ஆப்கானிஸ்தானில் இருந்து வடமேற்கு இந்தியாவுக்கு செல்லும் (வலுவான மற்றும் ஆழமான) மேற்க்கத்திய இடையூறு,  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேற்கு ராஜஸ்தானில் ஒரு சுழற்சியாக வீசி அதன் திறனை காட்டியது.

மலைகளில் மழை அல்லது பனி, மற்ற இடங்களில் இடியுடன் கூடிய மழை

இந்த சூறாவளி சுழற்சியுடன் தொடர்புடைய வட-மேற்கு காற்று வட அரபிக்கடலில் ஆழமாக உருவாகி, ஈரப்பதத்தை கடத்தி இமயமலைக்கு நிகராக உயர்ந்து, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மலை பகுதிகளில் மழை அல்லது பனியாக பொழியும் மற்றும் வடக்கு, வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை, அல்லது ஆலங்கட்டி மழை மற்றும் தூசி புயலாக (Dust storm) வீசக்கூடும்.

வடமேற்கு இந்தியாவின் மலை பகுதிகளில் இன்று மற்றும் நாளை (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) பரவலான மழை அல்லது பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இரவு நேர வெப்பநிலை உயரக்கூடும்

வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் ஒரு சில இடங்களில் மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்று கிழக்கு இந்தியா முழுவதும் மேற்க்கத்திய இடையூரின் கிழக்கு நோக்கிய இயக்கம் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையை கொடுக்கும், மேலும் நாளை (புதன்கிழமை) பரவலாக ஆங்காங்கே மழை இருக்கும்.

வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளிலும், வடக்கு சமவெளிகளிலும் நாளை (புதன்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை வரை அடர்த்தியான மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று காலை, கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் ஒரு சில பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது, இதனால் பஹ்ரைச் மற்றும் கோரக்பூரில் காணும் நிலை (visibility) 25 மீட்டருக்கு குறைவாகவும், சுல்தான்பூர், பிகானேர், பூர்னியா மற்றும் கைலாஷாஹரில் 200 மீட்டருக்கு குறைவாகவும் இருந்தது.

மேற்கத்திய இடையூறுகளின் வருகையும், வட அரபிக்கடலில் இருந்து ஈரப்பதத்தால் உண்டாகும் வெப்பத்தாலும், பகல் வெப்பநிலை குறைவாக இருந்தாலும், மேகங்களின் காரணமாக  இரவு நேர வெப்பநிலை உயரக்கூடும்.

நேற்று (திங்கட்கிழமை) நிலவரப்படி, அதிகபட்ச பகல் வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ் பாலக்காடு (கேரளா) மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை பஹ்ரைச் (கிழக்கு உத்தரப் பிரதேசம்) 4.4 டிகிரி செல்சியசாக பதிவானது.

தி வெதர் கம்பெனியின் கண்ணோட்டம்

ஐபிஎம் வர்த்தக நிறுவனமான தி வெதர் கம்பெனி, பஞ்சாப் சமவெளியில் இருந்து கங்கை சமவெளி வரை புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், இது பலவீனமடையும் எனவும் தெரிவித்துள்ளது. புதன்கிழமை வரை உணரப்படும் மொத்த மழைப்பொழிவு ஐந்து மி.மீ அளவு இருக்கும். ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் பனிப்பொழிவு 20 முதல் 50 செ.மீ வரை இருக்கும். மேற்கு இடையூறு குறைந்த பின்னர், மீதமுள்ள ஈரப்பதம் வியாழக்கிழமை காலை பஞ்சாப் மாநில சமவெளிகளில் பரவலாக அடர்த்தியான மூடுபனியை உருவாக்கும்.

சத்தீஸ்கர், பீகார் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் காற்று குவிதல் (Convergence) காரணமாக ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். புதன்கிழமை இந்த செயல்பாடு கிழக்கு நோக்கி விரிவடையும்.

வியாழக்கிழமை வடகிழக்கு இந்தியாவில் மழை மற்றும் மலைப்பனி அதிகரிக்கும். மத்திய இந்தியாவில் அதிகபட்ச (நாள்) வெப்பநிலை வியாழக்கிழமை முதல் இயல்பை விட 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். பஞ்சாப் மற்றும் கங்கை சமவெளிகளில் குறைந்தபட்ச (இரவு) வெப்பநிலை தென்மேற்கு காற்று, தெளிவான வானத்துடன் வாரத்தின் நடுப்பகுதி வரை இயல்பை விட 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக இருக்கும்.

2005க்கு பிறகு இது ஒரு ஈரப்பதமான ஜனவரி என  ஸ்கைமெட் கூறுகிறது

தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் ஸ்கைமெட் வானிலை ஒரு பகுப்பாய்வில், முந்தைய வாரத்தில் மேற்கத்திய இடையூறுகள் வடக்கு மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இடியுடன் கூடிய மழையின் செயல்பாடுகள் இருந்தன. இந்த ஜனவரி மாதத்தில் சராசரி மழைப்பொழிவினை விட இரு மடங்காக மழையளவு பதிவாகியுள்ளது. மேற்கத்திய இடையூறு மற்றும் கிழக்கில் வழக்கத்திற்க்கு மாறான பருவகால வானிலை செயல்பாடு மற்றும் வட இந்தியாவில் நிகழும் மழைப்பொழிவு ஆகியவற்றை பார்க்கும்பொழுது இந்த மாதமானது 2005க்கு பிறகு ஒரு ஈரப்பதமான ஜனவரி என  ஸ்கைமெட் கூறுகிறது.

மேற்கு இடையூரினால் ஹரியானா, பஞ்சாப், வடக்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி என்.சி.ஆர் ஆகிய இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், ஆலங்கட்டி மழைக்கான வாய்ப்பும் ஒரு சில இடங்களில் இருக்கும்.

மும்பை, புனே, நாசிக் பகுதிகளுக்கு லேசான மழை

இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஆங்காங்கே மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். இது பின்னர் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முழு பிராந்தியத்தையும் உள்ளடக்கி மழைப்பொழிவைத்தரும் நிகழ்வாக அமையும்.

மேற்க்கில் இன்று தெற்கு குஜராத்தின் சில பகுதிகளிலும், அகமதாபாத், காந்திநகர், வதோதரா ஆகிய இடங்களிலும் லேசான மழை இருக்கும்.

சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் இன்றும் நாளையும் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) சில அசாதாரண பருவகால செயல்பாடுகள் நிலவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்ரவரி 1 மற்றும் 2) விதர்பா மற்றும் மத்திய பிரதேசத்தில் இதே போன்ற ஒரு நிகழ்வை எதிர்பார்க்கலாம். மும்பை, புனே மற்றும் நாசிக் பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்கும், மும்பையில் குறைந்தபட்ச (இரவு) வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகக் குறையக்கூடும்.

தெற்கு தீபகற்பத்தை பொருத்தவரை இந்த வாரம் எந்தவொரு குறிப்பிடத்தக்க வானிலை நடவடிக்கையையும் இருக்காது என ஸ்கைமெட் வானிலை கூறியுள்ளது. தெலுங்கானா மற்றும் கடலோர ஆந்திராவின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்கு கடலோரத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்து காணப்படலாம், அதே நேரம் சென்னை நகரில் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும்.

Translated by Srikrishnan PC

comment COMMENT NOW