குறுவை சாகுபடியிலிருந்து (மார்ச்/ஏப்ரல்) சம்பா சாகுபடிக்கு (மே/ஜூன்) விவசாயத்துறை தயாராகிகொண்டிருக்கும்

இந்நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்று நோய், நாட்டை தாக்கி உள்ளது.

மார்ச் 25 முதல் நாட்டில் லாக் டவுன் உள்ளது, ஏழாவது வாரமாக நாங்கள் செயலற்ற நிலையில் இருக்கிறோம். ஏப்ரல் மாத இறுதியில் தான் அழுத்தம் காரணமாக விவசாயத் துறையை மெதுவாகத் திறக்க அரசாங்கம் இசைந்தது.

மார்க்கெட்டிங் சாலைகள் (மண்டிகள்) இப்போது வியாபாரதக்காக திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்கள். பெரும்பான்மையான மண்டிகள் (70 சதவீதத்திற்கு மேல்) வணிகத்திற்காகத் திறந்திருக்கின்றது என மதிப்பீடு சொல்கிறது. ஆனால் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகக் கடினமாக உள்ளது.

மார்ச் மாத இறுதியிலிருந்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துவிட்டன. அவர்களுக்கு வேலை பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை. போக்குவரத்து வசதியில்லாத நிலையில், பலர் சிக்கியுள்ளனர். இதனாால் விவசாய துறையில் வேலையாட்கள் பற்றாக்குறை, பயிர்களை விற்பனைக்கெடுத்துச் செல்வதில் பாதிப்பு நிலவுகிறது.

பற்றாக்குறைக்கான சாத்தியம்

தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பிற பயிர்கள் வயல்களிலிருந்து பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு அவை நுகர்வோர்களுக்கு ஏற்ற வகையில் உணவுப் பொருட்களாக மாற்றப்படும். பொருட்களை எடுத்துச் செல்லும் இந்த செயல்முறை நேரம் எடுத்துக்கொள்ளும். போதுமான மூலப்பொருள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாகத் தொழிற்சாலைகளை முழுஅளவில் இயங்க முடியவில்லை.

மேலும். ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்து, பணப்புழக்கத்தை விரிவுபடுத்திய போதிலும், வணிக வங்கிகள் நிதியளிக்கத் தயக்கம் காட்டுகின்றன. உணவு மூலப்பொருளைப் பதப்படுத்தும் துறையைச் சார்ந்த பிரிவுகளுக்கு நடைமுறை மூலதனம் எளிதாகக் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, அவர்களால் மூலப்பொருட்களுக்கு வேண்டிய சரக்குகளின் இருப்பை அதிகரிக்க முடியவில்லை.

எண்ணெய் வித்துக்களை அரைக்கும் ஆலைகள், பருப்பு ஆலைகள், அரிசி ஆலைகள், கோதுமை மாவு ஆலைகள் போன்றவைகள் இன்னும் வேலையைத் தொடங்க முடியவில்லை.

இந்த சூழ்நிலை ஆபத்தானது. இந்த நிலை தொடர்ந்தால், நகர்ப்புற நுகர்வுப் பகுதிகளில் வரும் வாரங்களில் முக்கிய உணவுப்பொருட்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். இதுவரை, நிறுவனத்தின் கைகளிலிருந்த விற்காத பொருட்களின் மூலம் நகர்ப்புற நுகர்வோருக்கு உணவளிக்க உதவியது. அதனால், குறிப்பிடும்படியாக பற்றாக்குறை ஏற்படவில்லை.

விலை உயர வாய்ப்பு

பதப்படுத்தும் நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்க முடியாவிட்டால், பற்றாக்குறை உருவாகி விலை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. அப்படி நடந்தால், துயர் நிறைந்த காலமாக இருக்கும். ஏனென்றால், பெரிய அளவில் உணவு பற்றாக்குறை இல்லை. இந்திய உணவுக் கழகம் 50 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமையை வைத்திருக்கிறது, அதே நேரத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NAFED) இரண்டு மில்லியன் டன் பருப்பு வகைகளை வைத்திருக்கிறது. கோதுமை (சுமார் 35 மில்லியன் டன் ) மற்றும் பருப்பு வகைகள் (1.5 மில்லி டன்) மற்றும் ரபி கொள்முதல் மூலம் இருப்பு கூடும். வேறு விதமாகக் கூறுவதென்றால், விநியோக தொடர்பில் இடையூறுகள் வருவதை - பண்ணைகள் முதல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் வரை அங்கிருந்து நுகர்வோர் உணவு கூடங்கள் வரை - தாமதமின்றி கையாளப்பட்டு சீராக்கப்பட வேண்டும்.

பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், விலைகளை உயர்த்தி விரைவாகப் பணம் சம்பாதிக்கும் போக்கு இயற்கையாக உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களான பருப்பு, ஆட்டா, அரிசி மற்றும் சமையல் எண்ணெய் போன்றவைகளுக்கு நடந்ததை சில வாரங்களுக்கு முன்பு நாம் பார்த்திருக்கிறோம், ஏனெனில் நுகர்வோர்கள் கிடைக்காதென்று பயந்து தினசரி தேவைகளுக்காக பொருட்களை அதிகம் வாங்குவார்கள்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு உண்மையில் பற்றாக்குறை இல்லை என்று தேசத்திற்கு உறுதியளிக்க வேண்டும். அதே நேரத்தில், உணவுத் துறையில் தொடர் பங்கேற்பாளர்கள், குறிப்பாகப் பதப்படுத்துபவர்கள், வியாபாரம் செய்வதில் தங்களின் சுதந்திரத்தின் அளவு எந்த வகையிலும் குறைக்கப்படாதென்று உறுதியினை விரும்புவார்கள்.

அரசாங்கத்தின் ஆதரவு

இந்திய அரசு, ரிசர்வ் வங்கி மூலம், வணிக வங்கிகள் முறையான விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியான நபர்களுக்குக் கடன் வழங்குவது அவசியம். உழைப்பார்களை ஈர்ப்பதும் ஒரு சவாலாக இருக்கும். இலவச ரேஷன்களை வழங்குவது விருப்பமில்லாத ஒன்றாக உள்ளது. அறிவிப்புக்கு முன்னர் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்பது துன்பகரமானது. ஏப்ரல் மாதத்தில் கொடுக்க வேண்டிய ரேஷன்கள், மே மாதத்தின் முதல் வாரத்தில் கூட சிலரை எட்டவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நடந்துகொண்டிருக்கும் குறைபாடுகளிலிருந்து கொள்கை வகுப்பாளர்கள் எதையும் கற்றுக்கொள்கிறார்களா என்பது யூகமாக உள்ளது; ஆனால் அவசியம், உணவு வழங்க வேண்டும், குறிப்பாக வாக்குறுதியளிக்கப்பட்ட இலவச ரேஷன், நிலைமை எப்படியிருந்தாலும், தாமதமாக வழங்கக் கூடாது.

சமூக சமையலறைகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சமூக சமையலறைகளைச் சரியான அளவில் இயக்க வேண்டும் .ஆறு வாரங்களாக உள்ள லாக் டவுன், மற்றும் அளவாக உணவு வழங்குதல், சத்து உணவை மட்டும் நீக்கி பார்த்தால், பல மில்லியன் தொழிலாளர்களுக்கு மோசமான நிலையில் இருக்கும். ஊட்டச்சத்தின் அளவு மேலும் மோசமாகப் பாதிக்கும் என்பது உறுதி. எதை இழந்தோமோ மீண்டும் அதைப் பெறப் பல மாதங்கள் ஆகலாம்.

இதற்கிடையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து, முதன்மை மற்றும் இரண்டாம் நிலையிலுள்ள உணவு பதப்படுத்தும் பிரிவுகள், நிதி உட்பட அனைத்து ஆதரவையும் பெற்று அவர்களின் செயல்பாடுகள் இயல்பாக உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஏதேனும் பிரச்சினைகளிருந்தால் உன்னிப்பாகக் கவனித்துத் தீர்க்கவேண்டும். உள்ளூர் உணவுத் பிரச்சினைகள் மற்றும் வர்த்தக அமைப்புகள் நிர்வாகத்திற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

(எழுத்தாளர் கொள்கை விமர்ச்சனையாளர் மற்றும் வேளாண் வணிக நிபுணர். கருத்துக்கள் தனிப்பட்டவை.)

Translated by P Ravindran

comment COMMENT NOW