மேற்கத்திய இடையூறானது வட பாகிஸ்தான், அதனை ஒட்டிய ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு ராஜஸ்தான் மீது ஒரு சுழற்ச்சியாக நிலவுகிறது. இது வடமேற்கு இந்தியாவின் மலை பிரதேசங்களில் (ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்) இன்று (புதன்கிழமை) முழுவதும் பரவலாக மழை மற்றும் பனிப்பொழிவை கொடுக்கும்.

சமவெளிகளுக்கு இடியுடன் கூடிய மழை

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை வரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும். மேலும் கிழக்கு இந்தியாவில் ஆங்காங்கெ மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. அடர்த்தியான மூடுபனி அடுத்த மூன்று நாட்களில் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளிலும், அடுத்த இரண்டு நாட்களில் ராஜஸ்தானிலும் பொழியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமைக்குள் வடமேற்கு இந்தியாவுக்குள் புதிய பலவீனமான மேற்கத்திய இடையூறு நுழையும் என்று ஐஎம்டி கூறியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை), புனலூரில் (கேரளா) மிக உயர்ந்த (பகல்) வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸாகவும், மிகக் குறைந்த (இரவு) வெப்பநிலை பஹ்ரைச்சில் (கிழக்கு உத்தரப்பிரதேசம்) 6.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

அடர்த்தியான மூடுபனிக்கான முன்னெச்சறிக்கை

ஐபிஎம் பிசினஸின் தி வெதர் கம்பெனியின் கூற்றுப்படி, மேற்க்கத்திய இடையூறு வடமேற்கு இந்தியாவின் மலைகள் மீது பரவலான மழை, பனி மற்றும் இடியுடன் கூடிய மழையை கொடுக்கும் மற்றும் முக்கியமாக பஞ்சாபின் வடக்குப் பகுதிகளில் ஆங்காங்கே மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை கொடுக்கும். இது பலவீனமடையும் போது கிழக்கே கங்கை சமவெளியை நோக்கி பரவும். ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் 5 செ.மீ முதல் 50 செ.மீ வரை பனிக்குவிப்பு சாத்தியமாகும்.

மேற்க்கத்திய இடையூறு நீங்கிய பின்னர், மீதமுள்ள ஈரப்பதம் வியாழக்கிழமை காலை பஞ்சாப் சமவெளிகளில் பரவலாக அடர்த்தியான மூடுபனியை உருவாக்கும். மழைக்குப் பிறகு பஞ்சாப் மற்றும் கங்கை சமவெளிகளில் காற்றின் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில், வறண்ட வட-மேற்கு காற்று மற்றும் ஈரப்பதமான தென்மேற்கு காற்று ஆகியவை கிழக்கு இந்தியாவில் ஒடிசா, வங்காள சமவெளி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழையை கொடுக்கும்.

கிழக்கு இந்தியாவுக்கு இடம்பெயரும் மழை

மேற்க்கத்திய இடையூறின் ஈரப்பதம் காரணமாக வடகிழக்கு இந்தியாவில் தொடர்ந்து ஆங்காங்கே மழை மற்றும் மலை பனி நாளை (வியாழக்கிழமை) உச்சத்தை எட்டும் என்று ஐபிஎம் வெதர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயல்பாடு வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக குறையும், ஆனால் அருணாச்சல பிரதேசத்தில் வார இறுதி வரை நீடிக்கும்.

இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை நாட்டின் வடக்குப் பகுதிகளில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.

இதற்கு நேர்மாறாக, கிழக்கு கங்கை சமவெளிகளில் (Eastern Gangetic Plains) இரவு நேரங்களில் குறைந்தபட்சம் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஆனால் வார இறுதியில் குளிர்ந்த வடமேற்கு காற்று வெப்பநிலையை சராசரிக்கு குறைவாக மீட்டு வரும்.

இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை வாய்ப்பு

இதற்கிடையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு ஐஎம்டி கண்ணோட்டம் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது என கணித்துள்ளது.

உத்தரகண்டின் மீது ஆலங்கட்டி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியும் எனவும் கிழக்கு உத்தரப்பிரதேசம், வங்காளம் மற்றும் ஒடிசா சமவெளிகளில் ஆங்காங்கே மின்னலுடன் மழை பொழியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாளை (வியாழக்கிழமை) பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், வடக்கு ராஜஸ்தான், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் ஆங்காங்கே அடர்த்தியான மூடுபனி நிலவும் எனவும் ஐஎம்டி கணித்துள்ளது. வங்காளம் மற்றும் சிக்கிம் மலைகள் மீது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இடங்களில் அடர்த்தியான மூடுபனி பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலபிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW