கோவிட்-19 தூண்டுதலால் பணிநிறுத்தம் இருந்தபோதிலும், பங்குச்சந்தையில் தாக்குப்பிடித்த ஒரு துறையென்றால் அது கெமிக்கல் துறை பங்குகளாகும். பெரும்பாலான இத்துறை நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாக ‌ ஏற்றத்தைக் கண்டுள்ளனர் - உலகம் மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் கொரோனாா வைரஸ் தாக்கத்தால் சரிந்த நேரத்தின் ஆரம்பத்தில் இப்பங்குகளும் அந்த வீழ்ச்சியைச் சந்தித்தாலும், தற்பொழுது நிபுணர்கள் இத்துறைப் பங்குகள் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தைக் காணும் என்கிறார்கள்.

பெரும்பாலான பங்குச்சந்தை நிபுணர்கள் இத்துறை சார்ந்த கம்பெனிகள், இப்பொழுதுள்ள நிலைமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல வளர்ச்சியை காணலாம் என்று கூறுகிறார்கள். நவின் ஃப்ளோரின் இன்டர்நேஷனல், எஸ்.ஆர்.எஃப், பி.ஐ ஸ்டரீஸ், கேலக்ஸி சர்ஃபாக்டான்ட்ஸ், கேம்லின் ஃபைன் கெமிக்கல்ஸ், சுதர்சன் கெமிக்கல்ஸ், ராலிஸ் இந்தியா, யு.பி.எல் மற்றும் வினாட்டி ஆர்கானிக்ஸ் போன்றவை இத்துறையின் சில முக்கிய கம்பெனிகளாகும்.

தவிர, கோவிட்-19 லாக் டவுன் நிலையிலும், பெரும்பாலான இத்துறை சார்ந்த கம்பெனிகள் ஏற்கனவே தங்கள் இயக்கங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தொடங்க ஆரம்பித்து விட்டனர். இது, தற்பொழுது நிலவும் மந்த நிலையிலினால் இக்கம்பெனிகளுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

இந்தியா ஒரு மாற்றம்

ஆம்பிட் கேபிடல் ரிசர்ச் (Ambit Capital Research) என்கிற பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் கூற்றின் படி, நடைமுறையில் புதிய பயன்பாடுகள் ஏற்பட்டுள்ள காரணமாக, உலகம் தழுவிய சிறப்பு இரசாயனங்களின் தேவைகள் விரிவடையும்; இந்நேரத்தில், சீனாவின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மைகள் இல்லாத காரணத்தினால், உற்பத்தியை வேறு இடத்துக்கு மாற்றம் காணும் நிலைமை ஏற்பட்டுள்ளது; மேலும், ஐரோப்பிய ஒன்றியதில் தொழிலாளர்கள் மூப்பெய்தி வருவது; மற்றும் இத்துறையில் கம்பெனிகளுக்குள் ஒன்றுக்கொன்று இணைவது அல்லது கையகப்படுத்துவது (M&As) ஆகியவற்றால் இந்திய ரசாயனத்துறை பலனடையும் என கூறுகிறது.

"இந்தியாவில் சிறப்புப் பொறியியல்/ வேதியியல் திறமையாளர்கள் கிடைப்பதினால் ஐ.டி/ஃபார்மாஸுயுடிக்கல்ஸ் துறை பெரும் வளர்ச்சிக் கண்டதுப்போல் (ஜவுளி போலல்லாமல்) ரசாயனத்துறையும் ஜொலிக்கும். அதற்க்காக நிர்வாகங்களும், தயாரிப்பில் திறமையை வளர்ப்பது, வேதியியல் தளங்கள் அமைப்பது, செயல்முறை பொறியியல், உற்பத்தி உள்கட்டமைப்பு வளர்ப்பதில் முதலீடு செய்ய வேண்டும்; QSHE (Quality, health, safety, environment) மற்றும் அங்கீகாரங்களில் இணக்கம்; மற்றும் சிறந்த வாடிக்கையாளர்களுடன் ஈடுபாடு வைத்தல், பல்வேறு பயன்பாட்டுப் பகுதிகளுக்குள் அடியெடுத்து வைப்பதனால், இன்ஃபோசிஸ்/டிசிஎஸ்/சன் ஃபார்மா போன்றவைகள் வளர்ச்சியடைந்ததுப் போல், அடுத்த பத்தாண்டுகளுக்கு இத்துறையும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது ” என்கிறது ஆம்பிட்.

