யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் வியாழன் இரவே பணம் எடுக்க ஏடிஎம்களில் திரண்டனர்.  ஆனால் பல ஏடிஎம்களில் வாடிக்கையாளர்களால் விரைவாக பணம் எடுக்கப்பட்டதாலும், மேலும் சில ஏடிஎம் கள் செயல்படாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.  ஆன்லைனில் நிதி மாற்றுவதைத் தடுக்க நிகர வங்கி கணக்குகள் தடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இருப்பினும், டெபாசிட் வைத்திருப்பவர்கள் மற்றும் வங்கியின் பிற வாடிக்கையாளர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கும் வைப்புதாரர்களுக்கும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வங்கி வாடிக்கையாளர்கள்: விரைவாக செயல்படுங்கள்

நீங்கள் யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்களில் ஒருவராக இருந்தால், கணக்கில் புதிய வரவுகளைத் தவிர்க்கவும்.  மியூச்சுவல் ஃபண்டுகள் / காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை மற்றும் நீங்கள் வைத்திருக்கும் மீட்பின் கோரிக்கைகளிலிருந்து கடன் பெறுவதற்கான மாற்று கணக்கை உடனடியாக அந்நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை முதல், யெஸ் வங்கி கணக்குகளுக்கு மீட்பு செலுத்தாமல் இருப்பதை எடெல்விஸ் உறுதி செய்யும் என எடெல்விஸ் ஏஎம்சியின் தலைமை நிர்வாக அதிகாரி ராதிகா குப்தா ட்வீட் செய்துள்ளார்.

ஆன்லைன் ஸ்டாக்கிங் புரோக்கிங் நிறுவனமான ஜெரோதாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நித்தின் காமத், வெள்ளிக்கிழமை அதிகாலை கீச்சில், வாடிக்கையாளர்கள் தங்கள் யெஸ் வங்கிக் கணக்குகளில் செய்த அனைத்து நிதி திரும்பப் பெறும் கோரிக்கைகளையும் நிறுவனம் ரத்து செய்துள்ளது, இதனால் பணம் தடுக்கப்படாது என பதிவிட்டுள்ளார்.

பிற நிதிச் சேவை நிறுவனங்களும் இதை பின்பற்ற வாய்ப்புள்ள நிலையில், அவர்களுடைய நடவடிக்கைகளில் மட்டுமே நம்பாமல் நீங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் சென்ற மாத கணக்குகளை சரிபார்த்து உங்கள் யெஸ் வங்கி கணக்கில் வரவு வைத்திருக்கும் ஒவ்வொரு நிதி நிறுவனத்திற்கும் மாற்றுக் கணக்குகளை வழங்கவும்.

மேலும், நீங்கள் பெற வேண்டிய தொகைகளான - சம்பளம், வாடகை மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுதல் உள்ளிட்டவை - யெஸ் வங்கியில் உள்ள உங்கள் கணக்கில் செல்லாமல் மாற்று கணக்கை உடனடியாக கொடுத்து அதில் செலுத்துமாறும் கூறலாம்.

இப்போதைக்கு, பணம் திரும்பப் பெறும் வரம்பு (withdrawal limit) எப்போது அகற்றப்படும் என்பது தெரியவில்லை.  கடந்த செப்டம்பரில், பி.எம்.சி வங்கி இதேபோன்ற நடவடிக்கையை ரிசர்வ் வங்கியிடமிருந்து எதிர்கொண்டது;  திரும்பப் பெறுவதற்கான வரம்பு பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டது, ஆனால் முழுமையாக அகற்றப்படவில்லை.

