சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதன் தாக்கம் இந்திய மருந்துத்துறையில் எவ்வாறு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என அரசாங்கம் மதிப்பீடு செய்து வருகிறது.

முன்னணி பார்மா நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், வர்த்தக அமைச்சின் ஒரு பிரிவான மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்  (Pharmexcil-ஃபார்மெக்ஸில்), அவற்றின் மூலப்பொருள் (Active Pharmeutical Ingredient-ஏபிஐக்கள்) மற்றும் முக்கிய தொடக்க பொருள் / சீனாவிலிருந்து இடைநிலை இறக்குமதி செய்த விவரங்களை அளிக்குமாறு கூறியுள்ளது.

"கொரோனா வைரஸ் சீனாவில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது; ஏபிஐகளை உற்பத்தி செய்யும் தொழில்துறை அலகுகள் சீனாவின் பல பகுதிகளில் அவற்றின் உற்பத்தியை முடக்கியுள்ளன," என்று மருந்து தயாரிப்பாளர்களுக்கான தகவல்தொடர்புகளில் பார்மெக்ஸிலின் இயக்குநர் உதய் பாஸ்கர் கூறினார்.

"இதன் விளைவாக, ஏபிஐ விநியோகங்களை மீட்டெடுப்பது குறித்து சீனாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வரும் வாரங்களில் இந்தியாவுக்கான விநியோகம் பாதிக்கப்படக்கூடும்," என்று அவர் மேலும் கூறினார்.

ஃபார்மெக்ஸில் தரவுகளின்படி, இந்தியா சுமார் $2.5- பில்லியன் மதிப்புள்ள ஏபிஐக்கள் / மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

மருந்துத் துறையில் வழங்கல் பற்றாக்குறையின் தாக்கத்தையும், நீண்ட காலத்திற்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதையும் புரிந்து கொள்ள மருந்துத்துறை பங்குதாரர்களுடன் கூட்டங்களை கூட்டியுள்ளது.

தரவு அட்டவணைப்படுத்தப்பட்டவுடன், அரசாங்கம் நிலைமையை மிகச் சிறந்த முறையில் நிவர்த்தி செய்யும். மேலும், தொழில்துறையும் மாற்று வழிகளை நோக்கிச் செல்லத் தயாராக இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

சுமார் 20 மருந்து தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அவர்களது உற்பத்தி மற்றும் இறக்குமதி தரவைப் பகிர்ந்துள்ளனர் என அறியப்படுகிறது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் பிசினஸ்லைனிடம் பல நிறுவனங்களின் மூலப்பொருள் சரக்குகள் மார்ச் இறுதி வரை நீடிக்கும் என்று கூறினார்.

"ஆனால் இப்போது சீனாவிலிருந்து புதிய இறக்குமதிகள் மூன்று வாரங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளதால், மருந்து தயாரிப்பாளர்கள் மிக விரைவில் பற்றாக்குறையை நோக்கி செல்கின்றனர்," என்று அவர் கூறினார்.

அதேசமயம், வைரஸ் ஏதேனும் பரவினால் நாட்டின் தயார்நிலையை அரசாங்கம் கண்காணித்து வருகிறது.

“பொது சுகாதாரத்தயார்நிலையின் ஒரு பகுதியாக, இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ஏபிஐ உள்ளிட்ட மருந்துகளின் உற்பத்தி / ஏற்றுமதி குறித்து அரசாங்கம் ஒரு பதிவை வைத்திருக்கிறது. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தரவுகளும் சேகரிக்கப்பட்டு வருகிறன,” என்று ஒரு அதிகாரி கூறினார்.

Translated by Gayathri G

comment COMMENT NOW