ஏறக்குறைய அனைத்து முன்னணி ஐடி (IT) நிறுவனங்களான இன்போசிஸ் (Infosys), டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ (Wipro), எச் சி எல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) மற்றும் எல்&டி இன்ஃபொடெக் (L&T Infotech) ஆகியவை தங்களது அக்டோபர்-டிசம்பர் காலாண்டு முடிவுகளை அறிவித்துவிட்டனர். ஆனால் மற்றொரு முன்னணி நிறுவனமான டெக் மஹிந்திரா (Tech Mahindra ) தனது காலாண்டு நிதி அறிக்கை முடிவுகளை வரும் ஜனவரி 30-ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இதுவரை அறிவித்த கம்பெனிகளின் முடிவுகளை பார்க்கும் பொழுது,  ஐடி செக்டாருக்கு (IT Sector) இது ஒரு கலவையான காலாண்டுத் தான். சில நிறுவனங்கள் அபாரமாகவும், சில சுமார் மற்றும் மந்தமாகவும் இந்த காலாண்டில் தங்கள் வரவு-செலவு நிதிச் செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இன்போசிஸ் (INFOSYS ) அனைத்து தரிப்பினராலும் மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்ட கம்பெனி இன்போசிஸ் (INFOSYS ) ஆகும். இந்த கம்பெனியின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து (Whistle blowers), குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இன்போசிஸ் தனது காலாண்டு ரிசல்ட்டை அறிவித்து. Q3 காலாண்டில் அதன் நிதி செயல்திறன், நிபுணர்களின் எதிர்பார்ப்பை மீறி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. சில முன்னாள் ஊழியர்கள், அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மீது அவர் சில முறைத்தறிவிய வழிகளை பின்பற்றுகிறார் (unethical practices ) என குற்றம் சாட்டினார்கள். கடந்த காலாண்டில், நிகர லாபம் முந்தய ஆண்டின் காலாண்டைவிட 38% சதவீதம் உயர்ந்து ரூ 5,129 கோடிகளை எட்டியது. மொத்த வருவாயும் 3% உயர்ந்து ரூ 17,794 கோடிகளை ஈட்டியுள்ளது. மேலும், இந்த நிதியாண்டில், எதிர்பார்ப்பை விட, மிக வேகமாக வளர்ச்சியடையும் எனவும் கம்பெனியின் மூத்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், முத்தாய்ப்பாக,  தணிக்கைக் குழு (auditor committee) தன் விசாரணைக்குப் பிறகு, முன்னாள் ஊழியர்கள் குற்றச்சாட்டில், எந்த முகாந்திரமும் இல்லை என அறிவித்துவிட்டது. இந்த அறிவுப்புகளுக்கு பிறகு, பங்குத்தரகு மற்றும் நிபுணர்கள், இன்போசிஸின் பங்குகளை வாங்கலாம் என அறிவுறுத்துகிறார்கள். இந்த பங்குகள் ரூ 865 வரை போக வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். எல்&டி இன்ஃபொடெக் (L&T Infotech ) எல்&டி இன்ஃபொடெக் ரிசல்ட்ஸ் மிகவும் அபாரமாக வந்துள்ளது. Firing on all cylinders என  ஆங்கிலத்தில் கூறுவதைப் போல், அனைத்து துறைகளிலும் (verticals) இந்தக் கம்பெனி மிகச் சிறப்பான முடிவுகளை  வெளிப்படுத்தியுள்ளது. பங்கு நிபுணர்களின் எதிர்பார்ப்பை மீறி, கடந்த காலாண்டின் நிகர லாபம் ரூ 377 கோடிகளை எல்&டி இன்ஃபொடெக் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டை விட சுமார் ௦.50 சதவீதம் அதிகமாகும். மொத்த வருவாயும் 13.7%  உயர்ந்து ரூ 