மேலாண்மை திறன், மூலதன ஒதுக்கீடு மற்றும் அளவைக் கையாளும் திறன் (விற்பனை அதிகரிக்கும் போது லாபத்தைக் கையாள்வது அல்லது மேம்படுத்தக்கூடிய ஒன்றாகும்) ஆகியவற்றில் திறமை வாய்ந்தவர்கள் பிஐ இண்டஸ்ட்டிரிஸ் மற்றும் எஸ்ஆர்எஃப் கம்பெனிகள் இருப்பதாக ஆம்பிட் அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், ஆர்தி இண்டஸ்ட்டிரிஸ் மற்றும் நவின் ஃப்ளோரின் ஆகியவை நிறுவன திறன்களை மேம்படுத்துவதில் உறுதியளிப்பதாக இருப்பதாக அது மேலும் கருதுகிறது.

மெக்கின்சியின் ஆலோசனை

பிப்ரவரி 2020 இல் வெளியான கம்பெனிகளுக்கு ஆலோசனை வழங்கும் உலக நிறுவனமான மெக்கின்சியின் (McKinsey) "இந்திய இரசாயனத் தொழில்: வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லுதல் " என்ற அறிக்கையில், உலகளாவிய வேதியியல் தொழிற்துறையில் நிலவும் பாதிப்பு, இந்திய ரசாயன நிறுவனங்களுக்குக் குறுகிய காலத்தில் நல்ல வாய்ப்புகளுக்கு வழிவகுக்குமென்று அது கூறியள்ளது. ரசாயன நிறுவனங்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்து, மதிப்பைத் தருகின்ற வளத்தினை பயன்படுத்துவதின் மூலம், இந்தியாவின் தொழில்துறையின் எதிர்காலத்தையும் நாட்டின் வர்த்தக திறனையும் மேம்படுத்த உதவும்.

இன்று, இந்தியாவில் 15 பில்லியன் டாலர் ரசாயன வர்த்தகத்தில் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவின் இரசாயன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய பகுப்பாய்வில், உலகம் தற்பொழுது தரும் வாய்ப்புகளை மறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, எதிர்பார்க்காத இரண்டு முக்கிய விஷயங்களைப் மெக்கின்லி பரிந்துரைக்கிறது: பெட்ரோ கெமிக்கல்களில் (petrochemical) நிலவும் 52 சதவிகிதம் (அளவின்படி) உள்நாட்டு விநியோக பற்றாக்குறையை நிரப்பி பெட்ரோ கெமிக்கல்களில் தன்னிறைவு பெறுதல் - இது 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாய்ப்பை உருவாக்கும்; சிறப்பு இரசாயனங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்ட பகுதிக்கு ஏற்றுமதியை அதிகரிப்பது, உலக சந்தையில் பெரும் பங்கு எடுத்துக்கொள்வது.

"நம்பகமான கூட்டாளியான சீனாவின் இழப்பு (25 சதவீதம் பங்கு) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்/ஜப்பானில் ஏற்பட்ட மாற்றங்கள் (17 சதவீதம்/7 சதவீதம் பங்கு) இந்தியாவின் சராசரி பங்கை (3 சதவீதம்) அர்த்தமுடன் உயர்த்தும். வேதியியல் மற்றும் பொறியியலில் திறமையாளர்கள் இருப்பது இந்தியாவிற்குச் சாதகமாகச் செயல்படும்,” என்று ஆம்பிட் கேபிடல் கூறியுள்ளது.

இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் நிலவும் லாக் டவுன் சமயத்தில் உறுதியான ஆர்டர்ஸ் வந்தாலும் விநியோகம் செய்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் இருக்கும் பெரிய ரசாயன நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆரோக்கியமான ஆர்டருடன் இருக்கின்றன, ஆனால் தயாரிப்புகளை வழங்குவது அவர்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது. வினாட்டி ஆர்கானிக்ஸ், அட்வான்ஸ்த் என்சைம், எஸ்.ஆர்.எஃப் மற்றும் நவின் ஃப்ளோரின் ஆகியவை அவற்றின் மொத்த வருவாயில் அதிகமாக ஏற்றுமதியை நம்பி உள்ளன.

மருந்துகள், வேளாண்இரசாயனங்கள், வண்ணம் பூசுதல், கட்டுமான பொருட்கள், ஆட்டோமொபைல் பாகங்கள், ஜவுளி மற்றும் பேக்கேஜிங் போன்றவற்றில் கெமிக்கல் பயன்பாடுகள் உள்ளன. ஆனால், மற்ற துறைகளில் மந்தநிலை நீடித்தாலும மருந்து தயாரிப்பு மற்றும் வேளாண் ரசாயன துறையில் அதிக பாதிப்பு இருக்காது. இது கெமிக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக அமையுமென்று டோலட் கேப்பிடல் (Dolat Capital) கூறியுள்ளது.

Translated by P. Ravindran

comment COMMENT NOW