செய்திகள்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இருப்பை பற்றிய பயம் தேவையில்லை: மத்திய அரசு

Maitri Porecha New Delhi | Updated on April 12, 2020 Published on April 12, 2020

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதிக்கு அனுமதித்தாலும் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான இருப்பு உள்ளது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த மருந்தின் கையிருப்பு பற்றிய தவறான தகவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கோவிட் -19ன் நோயினால் அதிக ஆபத்துகள் உள்ளவர்களுக்கு கையாளும் ஒரு தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

"ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தேவைகள் அதிகமுள்ள இந்த நேரத்தில், பல நாடுகள் தங்கள் தேவைகளுக்குக் கோரிக்கையை விடுத்துள்ளன. எனவே உள்நாட்டுக்குத் தேவையான இருப்பை கருத்தில் கொண்டு, ஏற்றுமதி நோக்கங்களுக்காக சில உபரி கையிருப்புகளை விடுவிக்க அமைச்சர்கள் குழு முடிவு எடுத்தது, ”என்று வெளி விவகார அமைச்சகத்தின் அமைச்சின் கூடுதல் செயலாளர் தம்மி ரவி கூறினார்.

அதிக உற்பத்தி

கோவிட் -19 நோயாளிகளைக் கையாளும் சுகாதார ஊழியர்களுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளைப் பார்த்துக் கொள்ளும் சுகாதார பணியாளர்களுக்கு ஒரு கோடி மாத்திரைகள் தேவைப்படும் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. கூடுதலாக 1.6 கோடி மாத்திரைகள் இந்த மாத இறுதிக்குள் தேவைப்படலாமென்று ஒரு கணிப்பில் தெரிகிறது என்று சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

"நம் தேவைக்கேற்ப 3.28 கோடி மாத்திரைகள் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு வைத்துள்ளோம். மருத்துவர்களின் பரிந்துரைகளைப் பூர்த்தி செய்யத் தனியார்த் துறைக்கு இரண்டு கோடி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு அல்லது மூன்று கோடி மாத்திரைகள் கூடுதலாக வழங்க உடன்படிக்கையும் செய்யப்பட்டுள்ளது " என்று அகர்வால் கூறினார்.

அகர்வால் பரவலான சமூக பரவுதல் ஏற்படவில்லை என்று கூறினார் (நிலை 3). முன்னதாக, இந்தியா உள்ளூர் உத்திகளை வைத்து சமூக பரவலைக் கையாண்டு வருவதாகவும், இது தொற்றுநோயின் 2 மற்றும் 3 ஆம் கட்டங்களுக்கு இடையில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், கடுமையான சுவாச நோய்த்தொற்று நோயாளிகள் 1.8 சதவீதம் பேர், வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகங்களிலிருந்து வந்த முடிவின்படி நேர்மறையானவர்கள் என்று கூறப்படுகிறது, அவை முன்னதாக ஆரம்பக்கட்ட நிலையில் உள்ள கோவிட் -19 பகுதிகளில் எடுக்கப்பட்ட நோயாளிகளின் என்று தெரிய வந்தது. சில நேர்மறையான நோயாளிகளின் என்று அறியப்பட்டவர்கள், பயணம் அல்லது தொடர்பு மூலம் வந்ததா என்பதற்குச் சான்றுகள் இல்லை என்றும் இவற்றை மேலும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆய்வு கூறுகிறது, இதன் மூலம் அவற்றின் தொடர் காரணத்தை நாம் கண்டுபிடிக்க முடியும். சில பகுதிகளில், எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ​​அந்த பகுதிகளில் தொடர் பரிசோதனைகள் சரியாகக் கையாளவில்லை.

எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம், மேலும் இந்த பரவும் சங்கிலியை உடைக்க சமூக தொலைதூர விதிமுறைகளையும் கவனமாகப் பின்பற்ற வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.

ரத்ததானம் தவிர்க்கவும்

இருப்பினும், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய இரத்தமற்ற கவுன்சில் (NBTC) நேர்மறையைப் பரிசோதனைக்கு உட்பட்டவர்கள்,பயணம் மேற்கொண்டவர்கள் அல்லது தொடர்பு கொண்டவர்கள் 28 நாட்களுக்கு இரத்தம் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர், இது அவர்களிடமிருந்து வைரஸ் அகற்றப்பட்டதை உறுதிசெய்யப்படும் வரை அவர்கள் கடைப்பிடிக்கவேண்டும். அந்த நபர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் செய்யலாம். ஆனால் வெகுஜன முகாம்களுக்குச் செல்வதைத் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் என்.பி.டி.சி கோரியுள்ளது

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி ஒரு நாளில் 16,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, மேலும் பாதிக்கப் பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அறிகுறி நிகழ்வுகளையும் சோதிக்க உத்திகளைப் பரவலாக்குகிறோம் என்று அவர் கூறினார். ஏப்ரல் 9 ஆம் தேதி நிலவரப்படி 20,473 வெளிநாட்டுக் குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தம்மி ரவி தெரிவித்தார்.

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பற்றி, லாக் டவுன் நீக்கும் வரையில் அவர்கள் திரும்புவதை எவ்வாறு கையாள்வது என்பதற்கு வெளிவிவாகத்துறை அமைச்சகம் (MEA) திட்டவட்டமான செயல்வடிவத்தை தெரிவிக்கவில்லை என்றார்.

 

Translated by P Ravindran

Follow us on Telegram, Facebook, Twitter, Instagram, YouTube and Linkedin. You can also download our Android App or IOS App.

Published on April 12, 2020
This article is closed for comments.
Please Email the Editor