ஜீ என்டர்டைன்மெண்ட் என்டர்ப்ரைஸ்ஸ் (Zee Entertainment Enterprises) அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சற்று மோசமான ரிசல்ட்டை அறிவித்துள்ளது. கம்பெனியின் நிகர லாபம் 38% சரிந்து  ரூ 348.60  கோடியாக உள்ளது. முந்தய ஆண்டின் இதே காலாண்டில்,  ஜீ என்டர்டைன்மெண்ட் என்டர்ப்ரைஸ்ஸ் (Zee Entertainment Enterprises) ரூ 562.76 கோடிகள் லாபம் ஈட்டியிருந்த்து.

மொத்த வருவாயும் ரூ 2,119.60 கோடிகளாக ( ரூ 2,252.75 கோடிகள் ) குறைந்துள்ளது. மூன்றாவது காலாண்டு எப்போதும் எங்களுக்கு சிறப்பாக இருக்கும்.   ஆனால் சந்தையின் மந்த நிலைமையினால் இம்முறை விளம்பர வருவாய் மிக வெகுவாக சரிந்துள்ளதாக, நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் புனித் கோயான்கா கூறியுள்ளார்.

comment COMMENT NOW