கொரோனா வைரஸ் சென்னையில் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், தமிழக‌ அரசு ஐந்து அமைச்சர்களை மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைந்து செயல்பட மண்டலங்கள் வாரியாக நியமித்துள்ளது.

அவர்கள் நகரத்தின் மோசமாகப் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் பணிகளை மேற்கொண்டிருக்கும் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் மற்றும் கள ஆதரவு குழுக்களுடன் (மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய) ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள்.

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 27,256 கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில், சென்னையில் மட்டும் 18,693 பேர் உள்ளனர். இதில், 9,459 பேர் குணமடைந்து வீடு திரும்பியள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,066 ஆக உள்ளது.

அரசு உத்தரவுப்படி, டி. ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்) 3, 4 மற்றும் 5 மண்டலங்களுக்கும், கே.பி. அன்பழகன் (உயர்கல்வி அமைச்சர்) 13, 14, &15 மண்டலங்களுக்கும், ஆர் காமராஜ் (உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு‌ அமைச்சர்)

1, 2 & 6 மண்டலங்களுக்கும், ஆர்.பி. உதயகுமார் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்) 8, 9 & 10 மண்டலங்களுக்கும் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் (போக்குவரத்து அமைச்சர்), 7,11 & 12 மண்டலங்களுக்கும் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள், என தலைமைச் செயலாளர் கே சண்முகம் கூறியுள்ளார்.

comment COMMENT NOW