செய்திகள்

கிண்டி, அம்பத்தூர், மற்றும் பல தொழிற்பேட்டைகள் இயங்க இன்று முதல் அனுமதி

Our Bureau Chennai | Updated on May 25, 2020

File photo

கோவிட்-19 காரணமாக பல பாதுகாப்பு விதிமுறைகள்

சென்னையிலுள்ள அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகளை, மே 25 முதல் மீண்டும் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. இருப்பினும், 25 சதவீத ஊழியர்களுடன் தான் இயங்க வேண்டும் என்று மாநில அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை அவர்கள் பின்பற்றப்பட வேண்டும். தினமும் ஊழியர்களை, உடல் வெப்ப சோதனை கருவியை பயன்படுத்திச் சரிபார்க்க வேண்டும்; முக கவசம் கட்டாயமானது; சமூக தூரத்தைப் பின்பற்ற வேண்டும்; ஒரு நாளைக்கு இரண்டு முறை, இடத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், 55 வயதுக்கு மேலானோர் தவிர்க்கப்பட வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைப் பகுதிகள், அரசாங்கத்தின் நிலையான இயக்க முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மேலும் கூறியுள்ளது.

 

Translated by P Ravindran

Follow us on Telegram, Facebook, Twitter, Instagram, YouTube and Linkedin. You can also download our Android App or IOS App.

Published on May 25, 2020
This article is closed for comments.
Please Email the Editor