2,811.10 கோடிகளை எட்டியுள்ளது. முந்தைய காலாண்டில் (Q2 ), இரண்டு மிகப் பெரிய வாடிக்கையாளர்கள் மிகவும் சிக்கலாக இருந்தார்கள். ஆனால், கடந்த காலாண்டில் (Q3), புதிய வாடிக்கையாளர்களை  ஈர்த்தது மட்டுமின்றி பழைய வாடிக்கையாளர்களையும் தக்கவைத்துக்  கொண்டதால், பங்கு நிபுணர்கள்  எல்&டி இன்ஃபொடெக்கிற்கு இனி வரும் காலம் வசந்தக் காலமாகவே இருக்குமென எதிர் பார்க்கிறார்கள். ஆனால் இந்த பங்கு கடந்த சில வாரங்களில் மிக மேலே உயர்ந்துள்ளதால், இப்பொழுது இருக்கும் விலையிலிருந்து அதிகம் உயர வாய்ப்பில்லை எனவும் அவர்கள் கருதுகிறார்கள். HCL Technologies சிவ் நாடாருக்கு (Shiv Nadar) உரிமையான எச் சி ல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) கூட பங்கு நிபுணர்களின் எதிர்பார்ப்பை மீறி ஒரு உன்னதமான காலாண்டு ரிசல்ட்டை வெளியுட்டுள்ளது. மேலும் இந்த முழு ஆண்டிற்கான வளர்ச்சியையும் 17% ஆக உயர்த்தியுள்ளது.  கடந்த  காலாண்டின் நிகர லாபம் முந்தைய வருட காலாண்டை விட 13% உயர்ந்து ரூ 2,944   கோடிகளை எட்டியுள்ளது. அதேப்போல் வருவாயும் 15% பெருகி  ரூ 18,135 கோடிகளை எட்டியுள்ளது இந்த காலாண்டின் செயல்ப்பாடை கண்டு பங்கு சந்தை நிபுணர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் எச் சி ல் டெக்கின் பங்குகள் ரூ 700 வரை செல்ல வாய்ப்புள்ளதாக தரகு நிறுவனமான எம்கே குளோபல் (Emkay Global) தெரிவித்துள்ளது. டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS) இந்தியாவின் இரண்டாவுது  பெரிய சந்தைமதிப்பு (market capitalisation) கம்பெனியான டாடா கன்சல்டண்சி சர்வீஸின் (TCS) வரவு-செலவு கணக்கு Q3-காலாண்டில் சற்று மந்தமாகவே வந்துள்ளது. நிகர லாபம், கடந்த காலாண்டில் ரூ 8,118 கோடியாக அறிவுத்துள்ளது. இது ஏறக்குறைய முந்தைய ஆண்டின் இதே காலத்தின் லாப அளவேயாகும். வருவாயும் அதேப்போல் சம அளவில் தான் வந்துள்ளது. முக்கிய துறைகளான (verticals ) வங்கி மற்றும் நிதிச்சார்ந்த துறை வியாபாரம் (BFSI ), வர்த்தக துறை வியாபாரம் (retail ) இன்னும் தேக்க நிலையில் உள்ளதால், TCS -ஆல், இந்த காலாண்டு எதிர்பார்த்தளவு செயல்திறனை காண்பிக்க  முடியவில்லை.  இந்த முழுவாண்டில் எட்டு சதவீதம் வளர்ச்சியடைந்தாலே, தாங்கள் சந்தோஷம் அடைவதாக TCS மேலும் அறிவித்த்துள்ளது எம்கே குளோபல் (Emkay Global) பங்குதாரர்கள் TCS பங்குகளை விற்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த பங்குகள் ரூ 1,980 வரை கிழே விழ வாய்ப்புள்ளதாக அது கருதுகிறது. விப்ரோ (Wipro) மற்றொரு ஐடி நிறுவனமான விப்ரோ சற்று சுமாரான காலாண்டையே சந்தித்துள்ளது. விப்ரோவின் (Wipro) நிகர லாபம் இரண்டு சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது, கடந்த காலாண்டில் வங்கி துறையிலிருந்த தேக்க நிலையாலும் மற்றும் கம்பெனியின் பங்குகளை பைபேக் (stock  buyback) செய்த காரணத்தால், கடந்த காலண்டின் நிதி நிலைமை சற்று சரிவை சந்தித்தாக அக்கம்பனி கூறியுள்ளது. பங்கு நிபுணர்களும் இது எதிர்பார்த்த ஒன்றேயாகும் என கூறுகிறார்கள்.