நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள லாக்டவுனினால், ஐஸ்கிரீம் தொழில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

நிச்சயமற்ற எதிர்காலம், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் குறைவான விற்பனை ஆகியவை ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிதி அழுத்தத்தைக் கொடுத்துள்ளன.

கோடைக்காலம் தொடங்கியுள்ள இந்நிலையில், நாடு எப்பொழுது இயல்பு சூழ்நிலை திரும்புமென்று தெரியாத நிலையில், அவர்களின் துயரங்கள் அதிகரித்துள்ளன.

கோடைக்காலத்தின் நான்கு மாதங்கள் நடக்கின்ற விற்பனைதான் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களின் ஆண்டு விற்பனையில் 40 சதவீதத்திற்கு மேல் இருக்கும். இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் வரை நீடித்த குளிர்காலநிலை காரணமாக விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டது‌. பின்னர் கொரோனா தொற்றுநோய் தொடங்கியது. தற்பொழுது, நிலவும் இச்சூழ்நிலைய பார்க்கும்பொழுது, ஐஸ்கிரீம் துறை, இந்த கோடையில் முழுவதுமாக கரைந்து போகும் நிலையில் உள்ளது.

இரு பெரிய சவால்கள்

ரூபாய்

10,000 கோடி அளவில் புழங்கும் ஐஸ்கிரீம் தொழில், தற்போது இரண்டு பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. முதலில் விற்பனை அதிகமாக நடக்கும் இந்த பருவத்தில் நிலவும் மந்தநிலை, இரண்டாவதாக லாக் டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி அழுத்தம்.

விற்பனை இல்லாததால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் குளிர் களஞ்சியங்களில் குவிந்துள்ளன. வருமானம் இல்லாத நிலையில், தற்போது நிறுவனங்கள் ஊதியங்கள், மின்சார பில்கள், வட்டி செலுத்துதல் மற்றும் நிரந்தர செலவுகள் மட்டுமே செய்கின்றன.

"தற்பொழுது உள்ள நிலையில் ஐஸ்கிரீம் தொழில் பற்றிக் கணிப்பது மிகக்கடினம். இந்த நான்கு மாதங்களில் தான் பெரிய வணிகம் ஏற்படும். இந்த பருவகாலம் பிப்ரவரியில் தொடங்க ஆரம்பித்த நேரத்தில், இந்த நெருக்கடி தொடங்கியது. லாக் டவுன் எப்படி, எப்போது நீங்கும் என்பதும், அதன் பிறகு மக்களின் தேவை எப்படி இருக்கும் என்பதும் எங்களால் கணிக்க முடியவில்லை. நிலைமைகள் எப்படி மாறும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தற்போது, ​​நிச்சயமற்ற நிலை உள்ளது, ” என்று இந்திய ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ் காந்தி பிசினஸ்லைனிடம் தெரிவித்தார்.

குறிப்பாக, திரவ பால் கொள்முதல் அதிகரித்துள்ளது, மொத்தமாக வாங்கும் உணவகம் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டனர். இதனால் திரவ பாலின் பெரும் பகுதியை ஆடை நீக்கிய பால் பவுடருக்கு (SMP) திரும்பிவிட்டது. இதனால் விலைகள் குறையலாம். ஆனால் கோடை பருவத்தேவைகள் இல்லாததால், ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு இதனால் உற்பத்தியில் நன்மை கிடைப்பது மிக அரிது.

கொரியா கம்பெனியான லொட்டே கன்ஃபெக்சனரியின் இந்திய துணை நிறுவனமான ஹவ்மோர் ஐஸ்கிரீம் கம்பெனியின் தலைமை விற்பனை அதிகாரி சேகர் அகர்வால் கூறுகையில், “இந்த கோடையில் நாங்கள் சில திட்டங்கள் வைத்திருந்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக கோவிட் -19 நோய் அவைகளைத் தகர்த்துவிட்டது. வியாபார நோக்கத்தில் ஹவ்மோர் மற்றும் பிற பிராண்டுகளில் தாக்கம் இருக்கும். தாக்கத்தின் தீவிரம் என்ன என்பது எவ்வளவு விரைவாக நாங்கள் மீண்டு வருகிறோம் என்பதைப் பொறுத்தது. ”

அனைத்து முக்கிய ஐஸ்கிரீம் நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள் மார்ச் 25 முதல் மூடப்பட்டு உள்ளதால், நிறுவனங்களுக்கான கோடைக்கால ஆர்வம் சிதைந்துவிட்டது

அமுல் நிறுவனம் சமாளிக்கும்

பெரிய

அளவில் பால் சம்பந்தமான தயாரிப்புகளைக் கொண்ட அமுலும் (Amul) விற்பனைகளில் சரிவைக் கண்டுள்ளது.

விற்பனை கடுமையாகக் குறைந்துள்ளது. இந்த கோடை பருவத்தில் தேவைகள் குறைந்து இருப்பதால் ஐஸ்கிரீம் துறை நிச்சயமாக பாதிப்புக்கு உள்ளாகும். அமுலைப் பொறுத்தவரை, நாங்கள் மற்ற தயாரிப்புகளுக்கு மாறுவதால் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது, ஆனால் ஐஸ்கிரீம்களில் பிரத்தியேகமாகக் செயலில் உள்ளவர்கள் நிச்சயமாகச் சவால்களை எதிர்கொள்வார்கள்” என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (ஜி.சி.எம்.எம்.எஃப்) (அமுல் பிராண்ட் ஐஸ்கிரீம்களை விற்கும்) நிறுவன இயக்குனர் ஆர்.எஸ். சோதி கூறினார்.

(Translated by P Ravindran).

ஏப்ரல் 03, 2020 அன்று வெளியிடப்பட்டது

comment COMMENT NOW