கோவிட் -19: வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம்மெடுக்க சிறப்பு சேவை துவக்கம்

G Naga Sridhar Updated - December 06, 2021 at 12:44 PM.

வாடிக்கையாளர்கள் எளிதாக சிறப்புத் திட்டத்தின் மூலம் பணம்மெடுக்க ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)  இன்று ‌பிரத்யேக சேவையை தொடங்கியுள்ளது.

பணம் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் EPFO இணையதளத்திற்குச்  சென்று பதிவு  செய்யவேண்டும். தற்பொழுது நிலவும் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதற்கு அடுத்ததாகப் போடப்பட்ட  லாக் டவுனால் (Lock Down) பணமுடையால் அவதிப்படும் ஊழியர்கள்  கருத்தில் கொண்டு இந்த சிறப்புத்‌ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)  திங்கள்கிழமை  முதல்  சிறப்புத் தலைமையின் கீழ் கணினி (Online) மூலம் விண்ணப்பத்தை அளிக்கிறது. இந்திய அரசு அறிவித்துள்ள சிறப்புப் பொருளாதார வசதியின்  மூலம் இச்சலுகையைப் பெறலாம்.​

இணைய (On line) விண்ணப்பத்திற்கு, உங்களுக்கென்று  ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட அடையாள எண்ணுடன்  பிஎஃப் (PF) கணக்கு, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகள் இணைத்திருப்பது முக்கியம்.

இபிஎஃப் (EPF) உறுப்பினர்களாக உள்ள சுமார் 4.8 கோடி ஊழியர்கள் அவர்களது சொந்த இருப்பில் 75 சதவீத தொகையைத் திரும்பப் பெறலாம். இது மூன்று மாத ஊதியத்திற்கு மிகையாகாமல் இருக்க  வேண்டும்.

தொழிலாளர் அமைச்சகம் அறிவிப்பின்படி,  ஈ.பி.எஃப் (EPF) திட்டத்தில் தொடர்ந்து பங்களித்து வரும்  அனைவரும் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து பணத்தை திரும்பப் பெறத்  தகுதியுடையவர்கள்.

Translated by P Ravindran

Published on March 31, 2020 02:52