கடந்த திங்கள்கிழமை முதல் இந்த மாத இறுதி வரை இங்கிலாந்து, துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் விமானங்களை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு சர்வதேச விமான நிறுவனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மற்றும் 3 மேற்கு ஆசிய விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், எட்டிஹாட் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்றவை இந்த தடை உத்தரவினால் பெரிய பாதிப்புக்கு ஆளாகும் என கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவிலிருந்து வரும் விமானங்களையும் மார்ச் 31 வரை இந்த தடைஉத்தரவு பொருந்தும்.

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய மூன்று நிறுவனங்களாக கருதப்படும் எமிரேட்ஸ் (Emirates), எட்டிஹாட் (Ethihad) மற்றும் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways), மற்றும் ஏர் ஏசியா பெர்ஹார்ட் (AirAsia Berhard) ஆகியவை இந்த தடையால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இவை இந்தியர்களை தங்கள் நாடுகளுக்கு ஏற்றி செல்வதிலும் மற்றும் அங்கிருந்து அழைத்து வருவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம்.

இப்போது, ​​ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமான் மற்றும் குவைத் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் இந்திய அதிகாரிகள் 14 நாள் தனிமைப்படுத்தலை நீட்டித்துள்ளனர். இதனால் இந்நிறுவனங்களின் விமான சேவை வெகுவாக பாதிக்கும்.

இந்த மூன்று விமான நிறுவனங்களும் துபாய், அபுதாபி மற்றும் தோஹாவில் உள்ள தங்கள் மையங்களிலிருந்து உலகின் பிற பகுதிகளிலிருந்து பயணிகளை இந்தியாவுக்கு அழைத்து செல்லும் சேவைக்கு தங்கள் நாட்டின் விமான தளங்களை பயன்படுத்துகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு மற்ற சர்வதேச விமான நிறுவனங்களால் முறையற்ற வணிகக் கூட்டமைப்பு மூலம் தங்கள் வருவாயின் பெரும் பகுதியை இது பாதிக்கின்றது என்று குற்றம் சாட்டியிருந்தன. ஏனெனில், அவை போட்டி கட்டணங்கள் மற்றும் அதிக இணைப்புகளுடன் போக்குவரத்தை முடக்குகின்றன. இந்த போக்குவரத்தின் பெரும்பகுதி இந்தியாவிலிருந்து உலகெங்கிலும் உள்ள இடங்களுக்குச் செல்கிறது.

உதாரணமாக, துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் இந்தியாவுக்கு 172 வாராந்திர விமானங்களை இயக்குகிறது. எமிரேட்ஸின் குறைந்த கட்டணக் கிளை நிறுவனமான ஃப்ளைடுபா (flydubai), லக்னோ மற்றும் கொச்சி போன்ற சிறிய நகரங்களை துபாயுடன் இணைப்பதால் வாராந்திர விமானங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிறது. அபுதாபிக்கும் 10 இந்திய நகரங்களுக்கும் இடையில் வாரந்தோறும் 159 விமானங்களை இயக்கும் எட்டிஹாத்தும் அப்படியே. சமீபத்தில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தை என்று கூறியது. இப்போது, இவை அத்தனையும் நின்று விட்டால் அவர்களின் நிதி நிலைமை மேலும் மோசமாகக் கூடும்.

இதற்கிடையில், இந்திய அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, மார்ச் 17 முதல் 31 வரை இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று flydubai அறிவித்துள்ளது.

பிற சர்வதேச விமான நிறுவனங்களும் இந்த தடையின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இங்கிலாந்து, துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து பயணிகளை தடைசெய்யும் அரசாங்கத்தின் உத்தரவு பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின், லுஃப்தான்சா, ஏர் பிரான்ஸ் மற்றும் நமது ஏர் இந்தியா விமான நிறுவனங்களையும் பாதிக்கும். அவர்களும் இந்த நாடுகளில் இருந்து பயணிகளைப் பெற முடியாது. விமான சேவையும் தொடர முடியாது.

அரசாங்கங்களிடமிருந்து சில உதவி கிடைக்காவிட்டால், உலகளாவிய விமானத் தொழில் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று CAPA எச்சரித்த ஒரு நாளில் அரசாங்கத்தின் இந்த முடிவு வந்தது. 2020 மே மாத இறுதிக்குள் உலகின் பெரும்பாலான விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது. இந்த பேரழிவைத் தவிர்க்க வேண்டுமானால் இப்போது ஒருங்கிணைந்த அரசாங்க மற்றும் தொழில் நடவடிக்கைகளை அது பரிந்துரைத்தது.

Translated by Ravindran P

comment COMMENT NOW