வணக்கம் வாசகர்களே!, அழகான மழை மிகுந்த காலை. சென்னை மற்றும் தமிழ்நாடு  வடகிழக்கு பருவமழையால் நவம்பர் கடைசி நாளில் பாதிப்புக்குள்ளாவதாக தெரிகிறது!  கனமழை எதிரொலியால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தப் பகுதியானது, தென் தீபகற்பத்தின் வழியே கீழைக்காற்றினை ஈர்ப்பதே இந்த மழைக்கான காரணம்.  இந்த குறைந்த காற்றழுத்த பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடையும் வாய்ப்புள்ளது. இதே காற்றழுத்த பகுதி தமிழகக்கரை அருகில் அமைந்திருந்தால் நிலப்பரப்பினை நெருங்கையில் வலுவிழந்திருக்கும். தற்போது இந்த காற்றழுத்த பகுதி அமைந்துள்ள இடமானது கீழைக்காற்றினை தென் தீபகற்பம் நோக்கி இழுப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.

இன்று காலை, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகல் நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களை உள்ளடக்கிய இடங்களில் காலை 8 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. தெற்கே, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், நெய்வேலி, விருதாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்த்து.

வங்கக்கடலில் சீன டிராகன் வடிவில் அதிராமபட்டினம் முதல் கடலூர் வரையிலான கடலோரப் பகுதியை மையமாகக் கொண்டு இடியுடன் கூடிய மழை மேகங்கள் வரிசை கட்டி நின்றன. இது வடகிழக்கு பருவமழையின் உண்மை முகத்தைக் குறிக்கிறது.

காலை 8 மணியளவில், பட்டுகோட்டை, வேளாங்கண்ணி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, மாமல்லபுரம், ராமாபுரம், சென்னை ஆகிய இடங்களிலிருந்து இடியுடன் கூடிய மழை பெய்து தென்கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்தது.

மழை மேகங்களின் டிராகன் போன்ற உருவாக்கம் சிறு சிறு துண்டுகளாக சிதறி கடற்கரை நோக்கிச்சென்று நிலவும் காற்றின் திசையைப் பொறுத்து பல்வேறு இடங்களில் மழையாக பொழியும்.

சென்னை: பகலில் 90% மழை பெய்ய வாய்ப்பு, இரவில் 100%

சென்னை வானிலை மையம் மற்றும் சர்வதேச மாதிரிகள் சனிக்கிழமையன்று வடகிழக்கு-கீழைக்காற்று வீசும் என ஒரே மாதிரியான கணிப்பை தருகின்றன. இடியுடன் கூடிய மழை பெய்ய பகல் நேரத்தில் 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இரவு நேரங்களில் 100 சதவீதம் மழைக்கான வாய்ப்பு உண்டு. வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாக இருக்கும். கிழக்கு-வடக்கு கீழைக்காற்று மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் வீசும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA / VOMM)

weather-2

Commuters are adviced to be more cautious on wet roads

 

விமான நிலைய பகுதிகளில் மழை பெய்த்து, வடக்கு கீழைக்காற்று மணிக்கு 14 கிமீ. வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ். விமானங்கள் வருகையில் சராசரியாக ஏழு நிமிடங்கள் தாமதமும், புறப்படுவதில் 18 நிமிட தாமதமும் காணப்பட்டது.

புதுச்சேரி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் காலையில் மேகமூட்டமான வானிலையும், மாலை நேரங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாகவும் இருக்கும்.

புதுடெல்லியின் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை கண்ணோட்டம்: தென் தீபகற்பத்தில் கீழை அலை நிலைகளால் பரவலாக அதிக மழை பெய்யும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிகவும் கனமான மழைப்பொழிவு இருக்கும் என்றும், இன்று (சனிக்கிழமை) முதல் திங்கள் வரை கேரளா, தெற்கு கர்நாடக உள்மாவட்டங்கள், கடலோர ஆந்திரா மற்றும் லட்சத்தீவுகளில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக, காட்டுமன்னார்கோயில் மற்றும் கீழ் அணைக்கட்டில் (தலா 12 செ.மீ); மயிலாடுதுறை, ஆனைக்காரன்சத்திரம் மற்றும் லால்பேட்டை (தலா 8 செ.மீ); ஜெயங்கொண்டம் மற்றும் மணல்மேடு (தலா 7 செ.மீ). மழையும் பதிவானது.

 

மொழிபெயர்ப்பு: ஸ்ரீகிருஷ்ணன்