கோவிட்-19 தொற்றுநோய் இந்திய ஜவுளி மற்றும் ஃபேஷன் துறையைத் துண்டு துண்டுகளாக வெட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றிலிருந்து ஆர்டர்கள் குறையத் தொடங்கியது. மேலும், உள்நாட்டுத் தேவையில் மந்தநிலை காரணமாக விற்பனையில் சரிவைத் தொடர்ந்து லாக் டவுன் காரணமாக, நாடு முழுவதும் சில்லறை விற்பனை கடைகளை மூடியது.

ஆனால் சிக்கல்கள் ஃபேஷன் துறைக்கு புதியதல்ல. இது எப்போழுதும் மாறிவரும் நுகர்வோர்களின் தேவை மற்றும் விருப்பங்களுடன் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். முககவசம் ஒரு பிரிக்க முடியாத துணைப் பொருளாக மாறியுள்ள இந்த நிலையில், ஜவுளித் தொழில் உலகளாவிய அலங்கார கவச துறையில் தனக்கென ஒரு சிறப்பு இடத்தை உருவாக்கி வருகிறது.

சிறந்த வாய்ப்பு

திடீரென்று

இது (முககவச உற்பத்தி) தொழில்துறைக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, ஒரு மாறுபட்ட தயாரிப்பு வரிசையில், இந்த நெருக்கடியான தருணத்தில் வந்துள்ளது என்று ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும், விற்பனைத் தலைவருமான ராம் பட்நகர் கூறியுள்ளார். அலங்கார கோணத்தில், இத்துறையில் யாரும் இதுவரை இப்படி கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

உலகத்தரம் வாய்ந்த சூட்டிங் மற்றும் துணிகளுக்குப் பெயர் பெற்ற ரேமண்ட், அதன் ‘முழுமையான பராமரிப்பு’ முயற்சியின் கீழ் ஒரே முறை பயன்படுத்துவது, மற்றும் மறுபயன்பாட்டு முககவசங்கள், பிபிஇ மற்றும் கையுறைகளை உள்ளடக்கிய பாதுகாப்பு அம்சங்களைத் தயாரிக்கிறது.

முககவசங்களுக்கு இருக்கும் சந்தை, சுமார் ₹10,000-12,000 கோடி என மதிப்பிட்ட பட்நகர், இந்த சந்தையின் பெரும்பகுதி 'அலங்கார கவசங்களுக்கு' இருக்குமென்றும் மீதமுள்ளவை மருத்துவ/அறுவை சிகிச்சை முககவசங்களை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னணி ஜவுளி மற்றும் அலங்கார பிராண்டுகளான ஷாப்பர்ஸ் ஸ்டாப், ஃபேப் இந்தியா, விஐபி க்லோதிங் , ஜோடியாக், மற்றும் ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் சில்லறை பிராண்டுகளான பீட்டர் இங்கிலாந்து, ஆலன் சோலி, லூயிஸ் பிலிப் மற்றும் வான் ஹியூசன் ஆகியோர் தங்கள் ஆடைகளுக்கு ஏற்ப முகக்கவச தயாரிக்கும் படைப்பு வடிவமைப்பாளர்களாக மாறி வருகின்றனர்.

மக்கள் பெருமளவில் பாதுகாப்பு உணர்வை அடைந்து வருவதால், அவர்கள் வெளியேறும் போது முககவசங்களை அணிந்து கொள்வதால், ஜவுளித் தொழில் பலவிதமான முககவசங்களை உருவாக்கி வருகிறதென்று இந்திய டெக்ஸ்ப்ரீனியர்ஸ் கூட்டமைப்பின் (ஐ.டி.எஃப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறினார்.

உள்நாட்டு சந்தை

மேலும்

கூறுகையில், ஏற்கனவே எங்களில் 75 உறுப்பினர் நிறுவனங்கள் முககவச உற்பத்தியைத் தொடங்கி விட்டனர்.

சில்லறைக் கடைகள் மற்றும் ஆன்லைன் சேனல்கள் மூலம் விற்பனை செய்வது உள்நாட்டுச் சந்தையில் தொழில்துறைக்கு இரண்டு பெரிய வாய்ப்புகள் கிடைக்குமென்றும் அவர் கூறினார்.

லூதியானாவை தளமாகக் கொண்ட அலங்கார பிராண்டான 'மேடமீ ' நிர்வாக இயக்குனர் அகில் துகர் ஜெயின் கூறுகையில், 30 முதல் 35 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ள நிலையில், நிறுவனம் முககவச உற்பத்தியை அதிகமாக்கி வருவதாகவும், அடுத்த காலாண்டில் 40,000 முகக்கவசத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யவுள்ளது.

இங்கு 1,500 நிறுவனங்கள் நேரடியாக ஏற்றுமதி செய்கின்றன. வெளிநாட்டு ஒப்பந்தங்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும் இப்போது முககவசங்களை உற்பத்தி செய்யவேண்டும். ஏனெனில் வாங்குபவர்கள் ஆடைக்கேற்ப முககவசங்களை கேட்பார்கள். இது புதிய இயல்பு, என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (டீஏ) தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி தளமான திருப்பூர், தொற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோய் ஏற்பட்டதிலிருந்து வெளிநாட்டு ஆர்டர்கள் சரிய தொடங்கின.

முதலாவதாக, உலகம் முழுவதும் முககவச தேவையில் பெரும் ஏற்றமிருக்கும். மேலும், முககவச தேவைகளில் ஏற்படும் பங்கை பெருமளவில் இந்தியா கைப்பற்ற முடிந்தால் அது ஒரு கூடுதல் வருவாயாக இருக்குமென்று சண்முகம் கூறினார்.

இந்தியா 300 கோடி முககவச ஏற்றுமதி செய்ய முடிந்தால், அது 1 பில்லியன் டாலர் வருவாயை ஏற்றுமதி மூலம் வரவழைக்கும் என்று அவர் கூறினார்.

ஐ.டி.எஃப் இன் தாமோதரன் கூறுகையில், இந்தியாவிலுள்ள அனைத்து ஏற்றுமதியாளர்களும் இந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டால், இந்த ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாய் ₹2,000-3,000 கோடி அளவுக்குக் காணலாம், என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல, வீட்டுத் தையல்காரர்கள் மற்றும் ஃபேஷன் டிசைனர்கள் கூட இந்த தேவையான நேரத்தில் நாகரீகமான முககவசங்களை தயாரித்து பணம் பார்க்கிறார்கள்.

இது ஒரு பெரிய சந்தையாக இருக்கும். முககவச உற்பத்தியில் ஏராளமான ஃபேஷன் நிறுவனங்கள் ஈடுபடும்; கண்டிப்பாக அமைப்புசாரா துறையும் பெரிய அளவில் பங்கேற்கும். ஏனென்றால் ஒவ்வொரு சாமானியரும் அதை அணியப் போகிறார்கள், ”என்று ரேமண்டின் பட்நகர் கூறினார். .

பிராண்டுகள் தங்களிடமுள்ள விநியோகத்தின் மூலம் எந்த துறைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் பார்த்து அதில் பங்கேற்பதின் மூலம் சந்தையில் பிராண்டுகள் பற்றிப் புரிந்து கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறினார்.

Translated by P Ravindran

comment COMMENT NOW