தற்பொழுது ஏற்பட்டுள்ள தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக பொருளாதார மந்தநிலை காரணமாக, மக்கள் அவர்களின் நிதி ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை காட்டுவதில் ஆச்சரியமில்லை.

ஆனால், சமீபத்தில் மேற்கொண்ட சர்வே படி, 90 சதவிகிதத்தினர் தங்கள் சேமிப்பு மற்றும் நிதி எதிர்காலம் குறித்து அக்கறை கொண்டுள்ளனரென்றும், 94 சதவீதம் பேர் செலவு செய்வதில் இனி‌ அதிக கவனமாக இருக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் வழியாக கடன் வழங்கும் தளமான இந்தியாலெண்ட்ஸ் (IndiaLends) நடத்திய ஒரு ஆய்வில், இந்த தொற்றுநோய், சம்பளம் மற்றும் தொழில் பண்பட்டவர்கள் (professional) நிதி ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதென்றும், 82 சதவீதம் பேர் தாங்கள் முடிவெடுப்பதில் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த சர்வே 5,000 நபர்களிடம் நடத்தப்பட்டது.

தனிநபர் கடன் ‌உயரும்

மேலும்

, அத்தியாவசிய செலவினங்களை சமாளிக்க தனிநபர் கடன்களை வாங்க அதிக விருப்பம் உள்ளதாகவும் சர்வே தெரிவித்துள்ளது. சுமார் 72 சதவீத மக்கள் கடன் திருப்பிச் செலுத்துதல், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவம், கல்விக் கட்டணம் மற்றும் வீட்டு பழுது மற்றும் புதுப்பித்தல் போன்ற செலவீனங்களை பூர்த்தி செய்ய, வரும் காலத்தில் தனிநபர் கடனைத் தேர்வு செய்வதாகக் கூறியுள்ளனர்.

பல நிறுவனங்கள், ஏற்கனவே சம்பள குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளனர். மேலும், தேசிய லாக் டவுனால், பல தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தத்திற்கு வந்ததால், வேலையிழப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் உற்பத்தியை மறுதொடக்கம் செய்யவில்லை. எனவே தனிநபர்கள் செலவு மற்றும் முதலீடுகளில் இறுக்கமான நிலையிருக்கும்.

சுமார் 76 சதவீதம் பேர் இந்த நேரத்தில் புதிய முதலீடுகளைக் கருத்தில் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். மற்றும் 40 சதவீதம் பேர் அத்தியாவசிய பொருட்களுக்கான செலவினங்கள் அதிகரிக்குமென்று கூறியுள்ளனர்.

பார்த்து, பார்த்து செலவு

அதே

நேரத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 க்கு பிந்தைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு, ஆடம்பர மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களுக்குக் குறைவாகச் செலவு செய்யப்போவதாக கூறியுள்ளனர். வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே ஆடம்பரப் பொருட்களுக்கான செலவினங்களில் கவனம் செலுத்தப்போவதாகவும் மற்றும் வெறும் 9 சதவீதம் பேர் பயணம் மற்றும் விடுமுறை நாட்களில் அதிக செலவு செய்யப் போவதாகக் கூறியுள்ளனர்

சம்பளம் பெறும் தனி நபர்கள் மற்றும் தொழிற் பண்பட்டவர்கள் ( (professionals), குறிப்பாக, வேலையிழப்புகள் மற்றும் ஊதிய குறைப்புகளின் ஏற்பட்டுள்ள சுமைகளைச் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களின் வருமானம் மற்றும் சேமிப்பில் ஏற்பட்டுள்ள தாக்கம், சில்லறை கடன்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது என்று இந்தியாலெண்ட்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கவுரவ் சோப்ரா கூறினார்.

நிறுவனம் அளித்த புள்ளிவிவரப்படி, அதன் வாடிக்கையாளர்களில் 71 சதவீதம் பேர் ஏற்கனவே கடன் வாங்கியுள்ளனர்; அதில் 45 சதவீதம் பேர் கடன்களைத் தள்ளிப்போட விண்ணப்பித்துள்ளனர்.

Translated by P Ravindran

comment COMMENT NOW