செய்திகள்

ரிலையன்ஸ் கோவிட் -19 தொற்று நோய்க்காக பி.எம்.சிடன் சேர்ந்து சிறப்பு மருத்துவ மையத்தை அமைக்கிறது

Our Bureau Mumbai | Updated on March 25, 2020 Published on March 25, 2020

சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை, பிரஹன் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) உடன் இணைந்து, கோவிட் -19 க்கு நோயாளிகளுக்காக செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்பு மருத்துவ மையத்தை அமைத்துள்ளது.

கோவிட் -19 மையம் இந்தியாவில் முதன்முதலாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிதி மூலம்

அமைக்கப்படுகிறது. இந்த மையம், காற்று மாசுபாட்டைத் தடுத்து, தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் எதிர்மறை அழுத்த அறைகளை உள்ளடக்கியது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைத்து படுக்கைகளிலும் வென்டிலேட்டர்கள், இதயமுடுக்கிகள், டயாலிசிஸ் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நோயாளிகளை கண்காணிக்கும் சாதனங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு போன்ற உயர் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை கண்காணிப்பு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தி சிறப்பு மருத்துவ வசதிகளை அமைந்துள்ளது. மேலும், சந்தேகத்துக்குரிய நபர்களின் நலன்களையும்‌ பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கூடுதல் வசதிகளை பெற்று விரைவாக குணமடையவைக்கும் வசதிகளை கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

கூடுதலாக, இது பல்வேறு நகரங்களில் உள்ள மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நெருக்கடிக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு தேவையான வாழ்வாதார நிவாரணம் மற்றும் இலவசமாக உணவு வழங்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் மகாராஷ்டிராவின் லோதிவலியில் முழுமையான வசதிகளுடன் கொண்ட தடுப்பு தனிமை மையத்தை உருவாக்கி மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் கூடுதல் சிறப்பான சோதனைக்கு உதவ சோதனை கருவிகள் மற்றும் நுகர்பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழுமம் நாளொன்றுக்கு ஒரு லட்சம் முகக்கவசங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் அதிக அளவில் நாட்டின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் வழங்கவும் (பிபிஇ) மற்றும் ஆடைகள் வழங்கவும் முடிவு எடுத்துள்ளது. தங்களது ஆரம்ப ஆதரவை தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹5 கோடி கொடுத்துள்ளது.

எல்லோரும் வீட்டிலேயே இருக்கும்போது இணைந்திருப்பதை உறுதிசெய்ய, ஜியோ அடிப்படை ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை (10 எம்.பி.பி.எஸ்) வழங்கும், இது புவியியல் ரீதியாக சாத்தியமான இடங்களில், எந்த சேவை கட்டணமும் இல்லாமல் வழங்கும், இந்த காலத்திற்கு. ஜியோ ஹோம் கேட்வே ரவுட்டர்களுக்கு குறைந்தபட்சம் திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகையுடன் சேவையை வழங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அனைத்து திட்டங்களிலும் JioFiber சந்தாகாரர்களுக்கும், இரட்டை தரவை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

கோவிட் -19 நோயாளிகளை (அரசு நிறுவனங்கள் வழங்கிய பட்டியல்களின்படி) கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் அனைத்து அவசர சேவை வாகனங்களுக்கும் ரிலையன்ஸ் இலவச எரிபொருளை வழங்கும்.

நாடு முழுவதும் உள்ள 736 ரிலையன்ஸ் சில்லறை விற்பனை கடைகளில், முக்கிய உணவுப்பொருள்கள் , பழங்கள் மற்றும் காய்கறிகள், ரொட்டி, காலை உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் போதுமான அளவில் சேமித்து வைக்கவும், இதனால் மக்கள் பயப்படாமல் இருக்க உதவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை கடைகள் திறந்திருக்கும்- . கடை முன்புறத்திலிருந்து நுகர்வோர்க்கு தேவையான பொருட்களை கடை ஊழியர்கள் பெற்று கொண்டு அதை அங்கேயே வழங்குவதின் மூலம் நோய் பரவாமல் இது தடுக்கும் . மேலும் மூத்த குடிமக்களிடமிருந்து நேரடி விநியோக உத்தரவுகளையும் எடுக்கும்.

எரிபொருள் பற்றாக்குறை பயத்தை போக்கும் வகையில் அனைத்து ஆர்ஐஎல் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி காரணமாக ரிலையன்ஸ் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காலங்களிலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கும். மாதத்திற்கு 30,000 ரூபாய் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு, அவர்களின் பணப்புழக்கத்தைப் பாதுகாப்பதற்கும், நிதிச் சுமையையும் குறைப்பதற்கும் மாதத்திற்கு இரண்டு முறை சம்பளம் வழங்கப்படும்.

Translated by P Ravindran

Published on March 25, 2020
  1. Comments will be moderated by The Hindu Business Line editorial team.
  2. Comments that are abusive, personal, incendiary or irrelevant cannot be published.
  3. Please write complete sentences. Do not type comments in all capital letters, or in all lower case letters, or using abbreviated text. (example: u cannot substitute for you, d is not 'the', n is not 'and').
  4. We may remove hyperlinks within comments.
  5. Please use a genuine email ID and provide your name, to avoid rejection.