ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சனிக்கிழமையன்று,  சென்னைக்கு அருகிலுள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது. முதல் நாளே, 200 கார்களை உற்பத்தி  செய்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநில மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதை மட்டுமில்லாமல், 100 சதவீத சமூக தூரத்தையும்  நிறுவனம் பராமரிக்கிறது. உற்பத்தியைத்  தொடங்குவதின் மூலம், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதையும், அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளுக்கு ஆதரவாக இயல்புநிலையை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சில்லறை வர்த்தகத்தில், கார் வாங்குபவர்களைக் கவர சில கவர்ச்சிகரமான நிதி திட்டங்களை நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

comment COMMENT NOW