நாடு தழுவிய லாக் டவுனால் வீட்டுக் கடன் வழங்கல் ஸ்தம்பித்து உள்ளது. ஆனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், வணிக நடவடிக்கைகள் இந்த வருட இறுதியில் மீண்டும் முழுவீச்சில் தொடங்குமென்றும் மற்றும் வட்டி விகிதங்கள் குறைந்து இருப்பதால் வீட்டீற்க்கான தேவைகள் மீண்டெழும் என்கிறார்கள்.

வணிகம் மற்றும் வியாபாரங்கள் லாக் டவுன் அறிவிக்கப்படுவதற்கு ஏழு-எட்டு நாட்களுக்கு முன்பே பாதிப்புக்கு உள்ளானது. அதன் பிறகு, எங்கள் குழு எங்கும் செல்ல முடியாத காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்கிறோம். வீட்டுக் கடனில், சொத்தைச் சரிபார்த்து, சட்ட ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கையொப்பத்தை எடுத்துக் கொள்ளாமல், கடனை வழங்கமுடியாது. இவை அனைத்தும் நேரிடையாக செய்ய வேண்டிய செயல் என்பதினால், முழு விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது, என்று ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தியோ ஷங்கர் திரிபாதி கூறினார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுமார் ₹500 கோடி கடன்களை வழங்க நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. "பெரும்பாலான விண்ணப்பங்களுக்குக் காசோலைகள் கூட தயாராக இருந்தது," என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், வீட்டுவசதி நிறுவனத்தைச் சேர்ந்தவர், வாடிக்கையாளர்கள் ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியிருப்பதால் கடன் வழங்குவது நடைபெறவில்லை.

"பிற சில்லறை கடன்களை ஆன்லைன் மூலமாகத் தரமுடியும், ஆனால் வீட்டுக் கடன்களில் அப்படி இல்லை. தற்பொழுது ஏற்கனவே வாங்கிய கடன்களின் கூடுதல் தொகை தரப்படுகிறது,” என்று அவர் கூறினார்,

இதைத்தவிர மேலும் சில ஒப்புதல்கள் வழங்கப்படுகின்றன.

ஏப்ரல் 20 முதல், என்.பி.எஃப்.சி மற்றும் எச்.எஃப்.சி கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆதார் எச்.எஃப்.சி சுமார் 40 முதல் 45 கிளைகள் திறந்தபோதிலும், அவை முற்றிலும் தேவையில்லாத சிறிய நகரங்களில் உள்ளன என்றும் திரிபாதி கூறினார்.

99acres.com இன் அறிக்கையின்படி, முதல் இரண்டு மாதங்களில் சொத்து விற்பனை மற்றும் புதிய அறிவிப்புகள் குறைந்துவிட்டன, கொரோனா வைரஸ் அதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. "நாடு தழுவிய லாக் டவுனுக்குப் பிறகு டெவலப்பர்கள் அனைத்து புதிய அறிமுகங்களையும் பண்டிகை சலுகைகளையும் குறைந்தது அடுத்த இரண்டு முதல் மூன்று காலாண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளார்கள். எட்டு பெருநகர் மார்க்கெட்டில் 6.48 லட்சம் வீட்டு மனைகள் விற்கப்படாமல் உள்ளன, ”என்று அது கூறியுள்ளது.

வங்கிகளும் வீட்டுக் கடன்களில் சிறிய அளவே ஆர்வம் இருப்பதாகவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் புத்துயிர் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

"லாக் டவுன் செயலில் இருப்பதால் கடனை பற்றி ஆர்வமில்லை. பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், மக்கள் காத்திருந்து பிறகு பார்க்கலாமென்ற முறையில் இருக்கிறார்கள், ”என்று ஒரு வங்கியாளர் கூறினார்.

ஆனால் ரெப்போ வீதம் 15 ஆண்டுகளில் குறைந்த 4.40 சதவீதமாக இருப்பதால், வீட்டுக் கடன்களுக்கான தேவை படிப்படியாகப் புத்துயிர் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது, குறிப்பாகச் சம்பளம் பெறும் நபர்களிடமிருந்து, இது வீடு வாங்குவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

"தேவைகள் மறுபடியும் வருவதை நாங்கள் நிச்சயமாகக் காண்போம், குறிப்பாக மலிவு மற்றும் நடுத்தர வருமான வீட்டுவசதிப் பிரிவுகளில், மிக உயர்ந்த நிலையில் உள்ளவைகள் சிறிய வலியைக் காணும் . பழைய நிலைக்கு எப்போது திரும்பி வரும் என்பதைக் கணக்கிடுவது கடினம்,” என்று ஒரு வீட்டு நிதி நிறுவனத்தின் தலைவர் கூறினார். விற்கப்படாத வீடுகளை வைத்திருக்கும் பில்டர்களும் கவர்ச்சிகரமான விலையை வழங்குவார்கள் என்று கூறினார்.

திரிபாதியும் தேவைகள் படிப்படியாகப் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார். "ஒழுங்கமைக்கப்பட்ட சம்பள பிரிவினர்களில், வருமானம் பாதிக்கப்படாதவர்கள், நிச்சயமாக வீடு வாங்குவார்கள்."

99acres.com இன் தலைமை வணிக அதிகாரி மனீஷ் உபாத்யயா கூறுகையில், “விலைகள் குறைய வாய்ப்புள்ள போதிலும், சமூக தொலைதூர கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், வீடு வாங்குபவர்கள் படிப்படியாகச் சந்தைக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடன் தடை மற்றும் ரெப்போ வீதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் குறைத்தல் உள்ளிட்ட அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நடப்பு நிலை சார்ந்த நடவடிக்கைகள் வீடு வாங்குபவர்களிடம் இருந்த நிச்சயமற்ற தன்மையைத் தணிக்க உதவியது. ஆனால் இந்தத் தொழில் அரசாங்கத்திடமிருந்து கூடுதல் ஆதரவைப் எதிர்பார்க்கிறது.”

Translated by P Ravindran

comment COMMENT NOW