ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெள்ளிக்கிழமையன்று தேர்வுகள்/ ஆட்சேர்ப்பு சோதனைகளின் திருத்தப்பட்ட அட்டவணையை அறிவித்ததுள்ளது.

புதிய அட்டவணையின்படி, இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (பூர்வாங்கமாக) அக்டோபர் 4, 2020, அன்று நடைபெறும். இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (முதன்மை)-2020 ஜனவரி 8, 2021, அன்று நடைபெறும்.

கோவிட்-19 காரணமாக நிலவும் நிலைமையைக் குறித்து மறுஆய்வு செய்ய UPSC ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. லாக் டவுன் மற்றும் அதிகரித்த தளர்வுகள் குறித்து மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களால் அறிவிக்கப்படுவதைக் கவனித்து, ஆணைக்குழு திருத்தப்பட்ட தேர்வுகள்/ஆட்சேர்ப்பு சோதனைகள் வெளியிட முடிவு செய்தது, என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு 2019 இன் மீதமுள்ள வேட்பாளர்களுக்கான ஆளுமை சோதனைகளை ஜூலை 20 முதல் மீண்டும் தொடங்க, ஆணையம் முடிவு செய்துள்ளது இந்த தகவல்கள் வேட்பாளர்களுக்கு தனித்தனியாகத் தெரிவிக்கப்படும்.

முன்னதாக, அக்டோபர் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், அமலாக்க அதிகாரி/ கணக்கு அலுவலர் (EO / AO) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு சோதனைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதி UPSC இணையதளத்தில் 2021 ஆண்டிற்கான தேர்வுகள்/ஆட்சேர்ப்பு சோதனைகள் குறித்துத் தேர்வுகள் அட்டவணைகள் வெளியிடும் நேரத்தில் வெளியிடப்படும்.

முன்னதாக, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டின் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுக்கான ஜூன் 5ல் முடிவு செய்யப்படுமென்று அறிவித்திருந்தது.

மே 31 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இந்த சோதனை லாக் டவுன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

comment COMMENT NOW