மார்ச் 26 அன்று, நாடு தழுவிய லாக் டவுன் அறிவிக்கப்பட்ட இரண்டே நாட்களில், பலதொழில் முனைபவரும், பிக்பாஸ்கெட், போர்டி மெடிக்கல் மற்றும் ஹங்கர்பாக்ஸின் உரிமையாளர் கே கணேஷ்; ஜே.எல்.எல் இந்தியாவின் நிர்வாக இயக்குனர், ஜக்கி மார்வாஹா; மற்றும் பிரெஸ்டீஜ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, வெங்கட் கே நாராயணா, ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, வருமான ஆதாரத்தை இழந்து, ஆனால் குடும்பங்களுக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள மனிதர்களுக்கு உதவ முன்வந்தனர்.

இந்த உன்னத ‌நோக்கத்தின் விளைவு: ‘ஃபீட் மை சிட்டி’, என்ற சேவை மையம்.

"புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு புதிய சமைத்த உணவை வழங்கலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்" என்று கணேஷ் கூறினார்.

இது மார்ச் 27 அன்று பெங்களூரில் 500 நபர்களுக்கான உணவுகளுடன் தொடங்கியது. ஆனால், அதன்பின்னர் நாடு முழுவதும், மேலும் நான்கு நகர - ஹைதராபாத், மும்பை, நொய்டா மற்றும் சென்னை - பகுதிகளுக்கும் விரிவடைந்தது. இதுவரை மொத்தம் 25 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு உணவை வழங்கியுள்ளோம்.

தன்னம்பிக்கையின் வெற்றி

ஆரம்பத்தில் இது ஒரு சவாலாக இருந்தது, என கணேஷ் கூறினார். "ஆனால் எங்கள் கொள்கையின் பலம் அனைத்தையும் கடக்க வைத்தது; அரசாங்கம் முதல் காவல்துறை வரை, அனைவரும் இச்சேவைக்கு எந்த இடையூறுகளும் வரக்கூடாது என்று முயற்சிகளை மேற்கொண்டனர்," என அவர் மேலும் கூறினார்.

நன்கொடையாளர்களுக்கு நன்றி

இந்த அணி, இப்போது ஐந்து நகரங்களில் 120க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூலம், நன்கொடைகள், சமூக ஊடக மேலாண்மை, விநியோக-சங்கிலி லாஜிஸ்டிக்ஸ் மூலம் கடைசி மைல் வரை விநியோகத்தை மேற்க்கொண்டுள்ளது. இதுவரை 49,400க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களால் உதவியினால் இந்த இயக்கம் செலவினங்களை மேற்கொள்கின்றன.

லாக் டவுன் சமயத்தில், ​​நன்கொடைகளை உயர்த்துவது முதல், ஒவ்வொரு நாளும் லட்சம் தரமான உணவைச் சமைப்பது, சமூக தூரத்தைப் பராமரித்தல், சமையல்காரர்களுக்கான அனுமதிகள் மற்றும் பாஸ்கள் வாங்குவது, சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்குதல், தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உணவுகளை வழங்குதல் போன்ற அனைத்தையும் ஒழுங்கு முறையில் செய்வதற்காக ஒரு செயல்முறையைக் குழு மேற்கொண்டது.

"செயல்முறைகள் சரியாக இருந்த காரணத்தால் அதை அப்படியே விரைவாக , மற்ற நான்கு நகரங்களில் லாக் டவுன் அறிவித்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தினோம்," என்று கணேஷ் கூறினார்." இந்த நகரங்களில் ஒவ்வொன்றிலும் உள்ளூர் குழுக்கள் இருந்ததால், பொறுப்புகளைப் பகிர்ந்து அளிப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

.

கே.வி.என் அறக்கட்டளைக் கீழ் இந்த முயற்சியைத் தொடங்கிய இவர்கள், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலுள்ள நிறுவனங்களுக்கு உணவுகளை வழங்கும் ஹங்கர்பாக்ஸ் (HungerBox) என்ற நிறுவனத்தில் மூலம் உணவு வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கவனித்துக்கொள்கிறது.

"ஃபீட் மை சிட்டியின் ஸ்தாபக குழு, வேலையிழந்த மக்கள், புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவைப் பல இடங்களுக்கு நாங்கள் விநியோகிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்," என ஹங்கர்பாக்ஸின் இணை நிறுவனர் மற்றும் சிஓஓ உத்தம்குமார் கூறினார். "இதை ஆனால் ஒரு வரப் பிரசாதமாக எடுத்துக்கொண்டோம். எங்களிடமுள்ள பெரிய சமையலறைகள் மூலம் அதிக உணவை, மானிய விலையில் வழங்க முடியும். நாங்கள் இந்த சேவைக்குள் இப்படித்தான் வந்தோம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

பல்வேறு உணவு வகைகளைக் கொண்டுவர, ஏற்கனவே வழங்கிய உணவை 10 நாட்களில் அதை மீண்டும் செய்யாமல் இருக்கக் குழு கவனித்துக்கொள்கிறது. வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதின் மூலம் உணவு குறைந்தது சில மணிநேரங்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கப் பார்த்துக்கொள்கிறோம்.

"சத்தான உணவு வழங்குவதில் கவனம் எடுத்துக் கொள்கிறோம்," என்று சிஃபி மற்றும் சென்னை ஏஞ்சல்ஸின் இணை நிறுவனரும், மேலும் ஃபீட்மை சென்னை நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவரான ஆர். ராமராஜ் கூறினார். புலம்பெயர்ந்தோர் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு 15 மண்டலங்கள் மற்றும் 92 மையங்களில் உணவு வழுங்குகிறார்கள். "எனவே, செயல்முறையில், சோதனை மற்றும் தரத்தைப் பற்றி அறிய, இந்த மையங்களுக்கும், சமையலறைகளுக்கும் எங்களால் செல்ல முடியாது என்பதால், எங்களில் உள்ள ஒரு முக்கிய குழு உறுப்பினர்களுக்கு (ஒன்பது தொழில்முனைவோர் குழு ஒன்றாக இணைந்து சென்னையில் இதைச் செயல்படுத்துகிறார்கள்) உணவை வழங்குவோம். இதை ஒவ்வொரு நாளும் சுழற்சி மூலம் செய்கிறோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

சேவையை தொடர விருப்பம்

நன்கொடையாளர்கள், தொழில்முனைவோர், கார்ப்பரேட் சமையலறைகள் மற்றும் தன்னார்வலர்களின் நெட்வொர்க் மூலம், ஒவ்வொரு நகரத்திலும் லாக் டவுன் காலத்தில் தனித்தனியாக பொட்டலம் செய்யப்பட்ட மதிய உணவுகள் மற்றும் இரவு உணவுகளைத் தேவைப்படுபவர்களுக்கு வழங்கி வருகிறோம் . இருப்பினும், இதை மே 3 ஆம் தேதி நிறுத்தத் திட்டமிடவில்லை.

"நாங்கள் மே 3க்கு பிறகும் இதைத் தொடர வேண்டும்," என்கிறார் கணேஷ். "நாங்கள் மிகவும் பெரிய அளவிலிருந்து வெளியேறி , சிறிய அளவில் தொடருவோம். எங்களுக்கு போதுமான நிதி இல்லை, லாக் டவுன் நீடித்த பிறகு ஏற்படும் நிலைமையை சமாளிக்க மேலும் நிதி தேவைப்படும்."

Translated by P Ravindran

comment COMMENT NOW