விவசாயத் துறையின் உதவியுடன் விவசாயிகளுக்கு,  நிறுவனம் தொடர்ந்து உரங்கள் வழங்கியது. விவசாயிகளின் பாதுகாப்பிற்காக, அவர்களின் வயல்களின் எல்லைக்கே சென்று  உரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், ஆர்.சி.எஃப் இன் டிராம்பே பிரிவு ஆற்றல் செயல்திறனில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது, என பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB),  அறிக்கையில் கூறியுள்ளது.

ஆர்.சி.எஃப் ஒரு மினி ரத்னா நிறுவனம் மற்றும் நாட்டில் உரங்கள் மற்றும் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது யூரியா, சிக்கலான உரங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், நீரில் கரையக்கூடிய உரங்கள் மற்றும் மண் திருத்திகளை (சாயில் கண்டிஷனர் என்பது மண்ணின் உடல் குணங்களை மேம்படுத்துவதற்காக மண்ணில் சேர்க்கப்படும் ஒரு தயாரிப்பு ஆகும்) உற்பத்தி செய்கிறது.

Translated by P Ravindran

comment COMMENT NOW