நிசர்கா புயல் மகாராஷ்டிரா மற்றும் மும்பை வட்டாரங்களில் தொலைத் தொடர்பு சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், மின்சாரம் செயலிழந்ததால் சில சிறிய இடையூறுகள் ஏற்பட்டது.

பெரும்பாலான தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதமடையாததால், தொலைத்தொடர்பு நெட்வொர்க்க்கு பெரிய சேதம் ஏற்படவில்லை,. ஆனால், மின் தடை காரணமாக சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அனைத்து கோபுர நிறுவனங்களும் புயல் நிலைமையை சமாளிக்க தங்கள் ஊழியர்களை அதிகப்படுத்தினர். தளங்களில் அதிக டீசல், மொபைல் டீசல் ஜெனரேட்டர் மற்றும் கூடுதலாகச் செல் ஆன் வீல்ஸ் (COW) (என்பது ஒரு சிறிய நடமாடும் மொபைல் செல்லுலார் தளமாகும், இது செல்லுலார் கவரேஜ் குறைவாகவோ அல்லது சமரசமாகவோ இருக்கும் இடங்களுக்குத் தற்காலிக நெட்வொர்க் மற்றும் வயர்லெஸ் கவரேஜை வழங்குகிறது) தளங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, என்று டவர் மற்றும் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் டி ஆர் துவா, பிசினஸ்லைனிடம் தெரிவித்தார்.

தைபே (TAIPA) புள்ளிவிவரங்கள் படி மகாராஷ்டிராவில் மொத்தம் 62,795 கோபுரங்கள் உள்ளன. மே மாத தொடக்கத்தில், கிழக்கு இந்தியாவைப் புயல் ஆம்பன் தாக்கிய பின்னர், தொலைத்தொடர்பு சேவைகள் தடைப்பட்டன, ஏனெனில் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தில் மின் தடை காரணமாக 4,000 தொலைத்தொடர்பு கோபுரங்களில் பாதிக்கப்பட்டன

வோடபோன் ஐடியா லிமிடெட் (விஐஎல்) தனது நெட்ஒர்க்கை கண்காணிக்க ஒரு சிறப்பு அறையை ஏற்படுத்தி நிசர்கா புயல் மகாராஷ்டிராவைக் கடக்கும் பொழுது எந்தவொரு அவசர சூழ்நிலையையும் சமாளிக்க குழுக்களைத் தயார் நிலையில் வைத்து இருந்தது

புயல் நிசர்கா கடலை கடப்பதற்கு முன்பே தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒரு தயார் கூட்டத்தை நடத்தி, மகாராஷ்டிரா, மும்பை மற்றும் குஜராத்தில் இணைப்புகள் செயலில் இருக்க ஏற்பாடு செய்திருந்தது.

comment COMMENT NOW