வானிலை

தேசிய வானிலை முன்னறிவிப்பு மற்றும் வெப்பநிலை நிலவரம்: ஜனவரி 23, வியாழக்கிழமை

Vinson Kurian ஜனவரி 23 | Updated on January 23, 2020

Weather forecast   -  IMD

உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் அடர்த்தியான மூடுபனி நிலைகளுக்கு மத்தியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெப்பநிலை மேலும் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வரிக்கை கூறுகிறது.

உள்வரும் மேற்கு இடையூறு கடைசியாக நகர்ந்து, வட பாகிஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருப்பதை ஐஎம்டி யின் ஆய்வறிக்கை குறிக்கிறது.

அடுத்த மேற்கத்திய இடையூறு ஜனவரி 28

அடுத்த வலுவான மேற்கத்திய இடையூறு ஜனவரி 28 வரை (அடுத்த செவ்வாய்க்கிழமை) இருக்காது, இருப்பினும் ஒரு பலவீனமான இடையூறு நாளை (வெள்ளிக்கிழமை) வடமேற்கு இந்தியாவின் மலைப்பகுதிகளை பாதிக்கலாம்.

முதலாவது மேற்க்கத்திய இடையூறானது, வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை துருக்கி, சிரியா மற்றும் ஜோர்டான் வழியாக ஈராக், வடக்கு சவுதி அரேபியா மற்றும் மேற்கு மற்றும் வட ஈரான் ஆகிய நாடுகள் வழியாக பயணித்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவை அடையும் முன்பு மழை மற்றும் பனிப்பொழிவை கொடுக்கும்.

இரண்டாவது இடையூறானது, மேற்கு ஈரானுக்குள் நுழைந்து இன்று (வியாழக்கிழமை) கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வடக்கு ஓமான் ஆகிய நாடுகளில் மழை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பும். இம்மாநிலங்களை தவிர நாட்டின் பிற இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (குடியரசு தினம்) வரை வறண்ட காலநிலையே நிலவும் என ஐஎம்டி கணித்துள்ளது.

வடக்கு ராஜஸ்தான், பீகார், சிக்கிம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அடர்த்தியான மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

 

Kolkata woke up to foggy weather and a bit of a drizzle. Photo: Debasish Bhaduri

 

உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும், பஞ்சாப் மற்றும் ஹரியானா, சண்டிகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை நிலைகள் நிலவும்.

நாளை (வெள்ளிக்கிழமை) வரை வடக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் பகல் மற்றும் இரவு வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை, அதே நேரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.

அடர்த்தியான மூடுபனி மற்றும்குளிர் அலை நிலைகள்

வார

இறுதி மற்றும் அடுத்த வார நாட்களுக்கான ஒரு அலசல்: இன்று (வியாழக்கிழமை): பீகார், வங்காள மலைகள், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் அடர்த்தியான மூடுபனி. ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குளிர் அலை நிலையும், கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்று (மணிக்கு 45 முதல் 55 கிமீ) வேகத்தில் வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.வெள்ளிக்கிழமை (நாளை): உத்தரபிரதேசத்தில் குளிர் அலை நிலை நிலவும்.

சனிக்கிழமை: உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மீது அடர்ந்த மூடுபனி நிலவும்

ஞாயிற்றுக்கிழமை: உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மீது அடர்ந்த மூடுபனி நிலவும்.

திங்கட்கிழமை: உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மீது அடர்ந்த மூடுபனி. இப்பகுதியில் நுழையும் புதிய மேற்கத்திய இடையூறு வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் மலைகள் மற்றும் அருகிலுள்ள சமவெளிகளில் ஆங்காங்கே மழை கொடுக்கும்.

இன்று (வியாழக்கிழமை) காலை, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் பீகார் முழுவதும் அடர்த்தியான மூடுபனி நிலவியது. கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் மிதமான மூடுபனி காணப்பட்டது.

சில்சார் மற்றும் பூர்னியாவில் 50 மீட்டருக்கும் குறைவாகவும் மற்றும் பெந்த்ரா சாலை மற்றும் கைலாஷாஹரில் 200 மீட்டருக்கும் குறைவாக காணும் நிலை (Visibility) இருந்தது.

முக்கிய பெருநகரங்களில், புது தில்லி காலை 9 மணி நிலவரப்படி 13 டிகிரி செல்சியஸில் பனிமூட்டமாகவும் குளிராகவும் இருந்தது, சென்னை நகரும் பனிமூட்டத்துடன் 28 டிகிரி செல்சியஸில் சற்றே வெப்பமாக இருந்தது.

மும்பை நகரம் 25 டிகிரி செல்சியஸில் ஓரளவு மேகமூட்டத்துடன் இன்றைய நாளை வரவேற்றது. காலை 9 மணியளவில் புகைமூட்டமும் பதிவானது.

நேற்று (புதன்கிழமை) நிலவரப்படி, அதிகபட்ச (நாள்) வெப்பநிலை 37.1 டிகிரி செல்சியஸ் மங்களூரு மற்றும் கொச்சி (கேரளா) ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது. அதே சமயம் மிகக் குறைந்த (இரவு) வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியஸ் புர்சட்கஞ்சில் (கிழக்கு உத்தரப்பிரதேசம்) பதிவானது.

Translated by Srikrishnan PC

 

Weather table for January 23, 2020

 

Published on January 23, 2020

Follow us on Telegram, Facebook, Twitter, Instagram, YouTube and Linkedin. You can also download our Android App or IOS App.

This article is closed for comments.
Please Email the Editor

You May Also Like