பண்ணைசீ சார்ந்த  பொருட்களை விற்பனை செய்யும்  இ-காமர்ஸ் தளமான பிக்ஹாட், (BigHaat) லாக் டவுன் காலத்தில் விற்பனை மற்றும் விசாரணைகள் அதிகரித்துள்ளன, என கூறியுள்ளது.

பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் ஆன்லைன் நிறுவனமான இது (ஒரு புதுமையான தயாரிப்பு அல்லது சேவையுடன் நிஜ வாழ்க்கை சிக்கலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் ஒரு தொழில்முனைவோர் முயற்சி)  ஐந்து ஆண்டுகளாகக் காய்கறி விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பண்ணை உபகரணங்கள் போன்ற பண்ணைச் சார்ந்தப் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்து வருகிறது.

"கடந்த ஒரு மாதத்தில் எங்களது வியாபாரம் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டன. ஏனெனில் அதிகமான விவசாயிகள் இணையத்தில் பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்," என்று பிக்ஹாட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் குமார் நுகலா கூறியுள்ளார். "இந்த நெருக்கடிக் காலத்தில் விவசாயிகள் பொருட்களைப் பெறமுடியும் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. மேலும், பெறப்பட்ட ஆர்டர்களில் குறைந்தது 70 சதவீதத்தை எங்களால் நிறைவேற்ற முடிந்தது," என்று அவர் மேலும் கூறினார்.

உரம் பரிமாற்றம்

ட்யுபான்ட் (DuPont), மஹைகோ (Mahyco), மான்சாண்டோ (Monsanto) மற்றும் ராசி (Raasi) விதைகளை உள்ளடக்கிய 160க்கும் மேற்பட்ட பிராண்டுகளிலிருந்து விதைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிறிய உபகரணங்கள் போன்ற 3,500க்கும் மேற்பட்ட பண்ணைச் சார்ந்த  தயாரிப்புகளை பிக்ஹாட் விற்பனை செய்கிறது. விவசாயிகள் தங்கள் ஆர்டர்களை பிக்ஹாட் மூலமாகக் கொடுக்கலாம், மேலும் டயல்-இன் எண் மூலமாகவும் கொடுக்கலாம் என்று நுகலா கூறினார், மேலும், நிறுவனதில் கேஷ்-ஆன்-டெலிவரி (சிஓடி) மூலமாகவும் பெறலாம்,. இது பெரும்பாலான விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.

இதுவரை, சுமார் 30,000 விவசாயிகள் இணையத்தில் வியாபாரம்  செய்துள்ளனர், மேலும் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயிர் ஆலோசனை மற்றும் வேளாண் தொடர்பான பிற தகவல்களுக்காக பிக்ஹாட்டுடன் தொடர்பில் உள்ளனர், என்று நுகலா கூறினார்.

தன்னிறைவு மையங்கள்

இந்தியா போஸ்ட் உட்பட 22 லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுடன்  இணைந்து செயல்படுகிறது, மேலும் நாட்டிலிலுள்ள மொத்த 21,000 அஞ்சல் நிலைய குறியீடு பகுதிகளில், சுமார் 16,000 பகுதிகளில் பிக்ஹாட் சேவை வசதியைக்  கொண்டுள்ளது. மேலும்,  கோட்டா, ஹைதராபாத் உட்பட  ஏழு தன்னிறைவுக் கொண்ட மையங்களை   ஏற்படுத்தி  உள்ளது. "எங்களுடன் இணைந்துள்ள  பிராண்டுகளின் தயாரிப்புகளை விவசாயிகளுக்கு  வழங்குவதைத் தவிர, நான்கு பிராந்திய மொழிகளிலும் மற்றும் இந்தி மொழியிலும் பயிர் பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறோம் என்று  நுகாலா கூறினார்.

பிக்ஹாட்டின் வரும் வியாபார தேவைகள், 45 சதவீதம் தென்மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வருகிறது.

"கேரளாவிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் கொல்லைப்புற விவசாயிகள்.(கொல்லைப்புற வேளாண்மை என்பது  வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொத்தின் ஒரு பகுதியை மினி அல்லது மைக்ரோ பண்ணைகளாக வைத்துக்கொள்வது).  அவர்களின் தேவைகள்  அளவு சிறியதாக இருப்பதால் வியாபாரம் அதிகமாக இல்லை," என்று அவர் கூறினார்.

குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து மீதமுள்ள  தேவைகளுக்கு  விசாரணைகள் வருகின்றன.

வடகிழக்கில் ஆர்வம்

"கடந்த 12 மாதங்களில் வடகிழக்கில்  எங்களது வணிகம் நன்கு பிரபலமடைந்து வருவதைக்  கண்டோம். வடகிழக்கு விவசாயிகள் வாங்கும் அளவில் பெரும் சவால்கள் உள்ளன, ஏனெனில் குறைந்த எண்ணிக்கையும்  மற்றும் ஆன்லைன் விற்பனயும் அந்த பிராந்தியத்தில்  சுமாராகத்தான் பிரபலமடைந்து வருகிறது, ”என்றார் நுகாலா.

"எங்களது அணுகுமுறை மற்றும் விநியோகத்தில் இருக்கும் திறனைக் கருத்தில் கொண்டு, அதிகமான பிராண்டுகள் எங்கள் அமைப்பு தளத்தில் ஆர்வம் காட்டுகின்றன," என்று அவர் கூறினார். மேலும், பிக்ஹாட் சிறிய மற்றும் பிராந்திய பிராண்டுகளின் பிரத்தியேகமாக விதைகள் மற்றும் உரங்களை விற்பதற்கு ஊக்குவித்து வருகிறது.

ஆரம்ப நிலையில், அங்கூர் கேப்பிட்டல் (Ankur Capital) நிதியளிக்கப்பட்ட பிக்ஹாட், அதன் தொழில்நுட்ப தளத்தை விரிவுபடுத்துவதற்கும் அதன் விநியோகச்  தொடர்பை வலுப்படுத்துவதற்கும், வெண்சுர் கேபிடலிஸ்ட்ஸ் முதலீட்டாளர்களிடமிருந்து (புதிய நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யும் ஒரு நபர் அல்லது நிறுவனம்)  சுமார்  ரூபாய் 10 மில்லியனை திரட்ட உள்ளது  என்று நுகாலா கூறினார்.

ஆன்லைன் வர்த்தகம்,  ஆலோசனை மற்றும் சேவை வழங்குபவர்கள் மற்றும் விவசாயிகளின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. சமீபத்தில், பேயர் விவசாயிகளின் வீட்டு விநியோகம் விவரங்களுக்காக  அக்ரோஸ்டாருடன் கூட்டுச்சேர்ந்தது .

Translated by P Ravindran

comment COMMENT NOW