ஆட்டோலைன் இண்டஸ்ட்ரீஸ்: நிதி திரட்ட ஆலோசனை
ஆட்டோலைன் இண்டஸ்ட்ரீஸ் (AUTOLINE INDUSTRIES) இயக்குனர்கள் குழு இன்று கூடி கம்பெனிக்காக நிதி திரட்டும் வழியை ஆலோசனை செய்கிறார்கள். சிலருக்கு முன்னுரிமை பங்குகள் (preferential shares) ஒதுக்கவும் மற்றும் கடன்பெற்ற இரண்டு நிதி நிறுவனங்களுடன் கடன் உடன்பாட்டை சீரமைக்கவும் இயக்குனர்கள் குழு கூடுகிறது. மேலும், கடன் தந்தவர்களுக்கு, தற்போதைய கடனின் ஒரு பகுதியை பங்குகளாக மாற்றக் கூடிய கடன் பத்திரமாகவோ (convertible debentures) அல்லது மாற்றமுடியாத கடன் பத்திரமாகவோ (non-convertible debentures) முன்னுரிமை அடிப்படையில் (preferential basis) அவர்களுக்கு புதிய நிபந்தனையுடன் வழங்கவும் இந்த குழு ஆலோசானை செய்யும். முதலீட்டாளர்கள் ஆட்டோலைன் இண்டஸ்ட்ரீஸின் இந்த முடிவுகளை உன்னிப்பாக கவனிப்பார்கள்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் கம்பெனிகள்
சுமார் 250 கம்பெனிகள் தங்களது டிசம்பர் மாதத்தில் முடிவு காண காலாண்டு வரவு-செலவு கணக்குகளை இன்று சமர்ப்பிக்க உள்ளனர். அவற்றுள் சில முக்கியமான கம்பெனிகள் Adani Transmission, Allcargo Logistics, Apollo Hospitals, BPCL, Bombay Burmah, Century Plyboards, Dalmia Bharat, Electrosteel Castings, Future Retail, GMDC, GMR Infra, Gillette, Godrej Ind, Hindustan Aeronautics, Hindustan Copper, Hindustan Oil Exp, Hubtown, Ind-Swift, IFCI, Gammon Infrastructure, Igarashi Motors, ITDC, JP Associates, Lemon Tree Hotels McLeod Russel, Mercator, Page Industries, PC Jeweller, Patel Integrated Logistics, Revathi Equipment Skipper, SJVN, Shree Renuka Sugars, Suven Life Sciences, Sumitomo Chem, Tilaknagar Industries, TBZ, Uflex, Vodafone Idea and Wheels India. இந்த கம்பெனிகளின் பங்குகள் காலாண்டு முடிவுக்கு ஏற்றாற்போல் இன்று பங்கு சந்தையில் ஏற்றம்-இறக்கம் காணும்.
Comments
Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.
We have migrated to a new commenting platform. If you are already a registered user of TheHindu Businessline and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.