ரிசர்வ் வங்கியின் வியாழக்கிழமை சுற்றறிக்கையில், வைப்புத்தொகையாளரின் மருத்துவ சிகிச்சை அல்லது அவரை சார்ந்திருக்கும் எந்தவொரு நபரின் தவிர்க்கமுடியா நிகழ்வுகளிலும், அல்லது உயர் கல்விக்கான செலவுகள்;  திருமணம் அல்லது வைப்புத்தொகையாளரின் பிற விழாக்கள் தொடர்பாக கட்டாய செலவுகள் இருப்பின் திரும்பப் பெறும் வரம்பிலிருந்து (withdrawal limit) விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

 பத்திர ஆவண முதலீட்டாளர்கள்

நீங்கள் ஒரு யெஸ் வங்கியின்  கடன் பரஸ்பர நிதியில் முதலீட்டாளராக இருந்தால், பீதியடைய வேண்டாம் மற்றும் உங்கள் நிதியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டாம்.

இதைச் செய்வதன் மூலம் உங்களுக்கு இழப்பு நேரிடும், ஏனெனில் யெஸ் வங்கியின் பத்திரங்களில் முதலீடு செய்த சில நிதிகளின் NAV கள் நாள் முடிவில் (வெள்ளிக்கிழமை) குறைந்துவிடக்கூடும், ஏனெனில் சில MF கள் இந்த பத்திரங்களின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன.

நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் தனது கடன் திட்டத்தில் யெஸ் வங்கியின் மதிப்பை பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளதாக ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

மதிப்பீட்டு ஏஜென்சிகளால் யெஸ் வங்கியின் ஆவணங்கள் இன்னும் தரமிறக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க, எனவே காத்திருங்கள், பார்க்கவும், நிதி நிறுவனங்களின் செயலுக்கேற்ப உங்கள் திட்டத்தை செயல்படுத்தலாம்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடன் மதிப்பீடுகளின் அடிப்படையில் தங்கள் இலாகாக்களில் பத்திரங்களின் மதிப்பை குறைக்க வேண்டும் என SEBI விதிகள் குறிப்பிடுகின்றன.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் அத்தகைய பத்திரங்களின் மதிப்பினை குறைப்பது உடனடியாக NAV ஐத் தாக்கும் மற்றும் அந்த நேரத்தில் நிதி அலகுகளை விற்கும் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்திக்கக்கூடும். ஆனால் பத்திரத்தை வெளியிடுபவர் பின்னர் நிலுவைத் தொகையை செலுத்தினால், அந்த நிதி அதன் NAV ஐ திருப்பிச் செலுத்துவதற்கான கணக்கை அதிகரிக்கும் மேலும் இதனால் அவசரமாக நிதியை விற்ற முதலீட்டாளர்கள் நன்மையை இழக்கிறார்கள்.

மறுபுறம், என்ஏவி கைவிடப்படம்போது நிதி அலகுகளை வாங்கிய புதிய முதலீட்டாளர்கள் பின்னர் NAV திருத்தம் நடந்தால் பயனடைவார்கள்.

இந்த நியாயமற்ற தன்மையைத் தவிர்ப்பதற்காகவே, ஒரு நிதியின் போர்ட்ஃபோலியோவில் தரமிறக்கப்பட்ட பத்திரங்கள் (மதிப்பீட்டு ஏஜென்சிகளால் முதலீட்டு தரத்திற்கு கீழே மதிப்பிடப்பட்டவை) ஒதுக்கப்படவேண்டும் என்று செபி சமீபத்தில் ஒரு விதியைக் கொண்டு வந்தது.  இது ‘சந்தேகத்திற்கிடமான’ பத்திரங்களை பிரிக்க உதவுகிறது மற்றும் பணம் மீட்கப்படும்போது அந்த பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும்.

எனவே, இப்போதைக்கு, காத்திருங்கள்.  யெஸ் வங்கியின் பத்திரங்களின் கதி இன்னும் தெளிவாக தெரியவில்லை.  இருப்பினும், செபி இப்பத்திரங்களை ஒதுக்குவதை கட்டாயமாக்கவில்லை என்பதை நினைவில் கொண்டு உங்கள் பரஸ்பர நிதி நிறுவனத்திலிருந்து வரும் மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ் அறிவிப்புகளைப் பாருங்கள்.

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW