பாரதப்பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் தாக்கிய இவ்வேலையில் சேவை செய்யும் மக்களை ஊக்குவிக்கவும் மற்றும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தவும் ஒரே சமயத்தில் கைத்தட்டுதல் மற்றும் ஒரே நேரத்தில் அனைத்து வீடுகளிலும் விளக்கு ஏற்றுதல் போன்ற கூட்டு முயற்சிகளை கையாள வைத்தார்.

இதுபோன்ற கூட்டு முயற்சிகளுக்கு பலன் இருக்கிறதா என்று அறிவியல் ஆர்வலர்களை கேட்டால், அம்முயற்சிகளில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக கூறுகிறார்கள்.

உணர்வைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில் அதைப் பற்றிய நிறைய ஆய்வுகள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. பல ஆராய்ச்சியாளர்கள்,  குறிப்பாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் (Princeton University) பேராசிரியர் ஒருவர் அதற்கு ஒரு விளைவு இருக்கிறது என்பதை நிரூபணம் செய்துள்ளார்.

அது என்ன விளைவு?

ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கைதட்டுவது அல்லது விளக்குகளை ஏற்றுவதானால்  கொரோனா வைரஸை விரட்ட  முடியுமா என்பது போன்ற கேள்விகள் இன்னும் பதில் கிடைக்கவில்லை.  ஆனால், பிரின்ஸ்டன் பொறியியல் முரண்பாடுகள் ஆராய்ச்சி (PEAR) ஆய்வகங்களில் 30 ஆண்டுகளாக நடக்கும் நீண்ட  ஆராய்ச்சிகளில் தெளிவாகத் தெரிவது என்னவென்றால் ​​கூட்டு நடவடிக்கை  உண்மையை உணர்த்தியுள்ளது, என்று கூறியுள்ளார்.

1997 ஆம் ஆண்டில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ரோஜர் நெல்சன் (அப்போது), ஒரு “சோதனை உளவியலாளர்” ஒரு உலகளாவிய உணர்வு திட்டத்தை  ஏற்படுத்தி அதன் மூலம் எந்த  அளவிற்கு  உணர்வானது நுட்பமான அளவில்,  உடலைச் சார்ந்து இணையக்கூடிய சாத்தியத்தை பார்த்தார்.

இதன்படி  (மார்ச் 22க்கு முன்பு வந்தது) மனித உணர்வுகள்  ஒரேபாதையில் வரும்பொழுது , ​​சீரற்ற அமைப்புகளின் நடத்தை மாறுகிறது. மேலும் விஞ்ஞான ரீதியாக, ஜி.சி.பி வலைத்தளம் இதை விளக்குகிறது.

குவாண்டம் சுரங்கப்பாதையை அடிப்படையாகக் கொண்ட சீரற்ற எண் ஜெனரேட்டர்கள் (ஆர்.என்.ஜி) முற்றிலும் கணிக்க முடியாத வரிசைகளை  உருவாக்குகின்றன. ஆனால் ஒரு பெரிய நிகழ்வு மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளை ஒருங்கிணைக்கும்பொழுது , ​​எங்கள் (random number generator) RNG களின் வலைப்பின்னலில்  நுட்பமாகக் கட்டுக்குள் வருகிறது.

”சீரற்ற எண் ஜெனரேட்டர்களால் இத்தகைய கணிக்க முடியாத எண் சீரமைப்புகள்‌ நடக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கறது, இது ஒரு லட்சம் கோடி நிகழ்வுகளில் ஒரு முறை நடக்கும் என நெல்சன் கூறுகிறார்.

இந்த ஆய்வு, கூட்டுணர்வு என்பது உடல் இயக்கத்தை மேலும் உயர்த்தும் என்பதை நிரூபிக்கிறது என்று மேலும் அவர் கூறியுள்ளார். 

டெலிபதி ஆய்வு

டாக்டர் நெல்சன், எண்பது வயதை தாண்டிய விஞ்ஞானி,  தனது வீட்டு அலுவலகத்திலிருந்து தற்போது பணிபுரிகிறார். ஆங்கிலத்தில் parapsychology என்றழைக்கப்படும், பரந்த உலவியல் துறையில் ஆய்வு செய்பவர் இவர் மட்டுமல்ல. இவரைப்போல்‌ ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருள் அறிவியல் துறையின் டாக்டர் வில்லியம் டில்லர்  (Dr William Tiller)  டெலிபதி (தொலைவிலுணர்தல்) தொடர்புகளையும் தீவிரமாக ஆய்வு செய்துள்ளார். அவர் கூறுகையில், “கடந்த நானூறு ஆண்டுகளாக, விஞ்ஞானத்தினால் தெரிவிக்கப்படாதா அனுமானம் என்னவென்றால், மனித உணர்வு நாம் 'உடல் இயக்கத்தைப் பாதிக்காது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் எங்களின் சோதனை ஆராய்ச்சி, இந்த அனுமானம் சரியானதல்ல என்பதைக் காட்டுகிறது. ” என டாக்டர் டில்லர், சைக்கோஎனெர்ஜெடிக் சயின்ஸ் (tillerinstitute.com) நிறுவனத்தை நிறுவியவர், கூறியுள்ளார்.

