விதிமுறைகள் குழந்தைகளின் எண்ணிக்கையை மையமாகக் கொண்டுள்ளனவே தவிர பிரசவங்களின் எண்ணிக்கையை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

தனது முதல் பிரசவத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஒரு பெண் அரசு ஊழியர் தனது இரண்டாவது பிரசவத்தின்போது ஊதியத்துடன் கூடிய விடுமுறை (paid leave) போன்ற மகப்பேறு சலுகைகளை பெறமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திங்களன்று வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி தலைமையிலான நீதிமன்றத்தின் முதல் டிவிஷன் பெஞ்ச், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தபின், இரண்டாவது பிரசவத்தின்போது பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை நீட்டிப்பது தொடர்பாக ஒற்றை நீதிபதிகள் அளித்த தீர்ப்புகளுக்கு முரணான கருத்தை கூறியுள்ளார்.

1972 ஆம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீசஸ் (விடுப்பு) விதிகளின் "இரண்டு குழந்தைகளுடனும்" என்ற வார்த்தைகளை சாஹி வலியுறுத்தினார்.

வர் மேலும் கூறுகையில், விதிகள் குழந்தைகளின் எண்ணிக்கையை மையமாகக் கொண்டுள்ளன, ஆனால் பிரசவங்களின் எண்ணிக்கை அல்ல என்று கூறினார்.

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் (CISF) துணை ஆய்வாளர் எம். ஆசியா பேகம், 2017 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது பிரசவத்திற்காக 180 நாட்கள் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு பெற்றது தொடர்பாக தனி நீதிபதியின் ஜூன் 18, 2019 அன்று உத்தரவுக்கு முரணாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையின்படி, 2015 ஆம் ஆண்டில் தனது முதல் பிரசவத்தின்போது ஆசியா பேகம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

முன்னதாக, ஒற்றை நீதிபதிகள் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் பிரசவங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கான விதியை விளக்கினர்.

உதாரணமாக, ஒரு பெண் தனது இரண்டாவது பிரசவத்தில் இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகளை பெற்றால் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமா என்று ஒரு நீதிபதி கேட்டார் என்றும் அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW