கோடை வெப்பத்திற்கு ஏற்ப குளு குளு என சீசனின் ராஜாவான மாம்பழத்தை ருசிக்கும் கனவில் இருக்கிறீர்களா? அப்போ, இந்த செய்தியை படிங்க!

 

கடந்த ஆண்டு நீடித்த பருவமழை மற்றும் மகாராஷ்டிராவின் பிற காலநிலை மாற்றங்கள் கொங்கன் பகுதியில் உள்ள அல்போன்சோ மாம்பழங்களை பாதித்தன. இது பூ பூக்கும் மற்றும் பழ அமைப்புக்கு தாமதம் விளைவித்து, உற்பத்தியில் கிட்டத்தட்ட 50-60 சதவீதம் சரிவுக்கு வழிவகுக்கிறது.

அல்போன்சோ மாம்பழங்கள் வழக்கமாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் முக்கிய சந்தைகளுக்கு வரும். ஆனால் இந்த ஆண்டின் சீசன் கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை தாமதமாகும். அல்போன்சோ மாம்பழங்களின் வழக்கமான விநியோகம் மார்ச் இறுதிக்குள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நவி மும்பையின் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (ஏபிஎம்சி) இயக்குநர் சஞ்சய் பன்சாரே பிசினஸ்லைனிடம் கூறுகையில்: பற்றாக்குறை காரணமாக மொத்த சந்தையில் பெட்டி  ஒன்றுக்கு ரூ. 6,000- 9,000 வரை (ஐந்து டஜன்) அதிகரித்துள்ளது என்று கூறினார். கடந்த ஆண்டு ஒப்பிடத்தக்க காலகட்டத்தில், தரத்தைப் பொறுத்து ஒரு பெட்டி ரூ. 3,000-6,000 என இருந்தது, என்றார்.

 

கடந்த ஆண்டு, தினமும் சுமார் 30,000 பெட்டிகள் சந்தையில் வந்து கொண்டிருந்தன. ஆனால், இன்று ஒவ்வொரு மாற்று நாளிலும் வெறும் 5,000 பெட்டிகள் மட்டுமே வருகின்றன என்று பன்சரே கூறினார்.

 

ஒரு சில சில்லறை விற்பனையாளர்கள் மும்பையின் வசதியான பகுதிகளில் ஒரு டசனுக்கு, ரூ.2,500 க்கு விற்கிறார்கள். அல்போன்சோ மாம்பழங்களின் தனித்துவமான சுவை காரணமாக, அவை சந்தையில் பிரீமியம் என்று கூறப்படும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. கொங்கனின் தேவ்கட் பகுதியில் பயிரிடப்படும் மாம்பழங்களுக்கு அவற்றின் சொந்த புவிசார் குறியீடு (Geographical Indication-ஜிஐ) உள்ளது.

பொதுவாக கொங்கன் பிராந்தியத்தில் 3,000 மி.மீ மழை பெய்யும் என்று மகாராஷ்டிரா தோட்டக்கலை வாரியத்தின் முன்னாள் உறுப்பினரும் மாம்பழ சாகுபடியாளரும் நிபுணருமான விவேக் பைடே கூறினார். ஆனால் கடந்த ஆண்டு, அவை 5,000 மி.மீ. தாண்டி, நவம்பர் வரை நீடித்தன. குளிர்கால

வெப்பநிலையும்  பூ மற்றும் பழங்கள் அமைய சாதகமான நிலையில் இல்லை.

 

விவசாயிகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தங்கள் செலவுகளை மீட்டெடுக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக பழம் அமைப்பதால், மாம்பழம் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் மட்டுமே சந்தைகளுக்கு வரும். இது விலை சரிவுக்கு வழிவகுக்கும் என்றார்.

comment COMMENT NOW