நெல்சனின் PEAR ஆய்வகம் ‘தொலைநிலை பார்வை’ போன்ற டெலிபதி நிகழ்வுகளிலும் சோதனை செய்துள்ளது. “பல நூறு ஆய்வுகளைக் கவனமாக நடத்தியபொழுது ”, அவர்கள் ஒரு ‘முகவரை’ ஒரிடத்தில் வைத்து மற்றும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஒரு ‘பெர்சிபியண்டை’ (தொலைவிலுணர்தல் மூலம் புலன் கடந்த காட்சிகளைக் காண்பவர்), வைத்தனர், ‘பெர்சிபியண்டை, முகவர் மூலம் பார்க்க’ முடியுமா என்று சோதித்தனர். ஆம், அவரால் முடியுமென கண்டறியப்பட்டது.

பனிப்போரின் போது முந்தைய சோவியத் திட்டத்தால் நெல்சன் இந்த சோதனைகளில் (டில்லர் போல) ஈர்க்கப்பட்டிருக்கலாம், அனுமான செய்திகள் உலா வருகின்றன. அமெரிக்க இராணுவ ரகசியங்களை ‘தொலைநிலை உணர’ வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் தோன்றலாம்.

ஆனால் அமேசானில் கிடைக்கும் ஷீலா ஆஸ்ட்ராண்டர் மற்றும் லின் ஷ்ரோடர் எழுதிய “இரும்புத் திரைக்குப் பின்னால் உள்ள உளவியல் கண்டுபிடிப்புகள்” புத்தகம் இந்த திட்டத்தை நன்கு விளக்குகிறது. .

சோவியத் திட்டத்தால் எச்சரிக்கை அடைந்த அமெரிக்கா, கலிபோர்னியாவின் எஸ்.ஆர்.ஐ இன்டர்நேஷனலில் தனது சொந்த ஆய்வைத் தொடங்கியது. நியூயார்க்கின் புகழ்பெற்ற ஆவி ஆற்றலுடன் தொடர்புகொள்ளக்கூடியவர் (psychic),  இங்கோ ஸ்வான் என்ற நபர், எஸ்.ஆர்.ஐ.யில் விசாரணை இயற்பியலாளரான ஹால் புட்டாஃப் உடன் ஒத்துழைத்த முதல் ‘ரிமோட் வியூவர்’ ஆவார். முடிவுகள் மீண்டும் எதிர் உள்ளுணர்வு கொண்டவை. தொலைநிலை கருத்து  என்பது உண்மையில் சாத்தியமானது, என்றும் கண்டறியப்பட்டது

நெல்சனுடன்  இந்த  திட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பார்க் (BARC) விஞ்ஞானி மகாதேவா சீனிவாசன் கருத்துப்படி, அமெரிக்காவின் 23 ஆண்டு ஆய்வில் சுமார் 5 சதவீதம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் ஜிம் ஷ்னாபெல் எழுதிய ‘ரிமோட் வியூவர்ஸ்: தி சீக்ரெட் ஹிஸ்டரி ஆஃப் அமெரிக்காவின் சீக்ரெட் ஸ்பைஸ்’ என்ற மற்றொரு புத்தகத்தில் இந்த வகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இந்த புத்தகமும் அமேசானில் கிடைக்கிறது.

இதன் கடைசி அம்சம் என்னவென்றால், “இந்த நிகழ்வுகள் அனைத்திலும் அறியப்படாத தகவல் பரிமாற்ற வழிமுறை உள்ளது, இதில் மனதுக்கும் பொருளுக்கும் இடையிலான தொடர்பு உள்ளது” மற்றும் இவை அறிவியல் வட்டங்களில் ‘நுட்பமான ஆற்றல்கள்’, (poi) போய் என்ற பெரிய அளவில்  கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

"இந்த ஆய்வுகளிலிருந்து வெளிவரும் உண்மைகளை கவனத்தில் கொள்ளாவிட்டால், நவீன விஞ்ஞானம் யதார்த்தத்தின் சில மிக முக்கியமான அம்சங்களை இழந்துவிட்டது என்பதை ஒருவர் ஒப்புக் கொள்ள வேண்டும்" என சீனிவாசன் கூறியுள்ளார்.

Translated by P Ravindran

comment COMMENT NOW