சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) (Adjusted Gross Revenue) பிரச்சினையில் எந்தவொரு நிவாரணத்தையும் தர உச்சநீதிமன்றம் மறுப்பதால் வோடபோன் ஐடியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

 

தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் பி.எல்.சி மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் நிர்வாகம் முன்னதாக நிறுவனத்தின் எதிர்காலம் ஏ.ஜி.ஆர் மற்றும் உரிமக் கட்டணமாக பெரும் பணம் செலுத்துவதில் நிவாரணத்தைப் பெறுவதைப் பொறுத்தது என்று சுட்டிக்காட்டியிருந்தனர்.

 

இந்நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை ரூ50,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்த கட்டணத்தில் சிறிது நிவாரணம் கிடைக்கும் என்று இந்நிறுவனம் பெரிதும் நம்பியிருந்தது, ஆனால் உச்ச நீதிமன்றமும் கைவிரித்துள்ளது. 

 

வோடபோன் ஐடியா உள்ளிட்ட அனைத்து ஆபரேட்டர்களுக்கும் உடனடியாக கட்டணம் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நிலுவைத் தொகை  வசூலிப்பை தாமதப்படுத்தியதற்காக தொலைத் தொடர்புத் துறையையும் (DoT) கடிந்துகொண்டது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக வோடபோன் ஐடியாவின் பங்கு விலை 11 சதவீதம் சரிந்தது.

 

இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டுள்ள வோடபோன் குழுமம் புதன்கிழமை, இந்தியாவில் தனது கூட்டு நிறுவனத்தின் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது என கூறியுள்ளது.

 

"வோடபோன் ஐடியா லிமிடெட் (வி.ஐ.எல்) பற்றிய கண்ணோட்டம் கவலையாகவே உள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு செலுத்தும் தொகையும் அத்ற்க்கான சதவீதமும் சரியானது என்பதை உறுதிப்படுத்த வி.ஐ.எல் இந்திய அரசிடமிருந்து பல்வேறு நிவாரணங்களை நாடுகிறது, மேலும் நிவாரணம் கிடைத்தால் மட்டுமே மற்ற கடமைகளை பூர்த்தி செய்ய முடியும், ”என்று வோடபோன் குழுமம் தனது மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

வோடபோன் ஐடியாவின் நிகர இழப்பு 2019 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒப்பிடத்தக்க ஆண்டின் முந்தைய காலகட்டத்தில் ரூ.5,004.6 கோடியாக இருந்தது.

 

 

 

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW