கொரோனா தோற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், விமானப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் ஊழியர்களுக்கு எதிராக சிலர் தவறாக நடந்து கொண்டதால் தான் மிகவும் வேதனையடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
இந்த கொடிய நோய் பணக்காரர்கள், ஏழைகள் என்று வேறுபாடு பார்ப்பதில்லை என்றும், அதனால் அவர் மக்களை வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
தனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதி மக்களை வீடியோ மூலம் உரையாற்றிய அவர், மகாபாரதப் போர் 18 நாட்களில் வென்றது, ஆனால் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போர் 21 நாட்கள் எடுக்கும் என்றார்.
இது செவ்வாயன்று அவர் அறிவித்த 21 நாள் நாடு தழுவிய முடக்கத்தை ஒட்டி இதை குறிப்பிட்டார்.
Translated by P Ravindran
Please Email the Editor