தாமதம் மற்றும் பலவீனமான ஆஸ்திரேலிய பருவமழை இந்திய பருவமழையை பாதிக்குமா?

Vinson Kurian Updated - February 17, 2020 at 03:41 PM.

Kolkata woke up to a hazy morning on Monday. Pic: Debasish Bhaduri

காட்டுத்தீயின் பேரழிவினாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் ஒரு மாத தாமத்ததிற்குப்பின் பருவமழை காலம் தொடங்கியுள்ளது. ஆனால் ஈரப்பதத்தின் அளவு ஒரு 'உன்னதமான பருவமழைக்கு' உகந்தவையாக இல்லை.

பருவமழையின் இரண்டு வகைகள்

ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் ஒன்றன் பின் ஒன்றாக பூமத்திய ரேகைக்கு இருபுறமும் பருவமழையினை தொகுக்கின்றன. ஆனால் எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா என்பது போல, எந்த பருவமழை முதலில் வருகிறது, ஆஸ்திரேலியாவா அல்லது இந்திய பருவமழையா? என்ற கேள்விக்கு இன்றும் விடையில்லை.

பூமத்திய ரேகைக்கு வடக்கே, தாமதமாக  விலகிய 2019-ம் வருடத்தின் இந்திய பருவமழை, ஆஸ்திரேலிய பருவமழையில் பின்னடைவு விளைவினை ஏற்படுத்தும் என விஞ்ஞான சமூகத்தினர் நம்புகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் தாமதமாக தொடங்கும் பருவமழை வரவிருக்கும்  இந்திய பருவமழையின் தொடக்கத்தை தாமதப்படுத்துமா?  கோழி முதலில் வந்ததா இல்லை முட்டையா என்ற கேள்வி எழும்இடம் இங்கு தான்.

இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானியும், புனே பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியருமான ராக்ஸி மேத்யூ கோல் இந்த பிரச்சினையை முன்னோக்கி பார்க்கிறார்.

"2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வலுவான ஐஓடி (IOD- Indian ocean Dipole) கோடைக்கால பருவமழையை தாமதமாக திரும்பப் பெறுவதிலும், ஆஸ்திரேலிய பருவமழை தொடங்குவதை தாமதப்படுத்தியதிலும் பங்கு வகிக்கலாம். இருப்பினும், இது  வருவிருக்கும் இந்திய கோடை பருவமழையை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கான தடயங்கள் எங்களிடம் இல்லை " என்று பிசினெஸ்லைனிடம் கூறினார்.

குழப்பும் பருவமழை தொடக்கம்

ஆஸ்திரேலிய பருவமழையின் முந்தைய சமீபத்திய ஆரம்பம் ஜனவரி 25, 1973 ஆகும். ஆனால் அப்போது இந்தியாவில் பருவமழை மிகவும் தாமதமாக தொடங்கியது (1972 ஜூன் 18) சாதாரணமாக ஜூன் 1ம் தேதி தொடங்க வேண்டும்.

கோல் அவர்களின் கூற்றுப்படி, பசிபிக் பகுதியில் உள்ள ENSO (எல் நினோ-லா நினா) நிலைமைகளுக்கு இந்தியப் பெருங்கடல் விரைவாக வினைபுரிகிறது. பொதுவாக, எல் நினோ போன்ற நிலைமைகள் நேர்மறையான IOD-ஐ (positive IOD) தூண்டும். "இருப்பினும், பல்வேறு நிறுவனங்களின் மாதிரி கணிப்புகள் இந்த கோடையில் எல் நினோ அல்லது லா நினாவுக்கான ஆரம்ப சமிக்ஞைகளைக் காட்டவில்லை."

நேர்மறையான IOD கட்டத்தின் போது, மேற்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த வளிமண்டல அழுத்தம் மற்றும் காற்றின் கீழிறங்கும் இயக்கம், கிழக்கில் இறங்கும் காற்று மற்றும் அதிக அழுத்தம் ஆகியவற்றிற்க்கு நிகராக இருக்கிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, இது வறட்சி, வெப்பம், மற்றும் ஆபத்தான காட்டுத்தீயினை குறிக்கிறது.

இந்திய பருவமழை நிறைவடந்தபோது, இந்தியப் பெருங்கடலின் மேற்குப் படுகையில் நீட்டிக்கப்பட்ட ஐஓடி (Extended IOD) விளைவினை ஏற்படுத்தியது.

காட்டுத்தீ ஆபத்து

இது இந்தியப் பெருங்கடலில் நீண்ட காலமாக காற்று மற்றும் ஈரப்பதத்தை பூட்டி வைத்திருந்தது, ஆஸ்திரேலியாவில் வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீயை தூண்டியது இதுவே.

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BoM) அறிக்கையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் அண்மையில் பெய்த கனமழை சில பகுதிகளில் வறட்சியைக் குறைத்துவிட்டது, ஆனால் மேலும் உள் பகுதிகள் வறட்சியிலிருந்து மீள பல மாதங்களுக்கும் மேலாக சராசரி மழைப்பொழிவு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது.

மார்ச் முதல் ஜூன் வரை வெப்பம் சராசரியை விட அதிகமாக இருக்கும், இது எதிர்வரும் மாதங்களில் வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ அபாயத்தை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மழையானது, தற்போது வட ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளை பாதித்து வரும் நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதிகளில் வெப்பமண்டல தாழ்வுநிலை ஒரு 'உன்னதமான பருவமழைக்கு' பொதுவான ஈரப்பதத்தைக் கொண்டிருக்கவில்லை என்றே கூறலாம்.

கவலையளிக்கும் மழை

டார்வின், பிப்ரவரி 2 முதல் (டிசம்பர் இறுதிக்குள் இயல்பான பருவமழை துவக்கம்) பருவமழைக்கான காற்றின் அளவு இருந்தபோதிலும், சிறிய மழையை மட்டுமே கண்டுள்ளது.

டிசம்பர் மாதம் முதல் எந்நேரத்திலும் பருவமழை தொடங்கலாம் என்ற நிலையில், மழைக்காலம் தொடங்குவது காற்றின் திசை மாறுதலால் வரையறுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி மழையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காணமுடியாது என்று ஆஸ்திரேலிய வானிலை மையத்தின் கண்ணோட்டம் கூறுகிறது.

இருப்பினும், கிழக்கில் சராசரியான மழைப்பொழிவை விட குறைவாகவும், மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகளில் சராசரி மழைப்பொழிவை விட சற்று அதிகமாகவும் இருக்கும் என கூறியுள்ளது.

வடக்கில், மார்ச் மாதத்தில் சராசரி மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். மற்றும் குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில், மார்ச் முதல் மே வரை சராசரி மழையை விட குறைவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளது.

Translated by Srikrishnan PC

Published on February 17, 2020 07:30