இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் திங்களன்று உள்நாட்டு விமானச்சேவை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சுமார் 1,000 விமானங்களில், 400க்கும் மேற்பட்ட விமானங்கள் முதலில் இயக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இவை திங்களன்று இயக்கப்படக்கூடும் என்று எதிர்ப்பாக்கப்பட்டது. ஆனால், டெல்லி விமான நிலையத்தில் திங்களன்று வருகை மற்றும் புறப்படயிருந்த 80க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டெல்லி மிகவும் பரபரப்பான உள்நாட்டு விமான நிலையமாகும். கோவிட் நெருக்கடிக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 1,300க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் இருந்தன. திங்களன்று டெல்லி விமான நிலையத்தில் 118 விமானங்களின் வருகையும் மேலும் 125 விமானங்களும் புறப்பட்டன.

உள்நாட்டு விமானச் சேவைகள் மே 25 முதல் துவங்குமென்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி ஒரு அறிவிப்பின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானங்களின் கால அட்டவணையை அதிகாரிகள் மாற்றியமைக்க வேண்டியிருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது.

அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்களது திருத்தப்பட்ட அட்டவணைகளைத் தாக்கல் செய்ய அதிகாரிகளை அணுகினர். காரணம், புதிய விதிகளின்படி விமானங்கள் மறுபடியும் இயக்கும்போது, ​​விமானங்களின் அசல் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் உடனடியாக விமானங்களை அனுமதிக்கும் நிலையில் இல்லை என்று கூறினர்.

மகாராஷ்டிராவின் உள்நாட்டு விமானச்சேவை தொடர்பாகப் பூரியுடன் பேசியதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டிவிட்டரில் கூறியிருந்தார். மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட் (MIAL) போக்குவரத்து அட்டவணை தயாரிக்கும் வரை, மே 25 முதல் மாநிலத்திலிருந்து குறைந்தபட்ச உள்நாட்டு விமானங்களைத் தொடங்கலாம். அவைகள் சர்வதேச பரிமாற்ற பயணிகள், மருத்துவ அவசரநிலைகள், மாணவர்கள் மற்றும் அனுதாபத்தின் அடிப்படையிலிருக்க வேண்டுமென‌ நிபந்தனை விதித்துள்ளார்.

டெல்லி-மும்பை இடையிலான சேவை

உலகின்

பரபரப்பான பாதைகளில் டெல்லி-மும்பை ஒன்றாகும். அதே சமயத்தில், திங்கள் முதல் மும்பையிலிருந்து 25 விமானங்களைத் தரையிறங்கவும், புறப்படவும் அனுமதிக்க அரசு முடிவு செய்தது. டெல்லி மற்றும் மும்பைக்கு இடையில் 100க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் இருந்த நிலையில், அவை 25 ஆகக் குறைக்கப்பட்டன என்று தகவல்கள் சுட்டிக்கட்டுகிறது. இதனால் இந்த விமானங்களில் முன்பதிவு செய்தவர்கள் பெரும்பாலானோர் பயணிக்க முடியவில்லை.

மே 28‌ முதல் மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம் மே 28 முதல் விமானங்களை அனுமதிக்கத் தொடங்கியவுடன், வரும் நாட்களில் நிலைமை சீரடைய வாய்ப்புள்ளது. இது வடகிழக்கிலுள்ள அதிகமான நகரங்களை இணைப்பதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும். வடகிழக்குக்குச் செல்லும் பல விமானங்கள் வங்காளம் வழியாகச் செல்கின்றனர்.

ஜூன் 1க்கு பிறகு மகாராஷ்டிரா அதிக விமானங்களை இயக்க அனுமதி கொடுக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. பல உள்நாட்டு விமான நிறுவனங்கள் இரண்டு பெருநகரங்களையும் இணைப்பது மட்டுமல்லாமல், அங்கிருந்து மற்ற நகரங்களுக்கும் விமானங்களை விரிவுபடுத்துவதால் நிலைமை தணியுமென எதிர்பார்க்கலாம்.

Translated by P Ravindran

comment COMMENT NOW