“தயவுசெய்து எனது தந்தையை தற்கொலை செய்து கொள்ளாமல் காப்பாற்றுங்கள்”.

குடியரசுதினத்தை முன்னிட்டு மூன்றாம் வகுப்பு மாணவர்களை மாநிலமுதலமைச்சருக்கு கடிதம் எழுதுமாறு ஒரு வகுப்புஆசிரியர் கேட்டபோது,​​சிறுமி தனஸ்ரீபிக்காட் எழுதியவரிகள்தான் இவை.

மரண எண்ணங்களால் வேட்டையாடப்பட்ட அந்த சிறுமி தன்உணர்ச்சிகளைகடிதத்தில்வெளிப்படுத்தினாள்.

“எனது தந்தை ஒரு விவசாயி.  ஆனால் எங்கள் உஸ்மானாபாத் மாவட்டத்தில் விதைக்கும்போது மழைபெய்யாது, எனவே பயிர் இல்லை. அப்பா எப்போதும் பதற்றத்தில்இருக்கிறார் ...தற்கொலையைத் தவிர வேறுவழியில்லை என்று அவர் சொல்லும் ஒவ்வொருமுறையும் நான் பயப்படுகிறேன் ...விவசாயிகள் தற்கொலை செய்திகளை தாங்கிய நாளேடு எங்கள் பள்ளிக்கு வருகிறது ...தயவுசெய்து என்தந்தைக்கு உதவுங்கள்.  "மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடாபிராந்தியத்தில்,உஸ்மானாபாத் மாவட்டத்தின் கலாம்பில் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஜில்லா பரிஷத் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனஸ்ரீ இவ்வாறு எழுதினார்.

தொடர்ச்சியான பயிர்தோல்விகளுக்குப்பிறகு, தனஸ்ரீயின் தந்தை அஷ்ரூபா ஒரு கோழிநிறுவனத்தில் முதலீடுசெய்தார். அது லாபம் மிக்க ‘கடக்நாத்’ கோழிகளை வளர்க்க உதவுவதாக உறுதியளித்தது. (கடக்நாத் என்பது வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் காணப்படும் கருமை நிறம் கொண்ட அரியவகை கோழி இனம் ஆகும் ).  ஆனால், அஷ்ருபா உள்பட 10,000 விவசாயிகள்,அந்நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வது பற்றி அடிக்கடி பேச ஆரம்பித்தார். அவரது விரக்தியான மனநிலையும்,வீட்டில்அதனால்ஏற்படும்சச்சரவுகளும்தனஸ்ரீயைபாதித்துள்ளது.அதன்வெளிப்பாடேமேற்கூறியகடிதம்.

இது தனஸ்ரீயின் கதை மட்டும் இல்லை. மராத்வாடாபிராந்தியத்தில்அவளைபோல்ஆயிரக்கணக்கானசிறுமிகள்மரணத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

“இப்பகுதியில்உள்ளபெண்களுக்குவாழ்க்கைஎளிதானதுஅல்ல.குடும்பத்தில்ஆண்கள்எப்போதுவேண்டுமானாலும்தங்கள்வாழ்க்கையைமுடித்துக்கொள்வார்கள்என்றபயம்எப்போதும்இருக்கும்.சிலநேரங்களில்ஒருதலைகீழ்எதிர்வினைஉள்ளது.பலபெண்கள்தங்கள்பெற்றோரைகல்விமற்றும்திருமணச்சுமையிலிருந்துவிடுவிப்பதற்காகதற்கொலைசெய்துகொள்கிறார்கள், ”என்கிறார்விவசாயிகீதாகெய்க்வாட்.

தனஸ்ரீமாநிலமுதல்வருக்குகடிதம்எழுதியுள்ளார்.

ஆனால்சிலஆண்டுகளுக்குமுன்பு,லாதூரைச்சேர்ந்தஷீட்டல்வயல்மற்றும்மோகினி பிஷே ஆகியோர்தங்கள்குடும்பங்களுக்குகடிதங்கள்எழுதிவைத்துவிட்டு தங்கள் முடிவை தேடிக்கொண்டனர்.தங்கள்தந்தையர்களின்உயிர்வாழ்வதற்கானபோராட்டம்மற்றும்வரதட்சணைபோன்றபழக்கவழக்கங்கள்தங்கள்வாழ்க்கையில்சிரமங்களைஅதிகப்படுத்தின என அவ்விரு கடிதங்களிலும் எழுதப்பட்டு இருந்தது.

விவசாயிகளுக்கும்அவர்களதுகுடும்பங்களுக்கும்எந்தவிதமானஉளவியல்ஆதரவும்இல்லைஎன்றுபீட் மாவட்டத்தை சேர்ந்தசமூகஆர்வலர்அசோக்டாங்டேகூறுகிறார்.அரசாங்கமுயற்சிகள்போதுமானதாகஇல்லைஎன்றும்,மராத்வாடாமற்றும்விதர்பாபிராந்தியங்களில்வலுவானஆலோசனைமையங்கள்மற்றும்வழிகாட்டுதல்முறையைஉருவாக்கவேண்டியஅவசியம்உள்ளதுஎன்றும்அவர்கூறினார்.

இதற்கிடையில்நந்தேட் பகுதியை சேர்ந்த ஈஸ்வர்ஜாதவ்என்றவிவசாயிவிஷத்தைஉட்கொண்டுசெவ்வாய்க்கிழமைதனதுவாழ்க்கையைமுடித்துக்கொண்டார்.கடன்சுமையால் அழுத்தப்பட்ட யாதவ் அவரது மகளின் திருமணத்தை பற்றியும் கவலை கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது.

Translated by Gayathri G

comment COMMENT NOW