இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை நிதியாண்டின் முதல் பாதியில் தற்காலிகமாகப்  பின்தங்கி இருந்தாலும், இரண்டாம் பாதியில் மீண்டெழும் என்று முன்னணி நிறுவனங்களின்  நிபுணர்கள் மற்றும் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நடுத்தர மற்றும் சிறிய அளவிலான  நிறுவனங்களில் வேலை இழப்புகள் ஏற்படலாம், ஆனால் அது பெரிய அளவில் இருக்காது என்று அவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

உலக அளவில் தொற்று (கோவிட் 19) பரவுவது மற்றும் இறப்பு குறித்த பயம் இன்னும் இருக்கையில், கோவிட் -19க்கு  முதலில்  பாதிப்புக்கு  உள்ளான சீனா வேகமாகப் பழைய  பாதைக்குத் திரும்பி வருவதை  சில நேர்மறை எண்ணங்கள் கொண்ட முதலீட்டாளர்கள் புறக்கணிப்பதாகத் தெரிகிறது" என்று பங்குத் தரகு நிறுவனமான ‌ஆனந்த் ரத்தி ரிசர்ச், முதலீட்டாளர்களுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்துள்ளது.

அந்த குறிப்பில், நிதியாண்டு 21ல் இந்தியத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 3 சதவீதம் குறைவாக இருந்தாலும், இது இரண்டாம் பாதியில் வளர்ச்சியைக் காணக்கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படியில் ஆள் குறைப்பு  குறைவாக இருக்கும், என்று கூறியுள்ளது

நெருக்கடியை சமாளிப்பு

பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த இக்கட்டான நேரத்தில் தங்களது வேலையை 90 சதவிகிதம் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலை எடுத்ததால் நெருக்கடியைச் சமாளித்தனர், இதன் விளைவாக உற்பத்தி நாட்களில் 5 சதவீதம் மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தங்கள் பெயரை குறிப்பிட விரும்பாத சில உயர் அதிகாரிகள் கூறுகையில், Q4 முடிவுகளுக்கு முன்னதாக இந்த நிறுவனங்கள் செயலற்ற  நிலைக்குத்  தள்ளப்பட்டன. அதனால், வருவாயில் குறுகிய காலத்திற்குப் பாதிப்பு ஏற்படும். அதே  சமயம்,  தொலை நோக்கில் கவனிக்கையில் குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் சிறு மாற்றத்துடன் பெற வாய்ப்பு உள்ளது, என்று அவர்கள் கூறியுள்ளனர்.

"வெளிப்படையாகப் பார்க்கும்பொழுது குறைந்த வெளிச்சமாகத் தெரியும், ஆனால் முன்னோக்கிச் சென்றால், எதிர்பார்த்தை விடப் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும்" என்று நிர்வாகிகளில் ஒருவர் கூறினார்.

பெரிய நிறுவனங்கள் (MphasiS, LTI, Mindtree) போன்றவை மிகவும் திறமையானவர்கள்; சிறிய நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன, அவற்றின் விநியோகத்தில் கவனக்குறைவு ஏற்பட்டது. சப்ளை பக்கத்தை விடத் தேவை பக்கத்தில் சிக்கல் அதிகம்.  நிகர அடிப்படையில், FY22 நிதியாண்டில் இயல்பு நிலைக்குத் திரும்பும்  (மூடும் நிலைக்கு வராது ), என்று நாங்கள் கருதுகிறோம், என அவர்கள் கூறுகின்றனர்.

இன்போசிஸ்ஸிக்கு பாதிப்பு குறைவு

இன்ஃபோசிஸைப் பொறுத்தவரை, அவுட்சோர்ஸ் வணிகத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் இருந்த இடத்திலிருந்தே முடித்துத் தரும் திறனை கொண்ட நிறுவனம், ஒரு நிபுணர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தாக்கம் முக்கியமாக கன்சல்டிங் (ஆலோசனை) வணிகத்தில் அதிகமாக காணப்படுகிறது, அதே நேரத்தில் அவுட்சோர்சிங் வணிகம் இன்னும் ஆரோக்கியமாக உள்ளது. கோவிட்-19 நேரிடையாக பாதிக்கப்பட்ட வணிகங்களைப் பார்க்கும் பொழுது (ஒரு தனிப்பட்ட  பொருட்களை அடுத்த நிறுவனத்திற்கு   விற்பனை செய்து அந்த வருமானத்தை நம்பி இருக்கும் நிறுவனங்கள்) இதுவரை எந்தவொரு விநியோக இடையூற்றையும் காணவில்லை என்று ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தனது மார்ச் 30 குறிப்பில் தெரிவித்துள்ளது.

பெரிய ஒப்பந்தமான டி.சி.வி (மொத்த ஒப்பந்த மதிப்பு) புள்ளி தரும் தகவலின்படி, FY20 முதல் ஒன்பது மாதங்கள் 7.3 பில்லியன் டாலர்கள்  அளவில் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது, இது YOY அடிப்படையில் 56 சதவீதம் அதிகரித்துள்ளது, இது அடுத்து வரும்  கால வளர்ச்சிக்கு வசதியாக இருக்கும் .

இத்தகைய பெரிய இடையூறுகளிலிருந்து இன்போசிஸ் பாதிப்பில்லாமல் இருப்பதற்கான ஒரு முக்கிய காரணம், என்னவென்றால் அதன் தொழில் கூட்டாளிகளுடன் உள்ள தொடர்பு, சான்றிதழ்களுக்கு அப்பால் இணை கண்டுபிடிப்பு மையங்கள், தொழில் தீர்வுகளை உருவாக்குவது, ஐ.எஸ்.வி கூட்டாண்மைகள் மற்றும் ஒப்பந்தங்களில் போது  இணைந்து கொடுப்பது அல்லது பெறுவது என்ற அளவில்  விரிவடைந்துள்ளது, என்று அந்த பங்குத் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்த ஒப்பந்தங்கள், செயல்படுத்தல், வெளிக்கொணர்வது, மற்றும் மேம்படுத்துதல்,  சரிபார்த்தல், மற்றும் ஆதரவு சேவைகளில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டுள்ளது.

சமீபத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்,  இன்ஃபோசிஸுக்கு தொடர்ந்து ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும், மேலும் இது உற்பத்தி / தொழில்துறை மற்றும் சில்லறை மற்றும் சிபிஜி வெர்டிகல்ஸ்  (CPG verticals) போன்றவற்றில் பிரதிபலிக்கிறது.

சமீபத்திய காலாண்டுகளில் $8 1.8 பில்லியினுக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு டிஜிட்டல் மாற்ற ஒப்பந்தங்களையும் இன்போசிஸ்  பெற்றது. கோவிட் -19க்கு பிறகு பெரும் சந்தர்ப்பத்தை எல்லா திசைகளிலும் உருவாகக் கூடும் என்பதால்  ஆரோக்கியமான வளர்ச்சியைக்  காணும்  என்று நாங்கள் நம்புகிறோம், என அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது

மேலும் அமெரிக்க நிறுவனங்கள், பி.எஃப்.எஸ் (வங்கி, நிதி சேவைகள்) மற்றும் தொலைத் தொடர் வணிகத்தில்  செலவைக் குறைக்கும். அதே நேரத்தில் சில்லறை, பயணம் மற்றும் எரிசக்தித் துறையில்  பாதிப்பு இருக்காது. வங்கி சேவைகள் அத்தியாவசியமாகக் கருதப்படுவதால், எனவே, இந்தத் துறை உலகம் முழுதும்  நிலவும்  லாக் டவுனாலிருந்து ஓரளவு தப்பிக்க வாய்ப்புள்ளது, என்று ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

Translated by P Ravindran

comment COMMENT NOW