மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமையன்று சில சேவைகளை ஏப்ரல் 20ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்துள்ளது. தொழில்துறை நடவடிக்கைகள், குறிப்பாக நகர்ப்புறங்களுக்கு வெளியே, முக்கியமாக அத்தியாவசிய சேவைகள் மற்றும் விநியோகங்களைப் பராமரிக்க உதவியாக வர்த்தகம் செய்பவர்களுக்கு பொது இடங்களில் இரந்து விதி விலக்கு

அளிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம சுற்றறிக்கை கூறியுள்ளது.

இருந்தாலும், பொது போக்குவரத்து சேவைகள், விமானங்கள் மற்றும் ரயில்கள் உட்பட, வணிக வளாகங்கள் மற்றும் மால்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு மே 3 வரை பொது ஊரடங்கு தொடரும். பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள் இயங்காது, ​​நீண்ட தூர பயணத்திற்கு, சுகாதார சேவையை வழங்குவோர் தவிர, நீட்டிப்பு செய்யப்பட்ட லாக் டவுன் ரத்து செய்யும் வரை ரயில்கள் மற்றும் விமானங்களில் செல்ல முடியாது. இக்காலகட்டத்தில் அனைத்து சமூக, அரசியல், மத, விளையாட்டு, கல்வி மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகள் தடை செய்யப்பட்டதாக இருக்கும்.

விதிவிலக்கு

ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் ( அதிகப்பட்சமாக 20 நபர்கள்) இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், குறைந்த அளவில் கட்டுமானம், சுரங்கம், கூரியர் சேவைகள், ஈ-காமர்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அதற்கு உண்டான பொருட்களை இயக்குவதற்கு --உதாரணமாகப் பண்ணை உபகரணங்களைப் பழுதுபார்க்கும் கடைகள் மற்றும் நெடுஞ்சாலை சாப்பாட்டுக்கடைகள் -- போன்றவை ஏப்ரல் 20 முதல் செயல்பட அனுமதிக்கப்படும்

இந்த நெறிப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் நோக்கம், முதல் கட்டத்தில் அடைந்த பலன்களை தக்கவைத்துக்கொள்வது, கோவிட் 19 பரவலை மேலும் குறைப்பது, விவசாயிகள், தொழிலாளர்கள், தினவேலை செய்பவர்களுக்கு ஊதியம் கிடைக்க, வழிவகை செய்வதேயாகும்.

நிபந்தனைகள்

வேலை செய்யும் இடங்களிலும், பொது இடங்களிலும் கட்டாயமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட முககவசம் அணிவது, நல்ல சுகாதாரம் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்காக சில தேசிய வழிகாட்டுதல்கள் உள்ளன.

சுகாதாரம் மற்றும் சுத்தமாக இருபதற்கான பொருட்கள் மற்றும் சுத்திகரிப்பான் (sanitisers,) வழங்குவது போன்ற சுகாதார நடவடிக்கைகள், அளவான வேலை நேரம், நுழைவுகளில் கட்டுப்பாடு, வெப்ப சோதனை கருவி சோதித்தல் மற்றும் துப்புவதற்கு அபராதம் விதித்தல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை மீறினால் அபராதம் விதிக்கவேண்டுமென வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாடு

இந்த விதிவிலக்கு மண்டலங்களில், மருத்துவ அவசரநிலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு கடமைகள் மற்றும் அரசாங்க வணிக தொடர்ச்சி போன்ற அத்தியாவசிய பராமரிப்பதைத் தவிர, எந்தவொரு குடிமகனும் வருவது/செல்வது சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.

அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 பாதிக்கப்பட்டோர் அல்லது வேகமாக பரவும் மாவட்டங்களில், வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களை பிரித்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் மற்றும் கடுமையான எல்லை கட்டுப்பாடு மற்றும் தேவைல்லாமல் நடமாடுவதிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன.

ஏப்ரல் 20 முதல் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் விவசாய மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் ழுமையாக செயல்படவும், கிராமப்புற பொருளாதாரம் முழுதிறனுடன் செயல்படவும், தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், குறிப்பட்ட தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கவும், போதுமான பாதுகாப்புடன் மற்றும் நிலையான இயக்க முறை (SOP) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் பலன்பெறும்

அத்தியாவசிய அல்லது அத்தியாவசியம் இல்லாத பொருட்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.

வேளாண்பொருட்கள், வேளாண் பொருட்களைக் கொள்முதல், அனுமதிக்கப்பட்ட கிடங்குகள் மூலம் விவசாய பொருட்களை சந்தைப்படுத்தல் மற்றும் நேரடி மற்றும் பரவலாக சந்தைப்படுத்தல், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் சில்லறை விற்பனை உள்ளிட்டவை; கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத்திற்காக நடவடிக்கை எடுத்தல்; கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள், பால், பால் பொருட்கள், கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவை; மற்றும் தேநீர், காபி மற்றும் ரப்பர் தோட்டங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புற பொருளாதாரத்திற்கு உத்வேகம் கொடுக்கவும், கிராமப்புறங்களில் இயங்கும் தொழில்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள்; கிராமப்புறங்களில் சாலை அமைத்தல், நீர்ப்பாசன திட்டங்கள், கிராமபுறங்களில், கட்டிடங்கள் மற்றும் தொழில்துறை திட்டங்கள்; நீர்ப்பாசனம் மற்றும் நீர் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் MNREGA-கீழ் செயல்படுவது; கிராமப்புற சேவை மையங்களின் (சி.எஸ்.சி) செயல்பாடுகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் கிராமப்புற தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சமூக தொலைதூரத்திற்கான SOPஐ அமல்படுத்திய பின்னர் SEZ கள், EoU கள், தொழில்பேட்டைகள் மற்றும் தொழில்துறை நகரங்களில் நுழைவு கட்டுப்பாட்டுடன், உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. மென்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன. நிலக்கரி, தாது மற்றும் எண்ணெய் உற்பத்தி போன்றவை அனுமதிக்கப்படுகின்றன

அதே நேரத்தில், செபி (SEBI) மற்றும் காப்பீட்டு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட நிதித் துறையின் முக்கிய துறைகளான ரிசர்வ் வங்கி, வங்கிகள், தானியங்கி பணமெடுக்கும் யந்திரம் (ATMs), மூலதனம் மற்றும் கடன் சந்தைகள் ஆகியவை செயல்படும், இது தொழில்துறையில் பணப்புழக்கம் இருக்கவும் மற்றும் கடன் உதவி வழங்குவதற்கு வசதியாக இருக்கும்.

மாற்றப்பட்ட வழிகாட்டுதல்கள் அனைத்து சுகாதார சேவைகள், சமூகத் துறையும் செயல்பட அனுமதிக்கின்றன; எந்தவொரு இடையூறும் இல்லாமல் பொதுமக்கள் பயன்பாட்டுச் சேவைகள் இயங்க வேண்டும்; அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடையில்லாமல் செயல்பட வேண்டும், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான அலுவலகங்கள் தேவையான வேலையாட்களுடன் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

Translated by P Ravindran

comment COMMENT NOW