வணக்கம்! நாம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் டிசம்பர் முதல் வாரம் நெருங்கும் நிலையில் வடகிழக்கு பருவமழை சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு என்ன வழங்கியுள்ளது என்பது பற்றிய மதிப்பாய்வும், டிசம்பர் மாதத்திற்க்கான கண்ணோட்டத்தையும் காண்போம்.

 

தமிழகத்தின் மழைப்பற்றாக்குறை -11 சதவீதமாக உள்ளது, இது இந்திய வானிலை ஆய்வுத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட நீண்ட கால சராசரிக்குள்ளாகவே உள்ளது (19 சதவீதம் மற்றும் -19 சதவீதத்திற்குள்). புதுச்சேரியின் மழை பற்றாக்குறை -34 சதவீதமாகவும், சென்னை மாநகரின் மழைப்பற்றாக்குறை -37 சதவிகிதமாகவும் உள்ளது . அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மூன்று சக்திவாய்ந்த சூறாவளிகள் தமிழகத்தை விட்டு விலகிச்சென்றதே வடகிழக்கு பருவமழை பெருமளவில் வீழ்ச்சியடைய காரணம்.

 

டிசம்பர் முதல் வாரத்திலிருந்து கீழைக்காற்று, கிழக்கு-தென்கிழக்கு திசையிலிருந்து மேற்கு-தென்மேற்கு திசை நோக்கி வீசும். இது தென் தமிழகம் மற்றும் இலங்கைக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

 

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் முன்கணிப்பு மற்றும் முன்னறிவிப்பு முறை மாதிரியானது (The National Centres for Environmental Prediction-Global Forecast System model), இலங்கை மற்றும் தென் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் டிசம்பர் மாதத்தின் முதல் பதினைந்து நாட்கள் அதிகப்படியான வானிலை நிகழ்வுகளுக்கு சாத்தியம் எனவும் இது டிசம்பர் 9 முதல் 12 வரை தீவிரமடையக்கூடும் எனவும் கணித்துள்ளது. தென் தீபகற்பம் மற்றும் அரபிக்கடலின் தெற்குப் பகுதிகளும் இதன் மூலம் பயனடையும்.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை (அக்டோபர் 1 முதல் நவம்பர் 26 வரை) நீலகிரி மாவட்டத்தில் 64 சதவீதம் உபரி மழை பெய்துள்ளது, அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் (33 சதவீதம்); கோவை மற்றும் திருநெல்வேலி (தலா 30 சதவீதம்); தூத்துக்குடி (20 சதவீதம்); ஈரோடு (13 சதவீதம்); மற்றும் புதுக்கோட்டை (12 சதவீதம்) ஆகிய மாவட்டங்களும் உபரி மழையால் பயனடைந்துள்ளன.

சென்னை: மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்பு

சென்னையில் காலை முதல் 60 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது, காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் வீசும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாக இருக்கும். பகல் நேரங்களில் ஒரிரு இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். இரவில் மழை வாய்ப்பு 90 சதவீதமாக அதிகரிக்கும். நாளை (வியாழக்கிழமை) காலை இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கலாம்.

புதுச்சேரி: மழைக்கு 50% வாய்ப்பு

புதுச்சேரிக்கு இன்று இரவு 50 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது,  காற்றின் வேகம் மணிக்கு 15 முதல் 30 கீமி வரை சீராக வீசும். வெப்பநிலை அதிகபட்சம் 30 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். பிற்பகலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கலாம். 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும், காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசுமென்பதால் 100 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சேலம்: மழைக்கு 20% வாய்ப்பு

இன்று மழைக்கான வாய்ப்பு குறைவே. வெப்பநிலை அதிகபட்சம் 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.  மணிக்கு 10 முதல் 15 கிமீ வேகத்தில் கிழக்கு-வடக்கு-கீழைக்காற்று வீசும் மாலையில் வானம் மேகமூட்ட்த்துடன் காணப்படும். நாளை (வியாழக்கிழமை) பிற்பகலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கோவை: மழைக்கு 10% வாய்ப்பு

இன்று அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் ஓரளவு மேகமூட்டமான இருக்கும் மழை பெய்ய வாய்ப்பில்லை. மணிக்கு 10 முதல் 15 கி.மீ வேகத்தில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும். மாலை நேரங்களில் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

திருச்சிராப்பள்ளி: மழைக்கு 20% வாய்ப்பு

பனிமூட்டமான காலை, மதியம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். மணிக்கு 15- முதல் 25 கி.மீ வேகத்தில் வடக்கு-கீழைக்காற்று வீசும். மாலை நேரங்களில் 60 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை காலை 80 சதவீதமாக மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

மதுரை: மழைக்கு 30% வாய்ப்பு

இன்று ஓரிரு இடங்களில் மழை எதிர்பார்க்கலாம். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாக இருக்கும். மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் வடக்கு-கீழைக்காற்று வீசும். பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு அதிகம்.

தூத்துக்குடி: மழைக்கு 20% வாய்ப்பு

காலையில் கணிசமான மேகங்கள் இருந்தபோதிலும் இன்று ஒப்பீட்டளவில் வறண்ட நாள். 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மணிக்கு 15- முதல் 30 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசும். இரவில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு 90 சதவீதம்.  நாளை (வியாழக்கிழமை) அதிகாலை ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மொழிபெயர்ப்பு: ஸ்ரீகிருஷ்ணன்

comment COMMENT NOW