New Delhi

கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள வர்த்தக இடையூறுகளுக்கு மாற்றாக சில நாடுகளால், பெரும்பாலும் வளர்ந்த நாடுகள், முன்மொழியப்பட்ட பண்ணை தயாரிப்புகளுக்கான நிரந்தர சுங்க வரிச் சலுகைகளுக்கு, உலக வர்த்தக அமைப்பில் (WTO) இந்தியா எதிர்ப்பு தெரிவித்து ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

உலகச் சந்தையில் சலுகைகள் பெற, வளர்ந்த நாடுகள் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தப்படக்கூடாதென்று பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியா கூறியுள்ளது. இந்த வரிகள் மூலம், உலகச்சந்தையில் வளர்ந்த நாடுகள் மேலும் தங்கள் ஆதிக்கத்தைப் பெறுவதற்கான ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம் என்று இந்தியா வாதிட்டுள்ளது.

தொற்றுநோயின் பொருளாதார மற்றும் வர்த்தக தாக்கம் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உலக வர்த்தக அமைப்பின் சமீபத்தில் நடந்த பொதுக்குழுவின் கூட்டத்தில், புது தில்லி, வளரும் நாடுகள் தங்களது புதிய தொழில்களைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று வாதிட்டது. இதைக் காரணமாக வைத்துப் பல உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் பலவிதமான தயாரிப்புகளில் நிரந்தர சுங்க வரி கோருவது, இந்த நெருக்கடியில் தங்கள் ஏற்றுமதியாளர்களுக்கான சந்தையை விரிவு பெறுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகத் தோன்றுகிறது என இக்கூட்டத்தில் இந்தியா அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, சிலி மற்றும் புருனே ஆகியவை சில வாரங்களுக்கு முன்பு ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் திணிப்பதற்க்காக, சுங்க வரி மற்றும் சுங்க வரி நீக்கிய பொருட்களுக்குள்ள கட்டுப்பாடுகள் போன்றவைகளின் எதிராக ஒரு கூட்டறிக்கையை கொண்டு வந்தன.

கோவிட்-19 க்கு எதிரான நடவடிக்கை மத்தியில், அத்தியாவசிய பொருட்கள், குறிப்பாக மருத்துவ பொருட்கள் மீதான நிலவும் வர்த்தகத்தடை நடவடிக்கைகளை அகற்றுவதையும் அவர்கள் எதிர்த்தனர்.

வளரும் நாடுகள், தங்களது மருத்துவ தயாரிப்புகளில் உற்பத்தித் திறனை உயர்த்த முற்படும் வேலையில் அவர்களின் உள்நாட்டுத் தொழிலுக்குச் சுங்க வரி பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். மேலும், பல சேவைத் துறைகளில் ஏற்படும் வேலை இழப்புக்களை வேறு இடங்களில் அதை ஈடுசெய்யப்பட வேண்டும். எனவே, பல வளரும் நாடுகளைப் போலவே, இந்தியாவும் நிரந்தர சுங்க வரிச் சலுகைகளுக்கு உடன்படமுடியாது. சுங்க

வரியைப் பலவீனப்படுத்தவும் கூடாது, காரணம், உருகுவே சுற்றில் அதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம் என்று இந்தியா அறிக்கையில் கூறியுள்ளது.

உறுப்பினர்கள் சுதந்திரமாகக் குறிப்பிட்ட சுகாதார அல்லது உணவுப் பொருட்களின் இறக்குமதி மீதான சுங்க வரிகளைப் பூஜ்ஜியமாகக் குறைக்கலாம். நான் அதுவும் உடல்நலம் மற்றும் உணவு பாதுகாப்பு நோக்கங்களுக்கு உதவுகிறது என்றால் மட்டுமே. ஆனால், அது தன்னார்வ அடிப்படையில் இருக்க வேண்டும், என்று இந்தியா மேலும் கூறியுள்ளது.

கோவிட்-19 இடையூறுகளுக்குத் தீர்வு காணும்பொழுது, முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தொற்றுநோயின் தாக்கம் ஒரே மாதிரியாக இல்லை, பரவலாக இருக்கிறது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார சிரமம், உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சமமற்ற நிலையில் பெரிய மக்கள்தொகை மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களைக்கொண்ட, வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைப் பாதிக்கும். எனவே, அவர்களைச் சிறப்பாகக் கவனிக்கவேண்டும் என்று இந்தியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முக்கிய மருத்துவ பொருட்கள், உணவு மற்றும் பிற பொருட்கள் மற்றும் எல்லைகளைத் தாண்டிய சேவைகளின் உள்ள இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக உலகம் எதிர்பார்க்கின்ற ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை இந்தியா ஏற்றுக்கொள்கிறது, மேலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பாராசிட்டமால், மற்றும் முக்கிய மருந்துகள் உலகம் முழுவதும் கிடைப்பதை உறுதி செய்வதில் ஒரு முக்கிய பங்கு ஆற்றியுள்ளது என இந்தியா மேலும் கூறியுள்ளது

(Translated by P Ravindran)

comment COMMENT NOW